25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
5 153
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளுக்கு மொட்டை எடுத்தால் முடி அடர்த்தியாக வளரும் என்பது மெய்யா? பொய்யா?

குழந்தைகள் பிறந்த பின், ஒற்றை எண்ணிக்கையில் வரும் மாதங்களில், உறவுகளை, நண்பர்களை அழைத்து, பிறந்த பிள்ளைக்கு மொட்டை அடித்து காது குத்தி, வீட்டையே விழாக்கோலம் பூணச் செய்வது இந்தியர்களின், குறிப்பாக தமிழர்களின் மரபு! குழந்தைகளுக்கு அப்படி மொட்டை அடிக்கும் பொழுது, செவேனேன் என்று கிடந்த கிடாவை வெட்டி ஊருக்கே விருந்து வைப்பதும் நடக்கும்.

குழந்தையின் முடியை வழித்து போடும் ஒரு சாதாரண நிகழ்வுக்கு ஏன் இந்த அமளி துமளி என்று தோன்றுகிறது அல்லவா!

ஏன் மொட்டை அடிக்கிறோம்?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைத்து வயதினருக்கும், சில முக்கிய தருணங்களில் மொட்டை அடித்து விடப்படுகிறது. நம் தமிழர்கள் எதற்காக மொட்டை எடுக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் பக்தி. ஆனால் பக்தி என்னும் பெரிய காரணத்திற்குள் ஒளிந்து வரும் ஒரு சிறு காரணம் என்ன என்று தெரியுமா? அது மொட்டை அடித்தால் அடுத்து வளரும் முடி அடர்த்தியாக, கருமையாக நீளமாக வளரும் என்பது தான்!

இது மெய்யா? பொய்யா?
இவ்வாறு மக்கள் மொட்டை அடித்தால் முடி வளரும் என்று நம்புவது உண்மையா அல்லது பொய்யா என்று பார்த்தால், அது சுத்தமான, அப்பட்டமான மூட நம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் முடி வளர்வதற்கு, அதன் நிறத்திற்கு, முடியின் அடர்த்திக்கு காரணம் முடியின் பாலிக்கிள் செல்கள் தான். இந்த செல்கள் தலையின் அடிப்பாகத்தில் அதாவது ஸ்கால்ப் என்று கூறக்கூடிய தலையின் அடியில் தான் உள்ளன.

ஒரு வெங்காய பலனும் இல்லை!
முடி வளர்வது ஸ்கால்பிற்கு மேலே! அவ்வாறு மேலே வளரும் முடியை வெட்டுவது எப்படி முடி வளர்ச்சியை தூண்டும். இப்பொழுதாவது உணர்ந்து கொள்ளுங்கள் சகோக்களே! முடி வெட்டினால், மொட்டை எடுத்தால் முடி வளரும் என்பது எல்லாம் ஒரு கட்டுக்கதை தான். முடி வெட்டினாலோ, மொட்டை எடுத்தாலோ ஒரு வெங்காய பலனும் முடிக்கு உண்டாகாது. பிறகு ஏன் குழந்தைகளுக்கு பிறந்த உடன் மொட்டை போடுகின்றனர்.5 153

சுற்றுச்சூழல் கருதி!
நம் தமிழகம் சற்று வெப்பமான இடம் என்பதாலும், பெற்றோர் தெய்வத்திற்கு நேர்ந்து இருக்கும் காரணத்தினாலும் மட்டுமே குழந்தைகளுக்கு மொட்டை போடப்படுகிறது. மண்டையில் முடி இல்லாமல் இருந்தால், வெப்பத்தின் தாக்கம் குழந்தைகளுக்கு அவ்வளவாக தெரியாது என்பதால், மொட்டை போடப்படுகிறது.

மேலும் குழந்தையின் தலையில் பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், இது பெரியவர்களுக்கும் கூட அப்பொழுது அதை போக்க, அதற்கு வைத்தியம் பார்க்க தலையில் முடி இல்லாமல் இருந்தால் வசதியாக இருக்கும் என்பதற்காக மொட்டை போடப்படுகிறது.

மொட்டையின் பொழுது கவனம்!
குழந்தைகளுக்கு மொட்டை எடுக்கும் முன், குழந்தை சரியான மன நிலையில் இருக்கிறதா, அமைதியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்; பின், குழந்தையின் கையில் விளையாட்டு சாமான்களை கொடுத்து அதை திசை திரும்பியவாறு குழந்தை துளும்பாமல் இருக்கும் வண்ணம் பிடித்துக் கொள்ள வேண்டும். பின் குழந்தையின் தலையில் உள்ள முடியை மெதுவாக, பகுதி பகுதியாக மொட்டை அடிக்க ஆரம்பிக்க வேண்டும்.

