24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.0.560.350.160.300.
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! உங்க தொப்பையை எளிதில் குறைக்க இந்த 5 உடற்பயிற்சிகள் மட்டும் போதும்!

தொப்பை குறைக்க கடின உடற்பயிற்சிகள் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

வீட்டில் இருந்தப்படி கூட எளிய உடற்பயிற்சிகள் மூலம் எளிதில் தொப்பையை குறைக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

படிக்கட்டுகளில் ஏறுங்கள்

இந்த உடற்பயிற்சியின் போது நீங்கள் மாடிப் படிக்கட்டுக்களில் ஏற வேண்டும்.

படிக்கட்டுக்களில் ஏறும் போதும், இறங்கும் போது நன்கு சுவாசிக்க வேண்டும்.

இந்த உடற்பயிற்சி உங்கள் வயிற்று தொப்பையை விரைவில் குறைக்க உதவியாக இருக்கும். இதை தினசரி செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

குதித்தல்

இந்த உடற்பயிற்சியின் போது மாடி படிக்கட்டுகளில் நின்று கொள்ளுங்கள். உங்கள் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது குதியுங்கள்.

இந்த உடற்பயிற்சி செய்யும் போது ஆழ்ந்த சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு எளிமையான பயிற்சியாகும். எனவே நீங்கள் ஒரு நேரத்தில் 40-50 முறை எளிதாக செய்யலாம்.

இது வயிற்று கொழுப்பைக் குறைப்பதோடு, அடி வயிற்றுப்பகுதிக்கு நல்லதும் கூட.

ட்ரைசெப்ஸ் டிப்ஸ்

இந்த பயிற்சிக்கு படிகட்டிகளில் பின்னோக்கி நின்று கொள்ளுங்கள். இப்பொழுது படிக்கட்டுகளில் பின்னோக்கி செல்லும் வகையில் கைகளை முதல் படியில் வைக்க வேண்டும்.

இப்பொழுது கால்களை முன்னோக்கி நீட்டிக் கொண்டு உடலை ஒட்டுமொத்தமாக தூக்கி தூக்கி இறக்குங்கள்.

கைகளை பலமாக படிகட்டிகளில் பிடித்துக் கொண்டு உடலை தூக்குங்கள்.

இந்த உடற்பயிற்சி அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கைகள், முதுகு மற்றும் இடுப்பை வலிமையாக்குகிறது.

புஷ் அப்

தரையில் இருந்து முதல் அல்லது இரண்டாவது (உயரம் வாரியான) படிக்கட்டில் உங்கள் கைகளை வைத்து, கால்விரல்களை தரையில் வைக்கவும். பிளாங்கின் நிலைக்கு வரவும்.

இப்போது உங்கள் கைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இப்பொழுது கைகளை அழுத்தி ஒட்டுமொத்த உடல் எடையையும் மேல்நோக்கி உயர்த்துங்கள்.

பிறகு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து புஷ் அப் எடுங்கள்.

இப்படி செய்யும் போது ஒவ்வொரு நேரத்திலும் மார்பு படிகட்டை தொட்டும்.

நீங்கள் ஒரு நேரத்தில் 5 முதல் 20 புஷ் அப்களை செய்யலாம்.

இதற்குப் பிறகு, 30 விநாடிகள் இடைவெளி எடுத்து மீண்டும் தொடங்கலாம்.

பேலன்ஸ் பிளான்க்

இந்த உடற்பயிற்சி செய்ய முதலில் பிளாங் நிலைக்கு வாருங்கள்.

உங்கள் உள்ளங்கைகளை தரையில் இருந்து படிகட்டிகளில் வைக்கவும். கால்களை நேராக வைத்து பாத விரல்கள் தரையை தொடும்படி வைக்கவும்.

இதற்குப் பிறகு, உங்கள் இடது கை மற்றும் வலது காலை மேலே உயர்த்தவும்.

இந்த நிலையில் 15 விநாடிகள் நின்ற பின் கைகளையும் கால்களையும் மீண்டும் தங்கள் இடத்திற்கு கொண்டு வந்து, பின்னர் வலது கை மற்றும் இடது காலை உயர்த்தவும்.

இதை 10 தடவை செய்து வாருங்கள். இடுப்புப் பகுதியை சுற்றி தொங்குகின்ற சதைகள் நன்றாக குறையும்.

Related posts

நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?

nathan

விரைவாக கருத்தரிக்க 7 விஷயங்கள்

nathan

வியர்க்குரு யாருக்கெல்லாம் வரும் – அதனை விரட்டும் இயற்கை வழிகள்

nathan

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!

nathan

ஈஸியா தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியில் ஒன்றை செய்து பாருங்க

nathan

டயபடீஸ் இருக்கிறது என்று நமக்கு ஏதாவது அறிகுறிகள் மூலம் தெரியுமா?

nathan

அடிக்கடி வரும் ஏப்பம்: கட்டுப்படுத்த எளிய வழிகள்

nathan

இந்த டூத் பேஸ்ட் ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் எனத் தெரியுமா?

nathan

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan