34.1 C
Chennai
Sunday, May 18, 2025
ஆரோக்கிய உணவு

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எப்படி வெண்டிக்காயை பயன்படுத்த வேண்டும்..?

[ad_1]

diabetic water

நீரிழிவு நோய் இல்லை என சொல்வது தற்போது அரிதாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை இந் நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளதை அறியக்கூடியதாக இருக்கின்றது.. இத்தகைய நீரிழிவு உடலில் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி அல்ல.

அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டிக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.

நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டிக்காயை பயன்படுத்த வேண்டும்?இரண்டு வெண்டிக்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.

முனைகளை நறுக்கியப்பின் அவற்றை சின்ன சின்ன துண்டுகளாக்க அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.

பின் காலையில் எழுந்து எதையும் சாப்பிடாமல், அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.இவ்வாறு தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.

வெண்டிக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.எனவே வெண்டிக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.

நீரிழிவில் டைப்-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டிக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைதரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது.

இத்தகைய சத்து வெண்டிக்காயில் அதிகம் உள்ளது. எனவே, வெண்டிக்காயை அதிகளவில் உணவில் சேர்த்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.

Related posts

செரிமாணத்தை ஏற்படுத்தும் இஞ்சி சாதம்

nathan

வாழ்நாளைக் குறைக்கும் ஆபத்தான உணவுகள்!!! கட்டாயம் இதை படியுங்கள்….

nathan

புற்று நோயை தடுக்கும் இந்த அற்புத தேநீரை வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?

nathan

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்

nathan

ஆரோக்கிய டிப்ஸ்

nathan

கல்சியம் சத்து குறைபாடா? அப்ப இத படிங்க!

nathan

இரண்டு கொய்யா போதும்.. மலச்சிக்கல் பிரச்சனையே இருக்காது தெரியுமா?சூப்பர் டிப்ஸ்..

nathan

இந்த உணவுகள் எல்லாம் ஆரோக்கியமானதா இருந்தாலும் நீங்க அடிக்கடி சாப்பிடக் கூடாது! ஏன் தெரியுமா?

nathan

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

nathan