30.8 C
Chennai
Monday, May 20, 2024
கர்ப்பிணி பெண்களுக்குமருத்துவ குறிப்பு

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடலின் உறுப்புகள் பெரிதாகின்றன. குறிப்பாக மார்பு, வயிறு, விலா எலும்புகள் பெரிதாகிறது. இதற்கு முக்கிய காரணம் பிட்யூட்டரி சுரப்பிதான் என்கின்றனர் மருத்துவர்கள். மனிதர்களின் மூளையில் அடிபாகத்தில் உள்ள இந்த சுரப்பி ப்ரோலாக்டின் என்னும் ஹார்மோனை சுரக்கிறது.ப்ரோலாக்டின் ஆண், பெண் இருவரிடமும் காணப்படுகிறது. ஆனால் பெண்கள் கர்ப்பமடைந்தால் இதன் சுரப்பு 10 மடங்கு அதிகரிக்கிறது. இதன் முக்கிய பணி கர்ப்பிணி பெண்களின் தாய்ப்பால் உற்பத்தியை தூண்டுவதுதான். கர்ப்பிணிகளின் மார்பகத்தின் பால் சுரக்கும் சுரப்பிகளை “ப்ரோலாக்டின்” உப்ப வைத்து பெரிதாக்குகிறது.கர்ப்ப காலத்தின் போது ப்ரோலாக்டின் பிட்யூட்ரியில் மட்டுமன்றி மார்பக திசுக்களிலும், கர்பப்பை ஈரமான சுவர்களிலும் உண்டாகிறது. குழந்தை பிறந்ததும் மூளை, பிட்யூட்டரியை, ப்ரோலாக்டினை ‘ரிலீஸ்’ செய்ய ஆணையிடும். கர்ப்ப காலத்தில் அதிகமாகும் பெண் ஹார்மோன் எஸ்ட்ரோஜன், ப்ரோலாக்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது.இதனால் குழந்தை பிறந்தவுடன் தரவேண்டிய தாய்ப்பால் உற்பத்தியை ப்ரோலாக்டின் தயாராக வைக்க உதவுகிறது. பிரசவத்திற்கு பின் பிறந்த குழந்தை தாய்பாலை பருகும் போது, ப்ரோலாக்டின் உற்பத்தி மேலும் தூண்டப்படுகிறது. அடுத்த பால் கொடுக்கும் வேளைக்கு தயாராக பால் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

கர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களாகிய நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம், உதரவிதானம் இறுக்கமடைதல்,விலா அகலப்படுத்துதல் போன்ற காரணங்களால் மார்பு மற்றும் முதுகு வலி ஏற்படுகிறது. கர்ப்பகாலத்தில் சிறந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். நெஞ்சு எரிச்சல் தர கூடிய உணவு வகைகளை தவிர்க்கலாம். அதிகளவில் தண்ணீர் பருக வேண்டும்.

அது சீரான பிரசவத்திற்கு வழி வகுக்கும். பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு மார்பு இறுக்கம் இயல்பானதாக கருதப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் அவை கடுமையான பிரச்சனைகனை ஏற்படுத்தக்கூடும். அதாவது மார்பு அழுத்தம் அதிகமாக இருந்தால் ஆஸ்துமா, மாரடைப்பு இரத்தம் உறைதல் அல்லது ஏதேனும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இரவில் நட்ஸ் சாப்பிடலாமா கூடாதா?

nathan

நின்று கொண்டே வேலை செய்வதால் ஏற்படும் வேதனை

nathan

பாரா தைராய்டு சுரப்பி

nathan

மார்பக வீக்கம்.. குமட்டல்! இன்னும் பல அறிகுறிகள்?

nathan

கண்டிப்பாக வாசியுங்க…. ரத்த நாள அடைப்பை குணமாக்கும் கைமருந்துகள்

nathan

சூப்பர் டிப்ஸ் உடலில் தேங்கி இருக்கும் சளியை உடனே அகற்ற பூண்டை எப்படி உட்கொள்ள வேண்டும்?

nathan

வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ளும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

nathan

பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துகொண்டால் என்ன ஆகும்?

nathan

பெண்களின் நோய்களை குணப்படுத்தும் கசகசா லேகியம்

nathan