தலைமுடி சிகிச்சை

இயற்கை மருத்துவ குறிப்புகள்….! முடி உதிர்வதை தடுத்து வளர செய்யும்

இன்றைகால காலத்தில் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, இருவருக்கும் இருக்கின்ற ஒரே பிரச்சனை முடி உதிரும் பிரச்சனை தான். தலை முடி உதிர்வதற்கு முக்கிய காரணம்.

மன அழுத்தம், முறையற்ற உணவு முறை, ஒழுங்கற்ற பராமரிப்பு, உடல் உஷ்ணம் என பல காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். இருப்பினும் தலை முடியை ஒழுங்காக பராமரித்து வந்தாலே முடி உதிர்வு பிரச்சனை குறைந்து முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

தேவையான மூலிகைகள்: தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர், மருதாணி – 10 கிராம், செம்பருத்து – 10 கிராம், கறிவேப்பிலை – 10 கிராம், கரிசலாங்கண்ணி – 10 கிராம், வெட்டிவேர் – 5 கிராம், சோற்றுக்கற்றாழை – 50 கிராம்.

செய்முறை: மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, ஆவாரம் பூ, கரிசலாங்கண்ணி, சோற்றுக் கற்றாழை இவற்றை ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் 1 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை ஊற்றி, எண்ணெய் சிறிது சூடேறியதும் அரைத்து வைத்த மூலிகைலளை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு வெட்டிவேர் சேர்த்து எண்னெய் பொன்னிறமாக மாறும் வரை கொதிக்க வைத்து இறக்கி ஆறவைத்து பிறுகு வடிகட்டி 2 நாட்களுக்கு பிறகு பயன்படுத்தவும்.

பயன்கள்: தினமும் தலைக்கு தேய்த்துவர தலைமுடி உதிர்வதை தடுக்கும். முடி நன்றாக செழித்து வளரும். கண் எரிச்சல் தீரும். வாரம் ஒருமுறை தேய்த்து குளிக்க உடல் சூட்டை தணிக்கும். இரவு பாதங்களில் தேய்க்க தூக்கம் நன்றாக வரும்.

Related posts

அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெற மேற்கொள்ள வேண்டியவைகள்!!!

nathan

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க.

nathan

உங்களுக்கு தெரியுமா பீர் குடிக்கு மட்டுமல்ல, முடிக்கும் தான்!!!

nathan

குளிர்காலத்தில் ஏற்படும் தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்கும் உணவுகள்!

nathan

முடி உதிர்வதை தடுக்க குறிப்பு | Tamil Beauty Tips

nathan

சூப்பர் டிப்ஸ்! பொடுகைப் போக்கி முடி வளர்ச்சியை வேகமாகத் துண்டும் முள்ளங்கி…

nathan

எப்போதும் கூந்தல் மிருதுவாக இருக்க வேண்டுமா? இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை

nathan

பொடுகு தொல்லையை போக்கும் வழிமுறைகள்…!

nathan