ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

நூற்றில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இந்த நோய்த் தாக்கு அறிகுறி இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் தைராய்டு என்பது உலக வியாதியாக மாறி வருகிறது. குறிப்பாக பெண்களை அதிகளவில் தாக்கும் தைராய்டு உணவு மற்றும் ஹார்மோன் பிரச்சனைளுக்கு தொடர்புடையது.

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் என்று அடுக்கிக் கொண்டே போகும் பலரின் புலம்பலுகளை கேட்டிருப்போம்.

ஆனால், உண்மையிலேயே இந்த அறிகுறி எல்லாமே தைராய்டு நோயின் அறிகுறி தான் என்று சொல்லி விட முடியாது.

1096231935f81f205f71fe17f8ded4858bbcb02977771710502154823537

அதே சமயத்தில் நூற்றில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இந்த நோய்த் தாக்கு அறிகுறி இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

சரி இந்த தைராய்டு பிரச்சனையை எப்படி விரட்டுவது என்றால் வெறும் மருந்துகள் மட்டும் பற்றாது. அதனுடன் முறையான உணவு பழக்கமும் வேண்டும். அப்படியான உணவுகளில் தைராய்டு இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பால் பொருட்கள்:

கால்சியம் அதிகம் நிறைந்த பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருளை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதே சமயம் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிப்பது நல்லது.

ஆல்கஹால் :

தைராய்டு பிரச்சனை இருந்தால, ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.

பேக்கரி உணவுகள்:

பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகளில் ஓரளவு அயோடின் இருந்தாலும், செரிமானம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டாக்கும். எனவே பேக்கரிப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.

முட்டைக் கோஸ், காலிஃப்ளவர்:

அயோடின் உறிஞ்சும் தன்மைக் கொண்ட முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் ஹார்மோன்களில் பஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவே, முடிந்த வரையில் இந்த மாதிரியான காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

மயோனைஸ் மற்றும் வெண்ணெய்:

இந்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, அதனால் தைராக்ஸின் ஹார்மோனின் அளவு மேலும் குறையும்.பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button