சர்வரோக நிவராணியான எலுமிச்சை பழத்தில் ஏராளமான மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளன. எலுமிச்சை சாறு, ஆன்டிபாடிக்களை, அதிகரித்து தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.
எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது. அல்கலைன் அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ் நம்மை எப்போதுமே சந்தோஷப்படுத்தி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் குறைவாகவே சாப்பிடுவோம். உடல் எடையும் குறைந்துவிடும்.
எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அபரிமிதமாக நிரம்பி வழியும் வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது. தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது.
நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால், எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் எலுமிச்சை ஜூஸ், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, பொலிவற்று இருக்கும் சருமத்தையும் பொலிவாக்கும். எனவே எலுமிச்சை சாற்றை தினமும் பருகினால், அழகாக சருமத்தை பெறலாம்.
எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி, படுக்கையறையில் வைக்கும் போது, எலுமிச்சையின் நறுமணம் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு, போன்ற பிரச்சனைகள் வரமால் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சியை வெட்டி வைத்தால் அதன் வாசனை ரத்த அழுத்த பிரச்சனையை சரிசெய்ய உதவும்.