29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.0.560.320.160.700. 1
ஆரோக்கிய உணவு

Food Poison ஆயிடுச்சா? இதோ எளிய நிவாரணம்! இயற்கை வைத்தியம் இருக்கு!

உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்களை நாம் சாப்பிடும் போது அது சிலருக்கு ஃபுட் பாய்சன் ஆகிவிடும்.

குறிப்பா, பண்டிகை காலங்களில் அதுவுமாக வயிற்றுவலி, டயாரியா என்று பாடாய் படுத்திவிடும். மருத்துவமனைக்கு ஓடினால் கையில் இருக்கும் பணத்தை பெரிதாக கறந்துவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள்.

வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்.

இவை சீக்கிரமே கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. அதனால் எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது சில நேரங்களில் அது ஃபுட் பாய்சன் ஆகிவிடும்.


மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப்போகக் காரணம் பூச்சிகள். இவை அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

இவை அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களை இப்பூச்சிகள் கெடுத்துவிடும். இப்பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தும்போது, அவை நோய்களை உண்டாக்கிவிடும். இதனால்கூட ஃபுட்பாய்சன் ஆகுறதுக்கும் வாய்ப்புகள் இருக்கு.

நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாகாவிட்டால் அது விஷமாக மாறிவிடும். இவற்றிலிருந்து தப்பிக்க, டாக்டரிடம் போகாமல் வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே சிகிச்சை செய்து கொள்ளலாம்.

625.0.560.320.160.700. 1
வீட்டு வைத்தியம்
பூண்டு

பூண்டு ஆன்டிவைரஸ், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் குணங்களைக் கொண்டவை. வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளுக்கு நிவாரணம் தரக்கூடியவை. ஒரு சில பூண்டு பற்களை தண்ணீரில் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து பருகினால் வயிற்றுப் பிரச்சினைகள் சரியாகும்.

எலுமிச்சைச் சாறு

பாக்டீரியாவை உங்கள் வயிற்றிலிருந்து வெளியேற்ற எலுமிச்சை ஒரு சிறந்த மருந்து. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் சிறிதளவு சர்க்கரையை கலந்து மூன்று வேளை பருகி வரலாம். இது கடினமாக இருந்தால் எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து, நாள் முழுவதும் குடித்து வந்தால் வயிற்று பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

தேன்

தேன், அஜீரணம் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்க கூடியது. மூன்று வேளையும் உணவு உட்கொண்ட பிறகு, ஒரு தேக்கரண்டித் தேனை சாப்பிட்டு வந்தால், வயிற்றின் அமிலம் குறைந்து வயிற்றுப் பொறுமல் ஏற்படாமல் தடுக்கும்.

வழைப்பழம்

உணவு விஷத்தின் தாக்கத்தால் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உடல் சோர்வாக காணப்படும். அப்போது வழைப்பழம் சாப்பிட்டால் உடம்பில் சக்தி கிடைக்கும். பால் மற்றும் வழைப்பழத்தை அடித்து அதில் ஒரு சிட்டிகை பட்டைப் பொடியைக் கலந்து சாப்பிட்டால் இந்த பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்.

Related posts

‘கருப்பு கசகசா’ தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால்

nathan

உளுந்து சப்பாத்தி

nathan

40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியமாக இருப்பது எப்படி? தெரிஞ்சிக்கங்க…

nathan

புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் காரட் …!

nathan

நீங்க தேங்காய்ப்பால் பிரியரா? பக்க விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

nathan

Frozen food?

nathan

எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்!

nathan

தெரிந்துகொள்வோமா? இட்லி – சாம்பார் எடையை குறைக்க உதவுமா? எப்படி ?

nathan

மூளைக்கு சுறுசுறுப்பு தரும்!

nathan