மருத்துவ குறிப்பு

உங்களுக்கு நேப்கின்களால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அரிப்பைத் தடுக்க வேண்டுமா? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

பொதுவாக சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் நேப்கின்களால் அந்தரங்க பகுதிகளைச் சுற்றி கடுமையான அரிப்புக்கள் மற்றும் எரிச்சல் ஏற்படுவதுண்டு.

இதற்கு காரணம் நேப்கின்களில் இருந்து வெளிவரும் நறுமணம், சிந்தெடிக் மெட்டீரியல் மற்றும் கெமிக்கல்கள் தான்.

இந்த பிரச்சனையில் இருந்து விடுபட அடிக்கடி நேப்கின்களை மாற்றுவது சிறந்த வழியாக இருந்தாலும், ஏற்கனவே இருக்கும் நேப்கின் அரிப்புக்களை தீர்க்க சில எளிய வழிகளும் உள்ளது.

அந்தவகையில் தற்போது அந்த இயற்கை வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை பாதிக்கப்பட்ட அரிப்புள்ள பகுதியில் தடவி நன்கு உலர வைக்க வேண்டும். இப்படி தினமும் 3 முறை பயன்படுத்த, நேப்கின் அரிப்புக்களில் இருந்து விடுபடலாம்.
  • சிறிது ஐஸ் கட்டிகளை எடுத்து ஒரு துணியில் போட்டுக் கட்டிக் கொள்ள வேண்டும். பின் அதனை பாதிக்கப்பட்ட தொடைப் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
  • தினமும் குளித்த பின்பு, ஒரு பஞ்சுருண்டையை டீ-ட்ரீ ஆயிலில் நனைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் ஒரு கையளவு வேப்பிலையைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதை குளிர வைத்து, அந்த வேப்பிலை நீரால் பாதிக்கப்பட்ட பகுதியைக் கழுவ வேண்டும்.
  • முதலில் பாதிக்கப்பட்ட தொடைப் பகுதியை நீரால் சுத்தம் செய்ய வேண்டும். பின் பஞ்சுருண்டையால் தேங்காய் எண்ணெயை நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். பின்பு இரவு முழுவதும் ஊறு வைக்க வேண்டும்.
  • உங்களுக்கு நேப்கின் அரிப்புக்கள் இருந்தால், குளித்து முடித்தவுடன், தயிரை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவிக் கொள்ளுங்கள். அது நன்கு காய்ந்த பின் நீரால் பாதிக்கப்பட்ட பகுதியைக் கழுவுங்கள். இந்த செயலை தினமும் 3 முறை செய்ய விரைவில் நேப்கின் அரிப்புக்கள் குணமாகும்.53.800.900.160.90
  • குளித்து முடித்த பின், ஆலிவ் ஆயிலை பஞ்சுருண்டையில் நனைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். இப்படி நேப்கின் அரிப்புக்கள் போகும் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.
  • கொத்தமல்லியை நீரில் கழுவ வேண்டும். பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இறுதியில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
  • கற்றாழை இலைகளை வெட்டி, அதில் இருக்கும் ஜெல்லை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை பாதிக்கப்பட்ட தொடைப் பகுதியில் தடவ வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை தடவி வந்தால், விரைவில் குணமாகும்.
  • ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் ஒரு கையளவு புதினா இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதை வடிகட்டி குளிர வைக்க வேண்டும். இந்த நீரைக் கொண்டு அடிக்கடி பாதிக்கப்பட்ட பகுதியைக் கழுவ வேண்டும். இப்படி செய்தால் விரைவில் அரிப்புக்களில் இருந்து விடுபடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button