25 C
Chennai
Wednesday, Dec 25, 2024
jjggg
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்.. தினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்…!

சோம்பு மருத்துவத்திற்குப் பயன்படும் ஓர் மூலிகைத் தாவரம் ஆகும். ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

சோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும். அளவுக்கு அதிகமாக பசி எடுப்பவர்களுக்கு சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும்.

சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தில் சுத்தப்படுத்தும். மேலும் உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.
jjggg
தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சோம்பை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், வயிற்றுவலி நீங்கும்.

சோம்பு தண்ணீர் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற வழிவகுக்கும்.

சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.

சோம்பு உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும் செய்கின்றது.

நீண்ட நாட்களாகப் பசியெடுக்காமல் அவதிப்படுபவர்களுக்குக் கூட, பசி உணர்வை சோம்புத் தூண்டுகின்றது. கடினமான உணவு வகைகளையும் அலட்டல் இல்லாமல் செரிக்கவைக்கும் குணம் இதற்கு உண்டு.

Related posts

இதெல்லாம் தெரியாமகூட செகண்ட் ஹேண்டாக வாங்கிடாதீங்க….தெரிஞ்சிக்கங்க…

nathan

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!

nathan

ஒரு கல்லை தேர்ந்தெடுங்கள்! உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்லறோம்!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவதினால் கிடைக்கும் பலன்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயாளிகள் மக்காச்சோளம் ஏன் சாப்பிடக்கூடாது..!

nathan

மென்சுரல் கப்.! மாதவிடாய் சமயத்தில் உபயோகிப்பது எப்படி?.!!

nathan

வியர்வை நாற்றம் நீங்கிட..!

nathan

கண் இமைகளின் முடி வளர்ச்சி குறைவாக உள்ளதா? தெரிஞ்சிக்கங்க…

nathan

முட்டை அவித்து சாப்பிடுவோருக்கு:-

nathan