27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.0.560.350.160.300.053.80 2
ஆரோக்கியம் குறிப்புகள்

இடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு!

ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், சுவிஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது.

இதனை கொண்டு உடற்பயிற்சி செய்வதனால் உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கின்றது. குறிப்பாக இடுப்பு, தொடையை வலுவாக்குகின்றது.

அந்தவகையில் இடுப்பு, தொடையை வலுவாக்க சில உடற்பயிற்சிகள் பற்றி இங்கு பார்ப்போம்.

ரிவர்ஸ் கிரன்ச் (Reverse crunch)
625.0.560.350.160.30

தரையில் அமர்ந்து கால்களை சற்று அகட்டி வைக்க வேண்டும். கால்களுக்கு இடையே சுவிஸ் பந்தை வைத்து, பாதங்களால் அழுத்தமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
கைகளை பக்கவாட்டில் தரையில் பதிக்க வேண்டும்.
இப்போது, மேல் உடலை சாய்த்து தரையில் படுக்க வேண்டும். பின்னர், மெதுவாக கால்களால் பந்தினை மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இதை, 15 முதல் 20 முறை செய்யலாம்.
இதனை செய்வதனால் வயிறு, அடிவயிறு, தொடை, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பு கரைந்து, தசைகள் வலுவடையும்.
பட் மஸ்கல் கிரன்ச் (Butt muscle crunch)

625.0.560.350.160.300.053.80 2
கட்டில் அல்லது படுக்கும் வகையிலான நாற்காலியில், நுனியில் அமர்ந்து கொள்ள வேண்டும்.
பந்தை கால்களுக்கு இடையில், பக்கவாட்டுப் பாதங்களால் பிடித்துக் கொண்டு, கைகளை கட்டிலின் முனையில் பிடித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மெதுவாக படுக்க வேண்டும். அப்படியே மூச்சை உள்ளிழுத்து, வெளியில் விட்டபடி பந்தை பிடித்தபடி கால்களால் உயர்த்தி, இறக்க வேண்டும். இதை 10 முறை செய்யலாம்.
இந்த பயிற்சி செய்வதனால் உள்ளுறுப்புகள் பலப்படும். சிறுநீரகம் தொடர்பான தொந்தரவுகளை தீர்க்கும். இடுப்பு மற்றும் பின்புறத் தசைகள் வலுவடைந்து, ஃபிட்டாகும்.

Related posts

பற்களில் படிந்துள்ள கறையை போக்க எளிய வழி

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! சமையல் டிப்ஸ்!

nathan

சுவையான சமையலுக்கு சின்னதா சில டிப்ஸ்!…

sangika

இத பண்ணுங்க.! உங்களுக்கு பைல்ஸ் வராமா இருக்கனுமா?

nathan

மல்லிகைப் பூ அழகிற்காக மட்டுமல்ல பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது!

nathan

நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக அதிகரிக்க வேண்டுமா? இதை படியுங்கள்

nathan

மன அழுத்தத்தை போக்கும் பூக்கள்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

நம்மில் எத்தனையோ பேர் குழந்தைச் செல்வம் இல்லாமல் அவதிப்படுவதும், மன உளைச்சலுக்கும் ஆளாவதும் அறிந்த வ…

nathan