சிலருக்கு எந்த உணவுகளை சாப்பிட்டாலும் வயறு பலுன் போல ஊதி விடும். இந்த பிரச்சினைக்கு காரணம் வயிற்று பகுதியில் உள்ள அமிலம் உணவுக் குழாய் வழியாக உயர்வதால் ஏற்படுகிறது.
இப்படி ஏற்பட நாம் உண்ணும் சில உணவுகள் தான் காரணம். எனவே இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அமில உணவுகளான ஆரஞ்சு, லெமன், ஆரஞ்சு ஜூஸ், லெமனேடு, க்ரான்பெர்ரீஸ் மற்றும் திராட்சை போன்ற உணவுகளை தவிருங்கள்.
மிளகாய் பொடி, கருப்பு மிளகு, கடுகு போன்ற கார உணவுகள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி எதுக்களித்தல் பிரச்சினையை உண்டு பண்ணுகிறது.
தக்காளி பயன்படுத்தும் உணவுகளான பாஸ்தா, சாஸ், தக்காளி சூப், தக்காளி ஜூஸ் போன்ற உணவுகளும் வயிறு பலுன் போல ஊதிவிடும்.
கொழுப்பு உணவுகளான சாலமி, பர்கர், பீட்சா மற்றும் ஸ்டீக்ஸ் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மாதிரியான உணவுகள் சீரணிப்பதை தாமதமாக்கி வயிற்றில் நீண்ட நேரம் உணவை தங்க வைப்பதால் எதுக்களித்தலை ஏற்படுத்துகிறது.
பால் பொருட்கள் சீரண என்சைம்களை அதிகமாக்குகிறது. எனவே படுப்பதற்கு முன் பால் குடிப்பதை தவிருங்கள். கொழுப்புள்ள பால், சீஸ் மற்றும் மில்க் ஷேக்கிற்கு பதிலாக கொழுப்பு குறைவான கொழுப்பில்லாத பாலை அருந்தலாம். இதன் மூலம் எதுக்களித்தலை தவிர்க்கலாம்.

முக்கிய குறிப்பு
- கொஞ்சம் கொஞ்சமாக நான்கு, ஐந்து வேளை என பிரித்து சாப்பிடுங்கள்.
- சாப்பிட்ட பிறகு 3 மணி நேரம் வரை படுக்காதீர்கள்.
- நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.