கொரோனா தொற்றுநோய் பரவி வரும் இந்த கொடூரமான காலகட்டத்தில் சமூகத்தில் இருந்து விலகி இருந்து தனி நபர் ஆரோக்கியத்தை பாதுகாப்பது இன்றியமையாததாகும். பள்ளி, அலுவலகம் என்று எங்கும் செல்லாமல் வீட்டுக்குள் இருக்கும் காலம் நமது பொறுமையை அதிகம் சோதிக்கும் காலமாகவே உள்ளது. ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்துக் கொண்டிருக்கும் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் ஒரே வழி தனிமைப்படுத்துதல் மட்டுமே.
வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருப்பதால் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்க முடியும். வீட்டுக்குள் இருப்பது என்பது சாப்பிட்டுவிட்டு தூங்குவது என்று அர்த்தம் இல்லை. இந்த 21 நாட்கள் உங்கள் உடல் மற்றும், மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது உங்கள் ஆற்றலை மீட்டெடுக்க உதவும். கொரோனா வைரஸ் அழிந்தவுடன் அந்த வெற்றியைக் கொண்டாட இந்த புத்துணர்ச்சி உங்களுக்கு உதவும்.
21 நாட்கள் மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் காலமாக இருந்தாலும் நமது ஆரோக்கியத்தின் மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். சமூகத்தில் இருந்து விலகி இருக்கும் இந்த நேரத்தில் வேறு எந்த நோய் பாதிப்பும் உங்களை அண்டாமல் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். உலகத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இந்த காலகட்டத்தைக் கழிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை அளிக்கிறது.
கீழே சில வகையான உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை இந்த காலகட்டத்தில் உங்கள் குடும்பத்துடன் இணைந்து செய்யக்கூடிய மகிழ்ச்சியான பயிற்சிகளாக உள்ளன. ஆகவே இந்த காலகட்டத்தை அனுபவித்து வாழுங்கள்.
ஆன்லைன் உடற்பயிற்சி வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உங்களால் ஜிம் செல்ல முடியாது. ஆனாலும் உங்கள் வழக்கமான உடற்பயிற்சியை உங்களால் தொடர முடியும். அதற்கு எங்களிடம் ஒரு யோசனை உள்ளது. ஆன்லைனில் உடற்புயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அதில் உங்களை இணைத்துக் கொள்ளலாம். அதில் அறிவுறுத்தும்படி உங்கள் பயிற்சிகளைத் தொடரலாம். அல்லது நீங்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளும் பயிற்சியாளர் ஆன்லைன் வகுப்புகள் எடுத்தால் அதில் நீங்கள் பங்கு கொண்டு பயிற்சி பெறலாம். உங்களுக்கு கிடைக்கும் ஏதாவது ஒரு வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் பயிற்சியை தவறவிடாமல் தொடரலாம்.
நடனமாடுங்கள்
இசைக்கேற்ப நடனமாடுவது ஒரு சிறந்த பயிற்சியாகும். ஒரு நல்ல இசையை தேர்ந்தெடுத்து அதற்கேற்ப நடனம் ஆடுங்கள். இதற்கு உங்களுக்குத் தேவை, காலியான இடம் மற்றும் ஒரு நல்ல இசை மட்டுமே. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கலந்து கொள்ள முடியும். உங்கள் வீட்டில் லிவிங் ரூம் இதற்கேற்ற இடமாகும்.
சுறுசுறுப்பான வீடியோ கேம் விளையாடலாம்
சுறுசுறுப்பான வீடியோ கேம் விளையாடலாம்
நீங்கள் கேம் விளையாடுவதில் ஆர்வம் உள்ளவரா? இந்த தனிமைபடுத்தும் காலத்தில், சமூகத்தில் இருந்து விலகி இருந்து உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியம். ஆனால் நேரம் போக்க ஒரு துணையுடன் வீடியோ கேம் விளையாடலாம்.
ஸ்கிப்பிங் ரோப்
நீங்கள் செய்யக்கூடிய ஒரு சிறந்த பயிற்சி இது. உடல் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியம் இதனால் சிறப்பாகிறது. வழக்கமான உடற்பயிற்சி தரும் விளைவுகளை ஸ்கிப்பிங் செய்வதால் மட்டுமே பெற முடியும் என்பது ஆச்சரியமான உண்மை. குறைவான எண்ணிக்கையில் தொடங்கி மெல்ல எண்ணிக்கையை அதிகரித்து உங்கள் உடலின் ஆற்றல், வலிமை போன்றவற்றை அதிகரிக்க முடியும்.
தசை வலிமை மற்றும் சமநிலை பயிற்சி
உடலின் சமநிலை மற்றும் தசை வலிமையை மேம்படுத்தும் பயிற்சிகள் வீட்டிலேயே செய்யும் விதத்தில் உள்ளன. அவற்றைப் பற்றி உங்கள் பயிற்சியாளரிடம் ஆலோசியுங்கள். ஜிம் பொருட்கள் இல்லாமல் இத்தகைய பயிற்சிகளை உங்களால் எடுக்க முடியும். உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்கள் கொண்டு தசை வலிமை மற்றும் சமநிலைக்கான பயிற்சியைப் பெற முடியும்.