ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது. அதை மீறி சாப்பிட்டால் ஆப்பிள் விஷத்தன்மை கொண்டதாகமாறி உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும்.
ஆப்பிள், எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் பழமாக இருக்கிறது. அதனை எப்போது சாப்பிட வேண்டும் என்பது முக்கியமானது. ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது. அதை மீறி சாப்பிட்டால் ஆப்பிள் விஷத்தன்மை கொண்டதாகமாறி உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும்.
குறிப்பாக ஆப்பிள் சாப்பிட்ட உடன் தயிர் கலந்து சாப்பிடக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்து தயிர் சாப்பிடுவதுதான் நல்லது. ஆப்பிள், தயிர் இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் கபம் சார்ந்த பிரச்சினை ஏற்படும். ஆப்பிள் சாப்பிட்ட உடன் புளிப்பு சார்ந்த எந்த உணவையும் சாப்பிட வேண்டாம். அவை வாயு தொந்தரவு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
ஆப்பிள் சாப்பிட்டதும் தண்ணீர் பருகவும் கூடாது. உடனே தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள அமிலத்தை நீர்த்து போகச்செய்து பூஞ்சை உயிர்வாழ்வதற்கு சாதகமான சூழலை உருவாக்கிவிடும். அது வாயு தொந்தரவை ஏற்படுத்தும். பொதுவாகவே சிட்ரஸ் மற்றும் இனிப்பு பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் பருகக்கூடாது. அது வாயு தொந்தரவு, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றில் பாக்டீரியா வளரும் சூழலையும் ஏற்படுத்தும். ஆப்பிள் சாப்பிட்ட பிறகு முள்ளங்கி சேர்த்த உணவை சாப்பிடுவதும் நல்லதல்ல. அது சரும அலர்ஜியை உருவாக்கும்.