23.9 C
Chennai
Wednesday, Jan 1, 2025
5shelf life food 110712
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா உடல் எடையைக் குறைக்க சமையலறையில் மறைந்திருக்கும் சில இரகசியங்கள்!!!

நீங்கள் எப்படி பொருட்களை வைத்திருக்கிறீர்கள் மற்றும் சமையலறையை பராமரித்து வருகிறீர்கள் என்ற விஷயத்தில் செய்யும் 10 வகையான மாற்றங்களால், அதிகபட்சமாக உடலில் தங்கியிருக்கும் எடையையும் குறைக்க முடியும்.

ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், நமது சமையலறையில் இருக்கும் சில உணவுப் பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள் ஆகியவை இந்த எண்ணத்திற்கு உலை வைக்கின்றன. ஆனால், நமது வீட்டிலேயே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் வகையில் மாற்றங்களை செய்திட முடியும்.

உணவுகளை முன்கூட்டியே திட்டமிடுவது ஒரு நீண்ட வழிமுறையாக இருந்தாலும், நீங்கள் உணவுப் பொருட்களை எப்படி வாங்குகிறீர்கள் மற்றும் எப்படி உங்களுடைய சமையலறையில் வைக்கிறீர்கள் என்ற விஷயமும் முக்கியமானதாக இருக்கும்.

நல்ல உணவை தயாரித்து எளிதில் அதைக் காணும் வகையிலும் மற்றும் எடுத்து சாப்பிடும் வகையிலும் வைத்திருப்பதன் மூலம், மோசமான உணவுகளை சாப்பிடும் சூழல்களை குறைத்திட முடியும். இதோ, அந்த வகையில் உங்களுடைய சமையலறையை எப்படி மாற்றங்கள் செய்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கொண்டு வரலாம் என்பதைப் பற்றிய குறிப்புகளை இங்கேடஇ கொடுத்துள்ளோம்.

உணவு வைக்கும் இடத்தை சுத்தம் செய்யுங்கள் எளிதில் காணும் வகையில் வைக்கப்பட்டுள்ள உணவு, அதை தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் என்பதால், நாம் இயற்கையாகவே அதை சாப்பிட தூண்டப்படுவோம். எனவே, இது போன்ற முதன்மையான இடங்களில் நொறுக்குத் தீனிகளை வைக்க வேண்டாம்.

பழங்களுக்கான கோப்பை பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் எளிதில் காணும் வகையில் வைத்திருந்தால் அவற்றை அவ்வப்போது சாப்பிட முடியும். ஆனால், இந்த பழங்களில் அமருமாறு ஈக்கள் மற்றும் பூச்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டாம். ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்றவற்றை வீட்டில் வைத்திருங்கள். திராட்சை, அன்னாசி மற்றும் மாம்பழங்களை வைத்திருப்பதை தவிர்க்கவும்.

ஒரு முறை சாப்பிடும் உணவு பாத்திரங்களில் முதலீடு செய்தல் நீங்கள் சாப்பிட்ட பின்னர் மீதமாகும் உணவை விட்டுத் தள்ளுவதற்கு பதிலாக, எதிர்காலத்திற்கான உணவின் அளவை மதியம் அல்லது மாலை வேளைகளுக்காக ஒதுக்கி வைக்கலாம். சில நேரங்களில், கலோரிகள் அதிகமாக இருக்கும் இரவு உணவின் மீதப்பகுதி நொறுக்குத்தீனிகளை விட அதிகமாக உங்களை கவர்ந்து இழுக்கும், ஆனால், அடுத்த நாளின் மதிய வேளையில் பசியை அதிகரித்து விடும் என்ற காரணத்தால் நீங்கள் இதனை செய்ய மாட்டீர்கள். ஃப்ரீஸர்களில் பாதுகாப்பாக வைக்கும் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து வாங்கினால், அது புத்திசாலித்தனமாக முடிவாக இருக்கும்.5shelf life food 110712

ஒளி-புகும் ஜாடிகளை வாங்குங்கள் (Get see-through jars) பள்ளிகளுக்கான மதிய உணவு திட்டப் பரிந்துரைகளை பின்பற்றுங்கள். இந்த உணவில் கலோரிகள் அதிகமாக இருக்கும் காம்ப்ளக்ஸ் ஸ்டார்ச்சுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும், ஆனால் நாம் வேண்டும் வேண்டும் என்று சொல்லும் வரையிலும் பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்கும். சில பழங்களையும், காய்கறிகளையும் முன்னதாகவே வெட்டித் தயார் செய்ய வேண்டும். இவற்றை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கும் போது வெளிப்படையாக தெரியக் கூடிய ஒளி-புகும் பாத்திரங்களில் வைத்து விட்டால், பசி எடுக்கும் போது அந்த பாத்திரம் நம் கையில் இருக்கும்.

