22860683279ed0eebd7bee5d0527c33e67f90e326ee27df5534e9ffc6e2ba0aefd4c48b162050300990965053263
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா போலி கருப்பட்டியை எவ்வாறு கண்டுபிடிப்பது….?

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரிலிருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி வெல்லம். இதனை பனை வெல்லம் என்றும் அழைப்பர். பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரினை காய்ச்சுவது மூலம் இந்த வெல்லம் கிடைக்கிறது.
இந்த கருப்பட்டி வெல்லத்தினை சிறியவர் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம், நமது உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.

போலி கருப்பட்டி கண்டறிய:

வருடத்தில் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 6 மாதம் மட்டுமே பதனீர் கிடைக்கும். இதில் தை, மாசி பதனீர் உற்பத்தி தொடங்கும் மாதங்கள். பங்குனி, சித்திரை உற்பத்தி உச்சத்திலிருக்கும்.

வைகாசி, ஆனி உற்பத்தி முடியும் மாதங்கள். ஆனால், கருப்பட்டி, பனங்கற்கண்டு, சில்லுக் கருப்பட்டிகளின் தேவை வருடம் முழுவதும் உள்ளது. எனவே கருப்பட்டி தொழிலில் போலிகள் அதிகம் உருவாகிவிட்டது.

22860683279ed0eebd7bee5d0527c33e67f90e326ee27df5534e9ffc6e2ba0aefd4c48b162050300990965053263

கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத் தன்மையுடன் கூடிய இனிப்புச் சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி.

முழுக் கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும். கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித் தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது தான் உண்மையானது.

நாள்பட்ட கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.

ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டி துண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.

தேங்காயைத் தட்டிப் பார்ப்பது போல, கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி. கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப்பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலியானது என கண்டுபிடிக்கலாம்.

Related posts

சுவையான கேழ்வரகு உப்பு உருண்டை

nathan

ஒழுங்கில்லாத மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்க சிறந்த தீர்வு!..

sangika

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு!!

nathan

புதினா அனைத்து நோய்க்கும் தீர்வு தரும் காயகல்பம் என்பது தெரியுமா ?அற்புதமான எளிய தீர்வு

nathan

மறதி நோய் வராமல் தடுக்கும் வால்நட்

nathan

சர்க்கரைக்கு பதிலாக இதை தினமும் பயன்படுத்தி பாருங்க! சூப்பர் டிப்ஸ்

nathan

களைப்பைப் போக்கும் கற்றாழை!

nathan

ஆரோக்கியமாக உண்ணுவதற்கு சுவாரஸ்யமான சில புதிய விதிமுறைகள்!!!

nathan

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பச்சை மிளகாய்

nathan