பண்டைய காலம் தொட்டு உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சை மிளகாய் ஆகும் . தாளிப்பதில் தொடங்கி அனைத்து முறைகளிலும் உணவில் பச்சை மிளகாய் சேர்க்கப்படுகிறது. பச்சைமிளகாயில் பலவித வைட்டமின்கள் இருப்பதால் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. வழக்கமாக பச்சைமிளகாயில் ஜீரோ கலோரிகள் உள்ளது,
மேலும் இது வளர்ச்சிதை மாற்றத்தை மிகுதிப்படுத்தும் .அண்மையில் நடைபெற்ற ஆய்வின்படி உணவில் பச்சைமிளகாய் சேர்த்துக்கொள்வது 50 சதவீதம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. பச்சை மிளகாய் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பின், பச்சை மிளகாயை அன்றாட உணவில் சேர்ப்பது நல்ல பலனைத் தரும்.
பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் உட்பொருள், புற்றுநோயின் வளர்ச்சியை தடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் முக்கியமாக ஆண்கள் பச்சைமிளகாய் சேர்த்த உணவை உட்கொள்வதால், அவர்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து விடுபட உதவும். மேலும் மிளகாயில் அதிக அளவு கால்சியம் உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கால்சியம் என்பது திடமான பற்களுக்கும் எலும்புகளுக்கும் அவசியமான ஒன்று .
சிலருக்கு பால் பொருட்கள் என்றால் ஒவ்வாமையாக இருக்கலாம். அதனால் அதை பருகாதவர்கள், அதிக கால்சியம் உள்ள மிளகாயை உண்ணலாம். பால் பொருட்கள் அளிப்பதை போலவே, மிளகாயும் சம அளவிலான கால்சியத்தை வழங்குவதால் , திடமான பற்களையும் எலும்புகளையும் பெறலாம். மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.