சரியான சாதனம்!
குழந்தைக்கு நீளமான முடி இருந்தால், நன்கு கத்திரியால் முடியை ஓட்ட வெட்டி விட்டு, பின் மொட்டை அடிக்க வேண்டும். மொட்டை அடிக்க பிளேடு, ரேசர் போன்ற சாதனங்களை பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கு மொட்டை எடுக்க ட்ரிம்மர் போன்ற சாதனங்களை பயன்படுத்துவது நல்லது; இதனால், குழந்தையின் தலையில் காயங்கள், கீறல்கள் ஏற்படுவது தடுக்கப்படும். குழந்தைக்கு மொட்டை எடுத்து முடித்த பின், குழந்தையை வெதுவெதுப்பான, மிதமான சூடு கொண்ட நீரால் நன்கு குளிப்பாட்ட வேண்டும்.

எதற்கு சந்தனம் பூசுகிறோம்?
குழந்தைகளுக்கு மொட்டை எடுத்து முடித்த பின் எதற்காக சந்தனத்தை பூசுகிறோம் என்றால், பிளேடு போன்ற சாதனங்களால் குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயத்தின் எரிச்சலை குறைக்கவும், தலையில் குளிர்ச்சியை ஏற்படுத்தவும் தான். சந்தனம் இல்லை எனில், குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய், மாஸ்டரைசர் கூட பயன்படுத்தலாம். பொதுவாக சந்தனம் பயன்படுத்துவது சுகந்தமான மணத்தையும், இதத்தையும் தரும்!

எதற்கு சந்தனம் பூசுகிறோம்?
குழந்தைகளுக்கு மொட்டை எடுத்து முடித்த பின் எதற்காக சந்தனத்தை பூசுகிறோம் என்றால், பிளேடு போன்ற சாதனங்களால் குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயத்தின் எரிச்சலை குறைக்கவும், தலையில் குளிர்ச்சியை ஏற்படுத்தவும் தான். சந்தனம் இல்லை எனில், குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய், மாஸ்டரைசர் கூட பயன்படுத்தலாம். பொதுவாக சந்தனம் பயன்படுத்துவது சுகந்தமான மணத்தையும், இதத்தையும் தரும்!

எது சரியான வயது?
குழந்தைகளுக்கு மொட்டை எடுக்க எது சரியான வயது என்று பார்த்தால், மொட்டை எடுக்கும் பொழுது எந்த பாதிப்பும் நேராமல் இருக்க குழந்தையின் தலை நேராக, தலை திடமாக இருக்க வேண்டியது அவசியம். ஆகையால், குழந்தையின் தலை நேரான பின், குழந்தையின் தலை திடமான நிலையை அடைந்த பின்னர் மொட்டை எடுப்பது நல்லது.

மண்டை பத்திரம்!
அவர்கள் சொல்லுகிறார்கள், இவர்கள் சொல்லுகிறார்கள் என்று அவசரப்பட வேண்டாம்! ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். ஒரு சில குழந்தைகள் எளிதில் ஸ்திர தன்மையை பெறலாம்; சிலருக்கு அது தாமதம் ஆகலாம். அதனால், பெற்றோர்களே! உங்கள் குழந்தையின் தலை என்று திடம் அடைகிறது என்பதை பார்த்து நீங்களே மொட்டை எடுக்கும் நாளை முடிவு செய்யுங்கள்!

யாருடைய பேச்சையும் கேட்க வேண்டாம்! குழந்தையின் மண்டை சம்பந்தப்பட்ட விஷயம், ஆகையால் குழந்தையின் மண்டை பத்திரமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து செயலாற்றுங்கள்!

Related posts

அடிக்கடி அழுறவங்களா நீங்க? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்களுக்கு தெரியுமா இதயநோய் குணமாகவும், இதயம் வலுப்பெறவும் சில வழிமுறைகள்.

nathan

எச்சரிக்கும் ஆய்வு..’குழந்தைகளுக்கு அதிகளவு இனிப்பு கொடுக்காதீர்கள்’

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்கள் வாழ்க்கையில் இருந்து சிலரை வெளியேற்றுவதற்கான 10 முக்கியமான காரணங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…காபி குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? பெண்களை பற்றி ஆண்களால் புரிந்துக்கொள்ள முடியாத விஷயங்கள்…

nathan

120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?

nathan

தெரிஞ்சிக்கங்க…உள்ளங்கால் அரிச்சா ஊருக்கு போக போறீங்க-ன்னு சொல்றது உண்மையா?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. மார்புச்சளிக்கு சிறந்த மருத்துவம்

nathan