ஃப்ரீஸர்களை அதிகம் பயன்படுத்தவும் எவ்வளவு உணவு மீதமாகும் என்று உங்களுக்கு உறுதியாக தெரியாத வேளைகளில் அனைத்தையும் கொண்டு போய் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கத் தேவையில்லை. ஃப்ரீஸரைப் பயன்படுத்தி பின்னர் தேவைப்படும் உணவுகளை வைத்திருக்க முடியும். இது நல்லதொரு உணவு திட்டத்தை உருவாக்கவும் உதவும்.

கண் பார்வைக்கு நேராக ஆரோக்கியமான உணவுகளை வைத்தல் உங்களிடம் உள்ள குளிர்சாதனப் பெட்டியைப் பொறுத்து, நீங்கள் மாற்றங்களை செய்து பலனடையலாம். கீழ் பகுதிகளில் ஃப்ரீஸர் இருக்கக் கூடிய சில குளிர்சாதனப் பெட்டிகளில், காய்கறிகள் வைக்கும் பகுதி கண் பார்வைக்கு நேராக இருக்கும். ஆனால், மேற் பகுதியில் ஃப்ரீஸர் கொண்டுள்ள குளிர்சாதனப் பெட்டிகளில், காய்கறிகள் வைக்கும் இடம், உங்களுடைய முழங்காலுக்கு கீழ் தான் இருக்கும். எனவே அந்த இடத்தில் காய்கறிகளை வைக்க வேண்டாம். ஓளி ஊடுருவ முடியாத, கனமான பாத்திரங்கள் உங்களுடைய ஆரோக்கியமான மற்றும் விரைவில் அழுகக் கூடிய உணவுகளை கண் பார்வையிலிருந்து தவிர்த்து விடுகின்றன. எனவே, பழங்கள் மற்றும் காய்கறிகளை கண் பார்வை படும் இடத்தில் வைத்திருங்கள்.

பழங்கள் மற்றும் பிற நொறுக்குத் தீனிகளை முன்னதாகவே தயார் செய்யுங்கள் நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தவிர்க்க முயற்சி செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு நொறுக்குத் தீனிகளை சாப்பிடவும் செய்வீர்கள். எனவே, இந்த பொருட்களையும் சிறிதளவு வாங்குவது நல்லது. அதன் மூலம் நீங்கள் எதை சாப்பிடுகிறீர்கள் என்பதை சரியாக அறிந்து கொள்ள முடியும்.’

உணவில்லாத பொருட்களை சமையலறையில் சேர்த்தல் நீங்கள் வெளியில் வாங்கும் உணவை விட, வீட்டில் செய்த உணவு மிகவும் ஆரோக்கியமானது. எனவே, வீட்டில் சமையல் செய்வதென்பது, ஒரு சுகமான அனுபவமாகவே இருக்க வேண்டும். சமையலறையின் முகப்பில் புத்தகங்கள், பைகள் மற்றும் பேப்பர்களை வைத்திருந்தால், உணவை தயார் செய்வதற்கு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சமையலறையில் மட்டும் சாப்பிடவும் வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றில்லாமல், சமையலறையில் மட்டும் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வரவும். ஏனெனில், எந்த இடம் சென்றாலும் சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதல் இதன் மூலம் குறையும். பெரும்பாலானவர்கள் டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடவும் அல்லது நடந்து கொண்டே நொறுக்குத் தீனி சாப்பிடவும் செய்கிறார்கள். இந்தவகையான சாப்பிடும் நடவடிக்கைகள் அனைத்தையும் சமையலறைக்குள் சங்கமம் ஆக்கி விடுவது நல்ல பலன் தரும் – எடையும் குறையும்.

சிறிய தட்டுகள் மற்றும் உயரமான, குறுகலான டம்ளர்கள் சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின் படி, நாம் எதை சாப்பிட வேண்டும் மற்றும் எப்படி சாப்பிட வேண்டும் என்ற விஷயத்தை சாப்பிடப் பயன்படுத்தும் தட்டு மற்றும் அதன் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கிறோம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெரிய தட்டுகளைப் பயன்படுத்தும் போது நிறைய சாப்பிடத் துண்டப்படுகிறோம். அதுவும் தட்டில் என்னவெல்லாம் உள்ளதோ அனைத்தையும் ஒரு கை பார்க்கவே விரும்புவோம்.

Related posts

சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா? அப்ப இத படிங்க ……

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

கட்டாயம் தவிர்க்க வேண்டிய உப்பு அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள்!!!

nathan

இரவில் தூங்கும் முன் இதை ஒரு டம்ளர் குடித்தால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் சோம்பல், வாய் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவ குணம் கொண்ட மிளகு

nathan

இதோ எளிய நிவாரணம்! வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும் !

nathan

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க…

nathan

உடல் சூட்டை குறைக்கும் வெந்தயக்களி

nathan

சூப்பர் டிப்ஸ்! ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்!!

nathan