30.4 C
Chennai
Thursday, May 29, 2025
3 vitminc
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க… வைட்டமின் Vs புரோட்டீன் – இவற்றிற்கு இடையேயான வித்தியாசங்கள் என்ன?

நாம் உண்ணும் உணவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை நமக்கு அத்தியாவசியமான ஒன்றும் கூட. ஏனெனில் இதில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் தான் நம் உடலை சீராக வைக்க உதவுகிறது. பொதுவாக உணவில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

இந்த சத்துக்களில் வைட்டமின்களும் புரோட்டீன்களும் வேறுபட்டவை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் இரண்டும் நம் உடலில் வேறுபட்ட பயன்பாட்டிற்கு பயன்படுகிறது. வைட்டமின்கள் நமது உடலின் மெட்டாபாலிச வேலைகள் சரியாக இயங்க உதவுகிறது. ஆனால் புரோட்டீன் நமது உடலில் உள்ள செல்கள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒன்றாக உள்ளது. இப்படி இவற்றிற்கு இடையேயான இன்னும் சில விஷயங்களை நாம் அறிந்து கொள்வோம்.

3 vitminc

விளைவுகள்

எந்தவொரு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் அவை நம்மை உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தள்ளி விடும். எனவே நோய்களை தடுக்க நீங்கள் ஆசைப்பட்டால் தினமும் ஒரு சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதையும் மீறி உங்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை இருந்தால் ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

சரி வாங்க வைட்டமின் மற்றும் புரோட்டீன் அப்படின்னா என்ன, அவை நமக்கு எப்படி பயன்படுகிறது என்பதை கீழே காண்போம்.

வைட்டமின்கள்

வைட்டமின்கள் ஒரு நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகும். நமது உடலின் சீரான வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வைட்டமின்கள் தேவை. கிட்டத்தட்ட 13 வகையான வைட்டமின்கள் காணப்படுகின்றன. இதில் நமது உடல் அதை எப்படி உறிஞ்சுகிறது என்பதை பொருத்து நீரில் கரையக்கூடிய மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்கள் என்று இரண்டு வகைப்படுகின்றன.

நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின்கள் சி மற்றும் பி வைட்டமின்கள் நியாசின், தியாமின், ரைபோஃப்ளேவின், வைட்டமின் பி 6, வைட்டமின் பி -12, ஃபோலேட், பயோட்டின் மற்றும் பாந்தோத்தேனிக் அமிலம் போன்றவை ஆகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நீரில் கரைக்கப்பட்டு நேரடியாக இரத்த ஓட்டத்தில் நுழைகின்றன.

கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகியவை கொழுப்பில் கரையக்கூடியவை, அவை சரியாக உறிஞ்சுவதற்கு உணவுக் கொழுப்பு தேவைப்படுகிறது.10 foods 15

காணப்படும் உணவுகள்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கருத்துப்படி, வயதுக்கு ஏற்ப ஒன்றரை முதல் இரண்டரை கப் பழங்கள் மற்றும் இரண்டரை முதல் நான்கு கப் காய்கறிகளை நாம் தினந்தோறும் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் எல்லா வகையான வைட்டமின்களையும் நீங்கள் பெறலாம்.

வைட்டமின்களின் பயன்கள்

* வைட்டமின் ஏ : கண்பார்வையை ஆரோக்கியமாக வைப்பதற்கும், செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

* வைட்டமின் பி : உடலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

* வைட்டமின் சி : இது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட். இது நமது நோயெதிப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் நம்மை அண்டாமல் காக்கிறது.

* வைட்டமின் டி : எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் உதவுகிறது.

* வைட்டமின் ஈ : சரும செல்கள் வயதாகுவதை தடுத்து செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.

* வைட்டமின் கே : இரத்தம் உறைதலை தடுக்கிறது.

புரோட்டீன்

புரோட்டீன் ஒரு மேக்ரோ ஊட்டச்சத்து ஆகும். இது நம் உடலை உருவாக்கவும் செயல்பட வைக்கவும் தேவை. தசைகளின் வளர்ச்சி முதல் செல்களின் திரவ நிலையை பராமரிக்கவும், நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கவும் புரோட்டீன் அத்தியாவசியமான ஒன்று. அதனால் தான் வளரும் குழந்தைகளுக்கு புரோட்டீன் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். போதுமான புரோட்டீன் கிடைத்தால் தான் குழந்தைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

புரோட்டீனின் பயன்கள்

செல்கள், திசுக்கள், ஆன்டிபாடிகள், ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களின் வளர்ச்சி, கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டிலும் புரோட்டீன் உதவுகிறது.

காணப்படும் உணவுகள்

பொதுவாக, உடல் எடைக்கு 0.4 கிராம் புரதம் தினந்தோறும் எடுக்க வேண்டும். இந்த புரோட்டீன்கள் பால் பொருட்கள், இறைச்சி, மீன், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள் மற்றும் முழு தானியங்கள் ஆகிய உணவுகளில் சிறந்து காணப்படுகிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரியான உணவுகளை நீங்கள் வழங்கலாம்.

முடிவு

இதிலிருந்து தெரிவது ஒன்று தான் வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன் இரண்டுமே நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்தாகும். இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களின் குறைபாடும் நமக்கு உடல் சார்ந்த ஏகப்பட்ட நோய்களை அழிக்கிறது. இந்த மேக்ரோ மற்றும் மைக்ரோ ஊட்டச்சத்துக்கள் எல்லாருக்கும் அவசியம். எனவே எல்லோரும் தினசரி ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். இந்த ஊட்டச்சத்துக்கள் காணப்படும் உணவை அன்றாடம் சாப்பிட்டு ஆரோக்கியமாக வளமுடன் வாழ முற்படுங்கள்.

Related posts

அடேங்கப்பா! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா ??

nathan

கொழுப்பை கரைக்கும் வெங்காயம்!

nathan

கறிவேப்பிலைப் பொடி

nathan

சீத்தாப் பழத்தில் இல்லாத சத்தா?

nathan

கெட்ட கொழுப்புகளை அடித்து விரட்டும் வாழைத்தண்டுப் பச்சடி

nathan

கவணம் உணவு சாப்பிட்டதும் நீங்கள் தப்பியும் இந்த 7 தவறுகளை செஞ்சுடாதீங்க!!

nathan

கலப்பட உணவுகளை எவ்வாறு கண்டறிவது?

nathan

உங்களுக்கு தெரியுமா அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது…?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்கள் உணவில் அதிகமாக சர்க்கரை சேர்க்கிறீர்கள் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

nathan