30.1 C
Chennai
Tuesday, Jun 2, 2026
தலைமுடி சிகிச்சை

முடியின் அடர்த்தி குறைவதை தடுக்க வேண்டுமா? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

இன்றைய காலக்கட்டத்தின் அதிக பெண்கள் தங்கள் முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை போல கூந்தலுக்கு பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

காற்று மாசுபாடு, அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் நல்ல தரமற்ற தண்ணீரை தண்ணீரை பயன்படுத்துதல் போன்றவற்றால் முடி அதிகம் கொட்டுவதோடு, முடியின் அடர்த்தியும் குறைந்து கொண்டே வருகிறது.

இதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், புரோட்டீன் குறைபாடு போன்றவையும் காரணங்களாகும்.

முடியின் அடர்த்தி குறைவதைத் தடுப்பதற்கு புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது முக்கியமானதாகும்.

அதுமட்டுமின்றி ஒருசில எளிய இயற்கை வழிகளையும் பின்பற்றி வந்தால், நிச்சயம் முடியின் அடர்த்தி குறைவதை தடுக்க முடியும்.

அந்தவகையில் தற்போது முடியின் அடர்த்தியினை குறையாமல் தடுக்கும் சில இயற்கை வழிகளை இங்கு பார்ப்போம்.

 

  • கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், முடி உதிர்வது நின்று முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடியின் அடர்த்தியும் அதிகரிக்கும். வேண்டுமெனில் கற்றாழை ஜூஸை குடித்தும் வரலாம்.
  • வாரம் ஒருமுறை இரவில் படுக்கும் போது தேங்காய் எண்ணெயுடன், சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கரப்பில் படும்படி மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.
  • வாரம் 2 முறை விளக்கெண்ணெயைக் கொண்டு நன்கு முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.
  • வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை வாரம் ஒருமுறை தலைக்கு தடவி ஊற வைத்து அலசி வந்தால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, அடர்த்தியும் அதிகரிக்கும்.
  • ஆலிவ் ஆயில் கூட முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். அதற்கு ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், முடியின் மென்மை அதிகரித்து, முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
  • கேரட் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அவை மயிர்கால்களை வலிமையாக்கி, முடி உதிர்வதைத் தடுத்து, முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.
  • இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற கணக்கில் வெங்காய சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், முடி அடர்த்தி குறைவதைத் தடுக்கலாம்.
  • வாரம் 2 முறை தலைக்கு ஹென்னா போட்டு வந்தால், அதில் உள்ள சீகைக்காய், பூந்திக் கொட்டை போன்றவை முடியின் அடர்த்தி குறைவதைத் தடுக்கும்.

Related posts

ஆண்களுக்கு 20 வயதிலேயே தலை சொட்டையாவதற்கான காரணங்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான கூந்தலுக்கு இயற்கைக் குறிப்புகள்

nathan

வாரம் ஒருமுறை தலைக்கு கறிவேப்பிலை வெந்தயம் மாஸ்க் போட்டால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

நரைமுடியை இயற்கை முறையில் கருமையாக்க இத அடிக்கடி யூஸ் பண்ணுங்க…

nathan

தேயிலை மர எண்ணெயை முடி உதிர்தலுக்கு உபயோகப்படுத்தியிருக்கிறீர்களா? இப்டி ட்ரை பண்ணுங்க!!

nathan

முடி உதிர்வது குறைந்து முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் நல்ல பளபளப்பாகவும் மாற இதை செய்யுங்க!…

nathan

உங்க முடியின் அடர்த்தி குறைகிறதா

nathan

உங்க கூந்தல் வளர என்ன செய்யலாம்?அப்ப இத படிங்க!

nathan

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க வேண்டுமா? பாண் பயன்படுத்துங்கள் பெண்களே.

nathan