26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
3 10
ஆரோக்கிய உணவு

அடேங்கப்பா! இந்த மூன்று ராசிகளில் ஒன்று உங்க ராசியா? அப்போ நீங்க ரொம்ப கொடுத்துவச்சவங்க தான்!

இந்த உலகில் பிறந்த அனைவருமே ஒரே மாதிரியான குணங்களை கொண்டிருக்க மாட்டோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும். இத்தனை கோடி மக்கள் இருக்கும் இந்த உலகத்தில் யாருமே ஒரே மாதிரியான குணங்களை கொண்டிருப்பது இல்லை.

இந்த இந்த ராசிக்காரர்கள் இப்படி இப்படி இருப்பார்கள், அவர்களது வாழ்க்கை இப்படி இருக்கும் என்பதை ஜோதிடம் 12 இராசிகளுக்குள் உலகில் உள்ள அனைவரையும் அடக்கிவிடுகிறது. இந்த 12 இராசிகளுக்குள் இருப்பவர்களுக்கு கூட ஒரு சில விஷயங்கள் அவர்களது நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு மாறுபடும்.

இதில் சில ராசிக்காரர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள், மிகவும் அரிதானவர்கள் இது எந்த ராசிக்காரர்கள், இவர்கள் ஏன் அதிஷ்டசாலிகள் என்று அழைப்படுகிறார்கள் என்பது பற்றி இந்த பகுதியில் தொடந்து காணலாம்.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 19)
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் அரிதான நபர்களாக இருக்கிறார்கள். மேஷ ராசியானது மார்ச் 21- ஏப்ரல் 19 வரை பிறந்த நபர்களுக்கும் பொருந்தும். இவர்கள் தங்களை தாங்களே நேசிக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களது உறவுகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பார்கள். இவர்கள் சவால்களை சமாளிக்கும் விஷயத்தில் சற்று பலவீனமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த விஷயத்தை காண்கிறார்களோ அதை அடைவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது.

ஏன் அரிதானவர்கள்?
இவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது.. இவர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லும் போதோ அல்லது ஏதாவது ஒரு முடிவை எடுக்கும் போதோ, யாராவது இப்படி நடந்துவிடலாம், அது சரியாக வராது என்பது போன்ற தங்களது கற்பனைகளை சொல்வதை விரும்பமாட்டார்கள்.

மேஷ ராசி குணங்கள்
ஆர்வம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். அதிகாரம் செலுத்த ஆசைப்படுவார்கள். குடும்பத்தின் மீது அக்கறை காட்டும் திறன் அதிகமாக இருக்கும். துணிச்சலும், அச்சமின்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். தன் மனதில் உள்ள உறுதியான கருத்துக்களை எடுத்துக் கூறும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தனுசு மிகவும் அரிய மூன்று ராசிகளில் இந்த தனுசு ராசியும் ஒன்றாக உள்ளது. மேலும் இவர்கள், நவம்பர் 22 – டிசம்பர் 21 -க்குள் பிறந்தவர்களுக்கும் இந்த பலன் பொருந்தும். இந்த ராசிக்காரகள் ஏன் மிக அரிதானவர்களாக கருதப்படுகிறார்கள் என்றால் சமீப காலமாக தனுசு ராசியில் பிறப்பவர்களே குறைவாகிவிட்டார்கள். இவர்கள் மிக அரிதான இரத்தினம் போன்றவர்கள் மேலும் இவர்களது அறிவு திறன் மிக கூர்மையானது.

ஏன் தனுசு ராசி அரிதானது? இவர்கள் ஏன் அரிதானவர்கள் என்றால் இவர்கள் தங்களது அதீத சக்தியால் பணம் மற்றும் ஆண்களை கவர்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் இந்த உலகத்தை நன்றாக புரிந்தவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு துரோகம் நினைக்காத நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தனுசு – குணங்கள் தனுசு ராசிக்காரர்கள் பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும்., சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்க முடியாது. நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பார்கள். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பார்கள்.

கும்பம் புள்ளி விவரப்படி கும்ப ராசிக்காரர்கள் மிகவும் அரிதான ராசிக்கார்களாக இருக்கிறார்கள். இது ஜனவரி 20 – பிப்ரவரி 18 வரை பிறந்தவர்களுக்கு பொருந்தும். இவர்கள் ஏன் அரிதாவர்களாக கருதப்படுகிறார்கள் என்பதை தொடந்து காணலாம்.

ஏன் அரிதானது? இவர்களுடைய பிறப்பில் இருந்தே விசுவாசம் என்பது இவர்களோடே இருக்கும் ஒன்றாகும். உறவுகளை அதிகமாக மதிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடமும் அதே விசுவாசவத்தை எதிர்பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பது இல்லை.. இந்த விஷயங்களால் தான் இவர்கள் மற்றவர்களால் அதிகமாக மதிக்கப்படுகிறார்கள்.

கும்ப ராசி -குணங்கள் அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்பராசிகாரர்கள் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத இவர்கள் முரட்டு பிடிவாதகாரர்கள். மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்டவர்கள். தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள்.

Related posts

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!

nathan

ருசியான பலாக்கொட்டை சமையல்!

nathan

தினமும் காலை இரண்டு வேகவைத்த முட்டையை சாப்பிடுங்க…

nathan

காலை வெறும் வயிற்றில் பிளாக் காபி குடித்தால் எடை குறையுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

தேனில் ஊறவைத்து வெங்காயத்தை சாப்பிட்டு வர என்ன நடக்கும் தெரியுமா..?

nathan

இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்

nathan

தெரிஞ்சிக்கங்க… ஆரோக்கியமான உடல் நலத்திற்கு லெமன் டீ சாப்பிடுங்க!!

nathan

சூப்பர் டிப்ஸ்! “வேறெதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும்”.இனி மாத்திரைகள் வேண்டாம்.. பப்பாளி மட்டும் போதும்..!!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு- வயிற்று உபாதைகளுக்கு தீர்வு தரும் பூண்டு சூப்

nathan