22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
பழரச வகைகள்

ஆப்பிள் – திராட்சை லஸ்ஸி

 

ஆப்பிள் - திராட்சை லஸ்ஸி தேவையான பொருட்கள் :

ஆப்பிள் – 1
கெட்டித் தயிர் – 2 கப்
பன்னீர் திராட்சை – 100 கிராம்
தேன் – 3 ஸ்பூன்
உப்பு     – 2 சிட்டிகை
தண்ணீர் – 1 கோப்பை

செய்முறை :

• திராட்சை பழத்தில் தேன் சேர்த்து ஒரு கரண்டி நீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து ஆறியதும் வடிகட்டியில் வடிக்கட்டி விதைகளை நீக்கவும்.

• ஆப்பிளை நன்கு கழுவி விதைகளை நீக்கி, துண்டுகளாக்கி ஆப்பிளை மிக்ஸியில் போட்டு, ஜூஸை எடுக்கவும்.

• திராட்சைப் பழங்களையும் அதன் பாகுடன் சிறிது நீர்விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

• பிறகு திராட்சைப் பழக்கலவை, ஆப்பிள் ஜூஸ், தயிருடன் மிக்ஸியில் போட்டு எல்லாம் நன்கு கலக்கும் வரை விட்டுவிட்டுக் அரைக்கவும்.

• பிறகு உப்பு, ஐஸ் கட்டிகள் சேர்த்து தேவைப்பட்டால் நீர் ஊற்றி நுரை போல வரும்போது டம்ளர்களில் ஊற்றிப் பரிமாறலாம்.

• சத்தான சுவையான ஆப்பிள் – திராட்சை லஸ்ஸி தயார்.

Related posts

சுவையான சத்தான பாதாம் பால்

nathan

ஜில்ஜில் மாம்பழ ஜுஸ் செய்வது எப்படி

nathan

காபி மூஸ்

nathan

சத்தான ஃப்ரூட் சாட் மசாலா

nathan

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

nathan

ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்

nathan

வெள்ளரிக்காய் மோர்

nathan

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி!

nathan

குழந்தைகளுக்கான சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

nathan