30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
teethtartar remedies
மருத்துவ குறிப்பு

பல் சொத்தை வராமல் தடுக்க இதோ எளிய நிவாரணம்!

பல் பாதிப்புகளில் முதலானது பல் சொத்தை. இது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் இனிப்புகள் சாப்பிடுவதுதான்.

பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றது. இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கின்றது. இதனால்தான் பற்களில் சொத்தை ஏற்படுகிறது.

சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு நீண்ட நாட்கள் அவை பற்களின் இடுக்குகளிலேயே இருப்பதால் பாக்டீரியாக்கள் பற்களை அரிக்க ஆரம்பிக்கின்றன.

அவ்வாறு அரிக்க ஆரம்பிக்கும் போதுதான் பற்களில் துவாரங்கள் ஏற்பட்டு பின் அதனுள் நாம் உண்ணும் உணவுகள் சிக்கிக் கொண்டு வாயில் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

குழந்தைகள் இரவில் புட்டிப்பாலைக் குடித்தபடியே உறங்கிவிடுவதால் அப்போது பற்களின் மேல் பால் தங்கி சொத்தையை ஏற்படுத்துகிறது. இதனால்தான் குழந்தைகளுக்கு அதிக அளவில் சொத்தை பற்களில் ஏற்படுகிறது.unnamed 1

சொத்தை பற்களில் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம் என்பதை பார்ப்போம்:

 

 

  • பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் காலையிலும், தூங்கப் போகும் முன்பும் இரண்டு முறை பற்களை துலக்க வேண்டும்.
  • பல் தேய்த்தபின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
  • இரவில் படுக்கச் செல்லும் முன்பு உப்புத் தண்ணீரால் வாயை கொப்பளிப்பது மிகவும் நல்லது.
  • நார்ச்சத்து கால்சியம் போன்றவை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
  • சாப்பிட்டபின் வாயை நல்ல தண்ணீரில் நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
  • ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் பல் சொத்தை பாதிப்பு ஆழமாகி வேரையும் பாதித்து விடும். இதனால், பல் வலி ஏற்பட்டு நாளடைவில் பல்லை அகற்றும் நிலை உருவாகும்.
  • மேலோட்டமாக எனாமல் பாதிப்பு இருந்தால் பாதிப்பு பகுதியை சுத்தம் செய்துவிட்டு நிரந்தரமாக பல் ஓட்டையை அடைக்கலாம். ஆழமாக ஓட்டை இருந்தால் தற்காலிக அடைப்பு என்ற முறையில் சிமென்ட்டால் அடைப்பதால் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
  • திராட்சை, வெள்ளரி, கேரட், தானியங்கள், உலர் திராட்சைகள், கடல் உணவுகள், இனிப்பில்லாத சூயிங் கம், புதினா இலைகள் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
  • சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • மாதம் ஒரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
  • பல்லின் தன்மைக்கு தகுந்த பிரஷ்ஷை தேர்வு செய்வதும் அவசியம்.
  • பல் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும்.
  • குளிர்ச்சியான பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்.
  • மவுத் வாஷ் பயன்படுத்தியும் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
  • இனிப்புகள் சாப்பிட்டால் கண்டிப்பாக பல்லை சுத்தம் செய்வது அவசியம்.
  • பிரச்னையே இல்லாவிட்டாலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பித்து பல் ஆரோக்யத்தை பாதுகாக்க வேண்டும்.
  • கால்சியம் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

Related posts

வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

nathan

மனிதனின் ஒரு கால் மட்டும் உயரம் குறைந்து இருப்பதற்கு காரணம்

nathan

சந்தன மரங்கள் அதிகம் பயன் தருபவை……

sangika

ஃபீல் ஃப்ரெஷ்! டீடாக்ஸ் சிகிச்சைகள் கம்ப்ளீட் கைடு!!

nathan

ஆட்டிசம் பாதிப்பு இருந்தால் எளிதில் உணர

nathan

தினமும் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களை விட ஆண்களுக்கு கணைய புற்றுநோய் அதிகம் ஏற்பட காரணங்கள்

nathan

இதய நலம் காக்க எளிய வழிமுறைகள்

nathan

கழுத்துவலியா..? கவலைப்படாதீங்க..!

nathan