28 C
Chennai
Wednesday, Nov 13, 2024
women friends1a
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா! புதன் கிழமை பிறந்தவங்களோட குணம் எப்படி இருக்கும்-ன்னு கொஞ்சம் பாருங்க…

நீங்கள் திறமைசாலியா? அப்படியானால் கண்டிப்பாக புதன்கிழமையில் பிறந்தவர்களாகத் தான் இருக்க முடியும். வாரத்தின் நான்காவது கிழமையான புதன் கிழமை, புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. இது சூரியக் குடும்பத்திலேயே மிகச்சிறிய கிரகம் தான். மெர்குரி என்னும் புதன் ஞானம், நுண்ணறிவு, நடைமுறை ஆகியவற்றைக் குறிக்கிறது.

இந்த புதன், சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால், புதன் கிழமையில் பிறந்தவர்கள் தொலை நோக்கு திறன் கொண்டவர்களாக இருப்பர். மேலும் இவர்களால் மற்றவர்களது மனதில் தோன்றுவதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இத்தகையவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

நகைச்சுவை குணம்

புதன் கிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாளர்களாக, தொடர்பாளர்களாக இருப்பர். இவர்களது பேச்சுக்கள் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் இருக்கும். நல்ல நகைச்சுவையாளர் என்றும் கூறலாம். இவர்களது நண்பர் கூட்டத்தை எடுத்துக் கொண்டால், இவர்கள் தான் சிறந்தவர்களாக இருப்பர்.

திறமைசாலி ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் துல்லியமாக கவனத்தை செலுத்தி செய்து முடிப்பதில் வல்லவர்கள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். மேலும் இவர்கள் அறிவுசார் நலன்களைக் கொண்டிருப்பார்கள். முக்கியமாக இவர்கள் அனைத்திற்கும் விடை காண வேண்டுமென்ற ஆவலைக் கொண்டிருப்பவர்களாக இருப்பர்.

சுறுசுறுப்பானவர்கள் புதன் கிழமையில் பிறந்தவர்கள் எப்போதும் எதையேனும் யோசித்தவாறு அல்லது செய்தவாறு இருப்பார்கள். இவர்களுக்கு பயணம் மேற்கொள்வது என்பது பிடிக்கும். ஆனால் தொலை தூர பயணத்தை விட குறைந்த தூர பயணம் மேற்கொள்வதையே விரும்புவர். இவர்கள் அடிக்கடி எதிலும் கவனக்குறைவாகவே இருப்பார்கள்.

தொழில் புதன் கிழமை பிறந்தவர்கள் நல்ல பேச்சாளர்கள் என்பதால், இவர்களுக்கு சேல்ஸ்மேன், அரசியல் மற்றும் வக்கில் தொழில் பொருத்தமாக இருக்கும். மேலும் இவர்களுக்கு கணித திறமையும், எதிலும் தீர்வைக் காண வேண்டுமென்ற எண்ணமும் கொண்டிருப்பதால் விஞ்ஞான ஆராய்ச்சியும் சிறப்பாக இருக்கும். பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காண தெரிந்தவர்களாக இருப்பர்.women friends1a

அதிக ஆர்வம் கொண்டவர் புதன் கிழமையில் பிறந்தவர்களது ஆர்வம் தான் அவர்களது தொழில் வாழ்க்கையை துரிதப்படுத்துகின்ற முக்கிய காரணி. இதனால் தான் புதன் கிழமை பிறந்தவர்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடிகிறது.

நண்பர்கள் புதன் கிழமை பிறந்தவர்கள் நகைச்சுவை குணம் கொண்டவர்கள் என்பதால், இவர்களுக்கு நண்பர்களை அமைத்துக் கொள்வதில் சிரமமே இருக்காது. இவர்களது பேச்சுத் திறமையே, இவர்களுக்கு நண்பர்களை அமைத்துக் கொடுக்கும்.
வெளிப்படை பேச்சு புதன் கிழமையில் பிறந்தவர்கள் எதையும் மனதில் வைத்துக் கொண்டிருக்காமல், தன் மனதில் பட்டதை பளிச்சென்று வெளிப்படையாக பேசி விடுவார்கள். இதனாலேயே இவர்கள் அனைவராலும் ஈர்க்கப்படுவர். மேலும் இந்த கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலியாகவும் இருப்பர்.

காதல் புதன் கிழமையில் பிறந்தவர்களது காதல் வாழ்க்கை ரோலர்கோஸ்டரில் பயணம் மேற்கொள்வது போன்று இருக்கும். சண்டை என வந்துவிட்டால், இவர்களது பேச்சுக்கள் காயப்படுத்தும் வகையில் இருக்கும். இவர்களிடம் உள்ள சிறந்த பண்பு, என்ன பிரச்சனை வந்தாலும் வாழ்க்கைத் துணையை மாற்ற நினைக்கமாட்டார்கள்.

திருமணம் புதன்கிழமையில் பிறந்தவர்கள் கவனக்குறைவாளர்கள் என்பதால், உறவில் பொறுப்பில்லாத நபராக இருப்பர். இவர்கள் நன்கு பேசுவார்களே தவிர, சொல்வதைக் கேட்கமாட்டார்கள். இதனாலேயே இந்த கிழமையில் பிறந்தவர்கள் தனக்கு அமைந்த வாழ்க்கை துணையால் ஈர்க்கப்படாமல், துணையின் அன்பைப் பெற முடியாமல் தவிப்பார்கள். இந்த நிலையைத் தவிர்ப்பதற்கு, வாழ்க்கைத் துணை சொல்வதை காது கொடுத்து கேளுங்கள், அவர்கள் உணர்வை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

Related posts

இத படிங்க தாய்ப்பாலூட்டும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

nathan

பழங்களில் உப்பு தூவி சாப்பிடலாமா?

nathan

முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை ?தெரிஞ்சிக்கங்க…

nathan

எடையை குறைக்கனுமா? இந்த அற்புத ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தாலே போதும்

nathan

இதோ உங்களுக்காக உடலுக்கு பிஸ்கட் அதிகம் சாப்பிடுவது நல்லதா?

nathan

இயற்கை முறையில் குடிநீரை வீட்டில் சுத்திகரிப்பது எப்படி?

nathan

புறந்தள்ளும் காய்கறிகளில் உண்டு எல்லையற்ற பலன்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இந்திய ஆண்களின் மனதில் குடி கொண்டிருக்கும் 7 ஆசைகள்!!!

nathan

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்

nathan