தற்போதைய காலத்தில் புற்றுநோயின் தாக்கத்திற்கு பலரும் பாதிப்புக்கு ஆளாவதற்கு முக்கிய காரணம் அன்றாடம் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்கள் தான்.
அத்தகைய புற்றுநோயை வரமால் தடுக்க தினமும் பெர்சிம்மன் என்ற பழம் பெரிதும் உதவுகின்றன.
மேலும் இந்த பழத்தின் சாறில் உள்ள கேலிக் அமிலம் மற்றும் எபிகேட்ஸின் என்னும் இரண்டு வேதிப்பொருள்கள் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன.
சுவையான இந்த பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுவதுடன் பல நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடும்.
மேலும் இதில் உள்ள அதிகளவு வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பீனாலிக் அமிலம் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகின்றன.
பெர்சிம்மன் பழத்தில் கண்ணின் ஆரோக்கியத்திற்கு தேவையான 55 சதவீதம் வைட்டமின் ஏ இந்த ஒரு பழத்தில் கிடைப்பதால் இதனை தினமும் உண்டு வந்தால் மாலைக்கண் நோய், கண் எரிச்சல் மற்றும் கண் தொடர்பான பல பிரச்சைனைகள் குறையும்.
உடலில் உள்ள அதிக கொழுப்புதான் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.மேலும் தினமும் பெர்சிம்மன் பழத்தை சாப்பிடுவது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.
பெர்சிம்மன் பழத்தில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், போலிக் அமிலம் மற்றும் தையாமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் அவசியமானவையாகும்.
பெர்சிம்மன் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் தணிக்க அமிலம் வீக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.மேலும் இந்த பழத்தை தினமும் உண்டு வந்தால் உடலில் மீண்டும் வீக்கம் ஏற்படமால் தடுக்கிறது.
பெர்சிம்மனில் உள்ள பீட்டா-கரோட்டின், லுடீன், லிகோபீன் மற்றும் கிரிப்டோக்ஸான்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் முன்கூட்டியே வயதாவதையும் தடுக்கிறது.
பெர்சிம்மன் பழத்தில் உடலுக்கு தேவையான ஆண்டிஆக்சிடண்ட்கள் உள்ளதால் இவை கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களையும், செல்கள் சேதமடைவதையும் தடுத்து கல்லீரலை பாதுகாக்கிறது.