25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
unnamed 2
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா பெண்களே இந்த வகை ஆண்கள் காதலில் எளிதில் ஏமாற்றிவிடுவார்கள்…?

காதல் அனைவருக்கும் பொதுவான ஒரு அழகான உணர்வு ஆகும். ஆனால் அனைத்தும் மாறிவிட்ட இந்த காலகட்டத்தில் காதல் என்பதற்கான அர்த்தம் வெகுவாக மாறிவிட்டது என்பது கசப்பான உண்மை ஆகும். உண்மையான காதல்கள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன, இனிமேலும் இருக்கும், அதேபோலத்தான் போலியான காதல்களும். பிளாஸ்டிக்கை போல இதையும் அழிக்கவே முடியாது.

பொதுவாக காதலில் ஆண், பெண் இருவருமே ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் காதலில் ஏமாற்றப்படும் போது பாதிப்பு வகையில் பார்க்கும்போது பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தவறான ஆண்கள்தான். காதலுக்கு கண்ணில்லைதான் ஆனால் காதலிக்கும்போது மூளையாவது இருக்க வேண்டும். தங்களின் துணை தன்னிடம் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர்களின் செயல்களில் இருந்து புரிந்துகொள்ளும் தந்திரம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இந்த பதிவில் எந்த வகை ஆண்கள் காதலில் ஏமாற்றுவார்கள் என்று பார்க்கலாம்.

தாங்கிப்பிடிக்கும் ஆள் உங்களின் தற்போதைய மனக்கவலைகளில் இருந்து உங்களை திசைதிருப்பும் ஆளாக கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பான். காதல் தோல்வி அடைந்த பெண்கள் முதலில் தேடுவது இவர்களை போன்ற ஆட்களைத்தான். இவர்களிடம் நீங்கள் ஆதரவு தேடிச்செல்லும்போது உங்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளவே இவர்கள் எண்ணுவார்கள். காதல் முறிவு ஏற்பட்டால் சில காலம் தனிமையில் இருந்து உங்களுக்கான சரியான ஆளை தேர்ந்தேடுக்க வேண்டுமே தவிர ஒருபோதும் இதுபோன்ற ஆட்களிடம் ஆதரவு தேடாதீர்கள்.

குழந்தைத்தனமான ஆண்கள் இதுபோன்ற ஆண்கள் ஒருபோதும் முன்னேறுவதை விரும்பமாட்டார்கள். இந்த வயதிலும் பெற்றோர்களை சார்ந்தே இருப்பார்கள். எதிர்காலத்திற்கான எந்தவொரு ஆசைகளும், குறிக்கோள்களும் இல்லாமல், நிதி மற்றும் உணர்ச்சிரீதியாக கவனித்துக் கொள்ள ஒருவர் வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள். இப்படிப்பட்டவர்களை ஒருபோதும் தேர்ந்தெடுக்கதீர்கள், ஏனெனில் அவர்கள் தங்களின் தேவைக்கு உங்களை பயன்படுத்திக் கொள்வார்களே தவிர உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி கூட செய்யமாட்டார்கள்.

ஆண் பேய் இவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்கமாட்டார்கள். பல நாட்கள் உங்களின் கண்களிலேயே படமாட்டார்கள் ஆனால் அவர்களுக்கு ஒரு தேவை என்று வரும்போது உங்களை தேடிவருவார்கள். உங்களுக்கான பாராட்டையோ, அன்பையோ இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இவர்களின் குறிக்கோள் எல்லாம் தங்களின் தேவைகளும், ஆசைகளும்தான். அது தீர்ந்தவுடன் உங்களை விட்டு விலகி விடுவார்கள். பேய் போல திடீரென்று தோன்றும் இவர்கள் தேவை முடிந்தவுடன் பேய் போலவே மறைந்து விடுவார்கள்.unnamed 2

தொடர்ச்சியாக பொய் கூறுபவர் இவர்களை போல யாராலும் பொய் கூற முடியாது. இவர்கள் தங்கள் மென்மையான வார்த்தைகள் மூலம் யாரையும் ஏமாற்றி விடுவார்கள், அதனை பல நேரங்களில் நீங்கள் நம்பிவிடுவீர்கள். இவர்கள் தங்களின் அணுகுமுறையின் மூலம் உங்களை எதற்கும் சம்மதிக்க வைத்துவிடுவார்கள். இந்த வகை ஆண்களிடம் இருந்து நீங்கள் எவ்வளவு நேர்மையை எதிர்பார்க்க முடியும். இவர்கள் எவ்வளவு வசீகரமானவர்களாக இருந்தாலும் பொய் கூறுபவர்கள் ஒருபோதும் உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்க முடியாது.

கஞ்சத்தனமானவர்கள் இவர்கள் தங்களது நியாயமான பங்கைக் கூட கொடுக்க தயாராக இருக்க மாட்டார்கள், எப்போதும் பொருட்களின் விலையை குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். முடிந்தவரை இவர்கள் தங்கள் கையில் இருந்து பணம் செலவழிப்பதை தவிர்க்க பார்ப்பார்கள். எந்த வகையிலும் பணம் ஒரு பையனை உங்களுக்கு சிறந்தவராக மாற்றாது, ஆனால் துணைக்கான சிறிய அர்ப்பணிப்பைக் கூட செய்ய தயங்குபவர்களை ஒருபோதும் தேர்ந்தெடுக்காதீர்கள்.

அதிகம் ஒட்டிக்கொள்பவர்கள் இவர்கள் எப்போதும் உங்களின் இடுப்பை பற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் உங்களுடன் பேசவும், சந்திக்கவும் வாய்ப்பைத் தேடுவார்கள். இவர்கள் உங்களை விட்டு விலகாமல் இருப்பதே உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும், சொல்லப்போனால் உங்கள் மீது அவர் வெறியாக இருப்பார். இதற்கு பெயர் காதல் அல்ல, இது ஆவேசம். காதலிக்கு மூச்சு விடவாவது நேரம் கொடுக்க வேண்டும், உங்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடும் எவரும் உங்களுக்கு சிறந்த காதலனாக இருக்க முடியாது. உங்களிடம் அதிகம் ஒட்டிக்கொள்ளும் நபர் உங்கள் காதலனாக இருந்தால் உங்கள் நிலை விரைவில் மோசமானதாகிவிடும்.

Related posts

thinai benefits in tamil -தினை

nathan

உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்!

nathan

venpoosani juice benefits in tamil – வெண்பூசணி

nathan

உங்களுக்கு தெரியுமா முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

nathan

சளி , காய்ச்சல் , இருமல் குணமாக இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கிறீன் டீ குடித்தால் உடம்பு மெலியுமாம்! பெண்களின் கவனத்துக்கு

nathan

uric acid meaning in tamil – உரிக் ஆசிட்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது பெற்றோர்கள் செய்யும் முக்கிய தவறுகள்!

nathan

இந்த 5 ராசிக்காரங்க விஷத்தை விட ஆபத்தானவங்க…

nathan