23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
torture
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…ஆண்களால் புரிந்து கொள்ள முடியாத பெண்களின் 20 பழக்கங்கள்!!!

ஆண்களை விட பெண்கள் பொறுமைசாலி என்று சொல்வார்கள். அது உண்மை தான். சில நேரங்களில் பெண்களின் பழக்கங்கள் ஆண்களுக்கு புரிவதில்லை, ஒரு கட்டத்தில் அது அவர்களின் பொறுமையை சோதித்துவிடும். அதனால் தான் என்னவோ, ஆண்களை விட பெண்கள் பொறுமைசாலிகள் என்று கூறியுள்ளனர். அப்படி பொறுமையை சோதித்து, ஆண்களின் மண்டையை பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன தான் பெண்கள் செய்கின்றனர்?

எந்த ஒரு திட்டமிடுதலுமின்றி தங்களிடம் சுலபமாக ஒத்துப் போகலாம் என்று தான் பல பெண்கள் நம்புகிறார்கள், ஆண்களையும் நம்பச் சொல்கிறார்கள். ஆனால் அது அல்ல உண்மை. அவர்களுக்கு அனைத்துமே நன்றாக ஒருங்கிணைந்து, எதிர்பார்த்தப் படி நடந்து, திட்டமிட்டபடி போக வேண்டும். ஆனால் இது மேலோட்டம் தான். பல வருடங்களாக பெண்கள் பல பழக்கவழக்கத்தை தங்களுக்குள் உண்டாக்கி, அதை பின்பற்றியும் வருகின்றனர். இதில் என்ன கொடுமை என்றால், இது எதனால் நடக்கிறது என்பது ஆண்களுக்கு புரிவதில்லை. அப்படிப்பட்ட சில பெண்களின் பழக்கவழக்கங்களை பற்றி இப்போது பார்க்கலாமா?

அறைக்கு கும்பலாக செல்வது பெண்கள் அறைக்கு, பெண்கள் கும்பலாக சென்று அப்படி என்ன தான் செய்கிறார்கள்? இந்த கேள்வி பல ஆண்களின் மனதில் ஓடுவதோடு மட்டுமல்லாமல், திடீரென்று இப்படி எழுந்து போய் பெண்கள் அறைக்குள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கும் அளவிற்கு செல்வோம். நம்மை போல் பலபேர், பெண்களின் இந்த ரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்தாலும், இன்று வரை அந்த மர்ம முடிச்சு கழற்றப்படாமலே இருக்கின்றன.

இங்கே கொஞ்சம் பவுடர்; அங்கே கொஞ்சம் லிப்ஸ்டிக் பல பெண்கள் ஒரு சின்ன அழகு சாதன கடையையே தங்கள் பைகளில் வைத்திருப்பார்கள். ஒரு பார்டிக்கு செல்லும் போது, வீட்டிலேயே நல்ல மேக்-கப் போட்டு விட்டு தான் பெண்கள் கிளம்புவார்கள். ஒரு 15 நிமிடம் காரில் பயணம் மேற்கொண்ட பிறகு, பார்ட்டி நடக்கும் வளாகத்திற்குள் நுழையும் முன் அங்கே இங்கே என்று மறுபடியும் தங்கள் முகத்தினை சரிசெய்து கொள்வார்கள். இந்த தருணம் தான் ஆண்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். வீட்டில் தான் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மேக்-கப் போட்டு கொண்டார்களே, பின் ஏன் மறுபடியும் இதை செய்கிறார்கள் என்ற விடை தெரியாத கேள்வியை எழுப்பும்.

சிரிப்பது எல்லா பெண்களும் கெக்கபுக்கவென சிரிப்பது வழக்கமே. சொல்லப்போனால் அதை அவர்கள் விரும்பவே செய்வார்கள். படபடப்பு, அதீத மகிழ்ச்சி, ரகசியத்தை மறைக்கும் தோரணை இப்படி பல வகையான நேரத்தில், அதற்கேற்ப சிரிப்பார்கள். இதை ஒரு பழக்கமாக்கியதால் அவர்கள் சிரிப்பது வழக்கமாகி இருக்கலாம். ஆனால் காரணம் இல்லாமல் சிரிக்க மாட்டார்கள். இருப்பினும், அந்த காரணம் தான் என்றுமே ஒரு ஆணுக்கு புரிவதில்லை.torture

நான் குண்டாக இருக்கிறேனா? உண்மையை சொன்னால், இப்படி கேட்பதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கின்றனர் பெண்கள். தங்கள் உடல் எடை மீதும், அழகின் மீதும், அதிக கவனம் இருப்பது வாஸ்தவம் தான். ஆனால் தங்களின் ஆழ் மனது கூறிக் கொண்டே இருப்பதால், இக்கேள்வியை ஒரு ஆணிடம் பல முறை கேட்க முற்படுவர். ஆகவே அடுத்த முறை உங்களிடம் இந்த கேள்வியை கேட்கும் போது, அது அவர்களிடம் நன்கு பதியும் படியான பதிலை கூறுங்கள்.

பேஸ் பேக் முகத்திற்கு பொலிவு மற்றும் மினுமினுப்பை அதிகரித்து, ஈரப்பசையுள்ள சருமத்தை பெற பெண்கள் பேஸ் பேக் பயன்படுத்துவது ஆண்களுக்கு தெரியும். ஆனால் உண்மையிலேயே தங்கள் மனைவி இதனை பயன்படுத்துவதால் பெறப் போகும் மாற்றத்தை ஒரு ஆண் கூட உணர்வதில்லை. சொல்லப்போனால், தங்கள் சருமத்தை பேஸ் பேக் தான் முழுமையாக மேம்படுத்தியது என்று 100% நம்பும் எந்த ஒரு பெண்ணும் கிடையாது.

5 ஆடைகளை அணிந்து பார்த்து விட்டு, புதுசு வாங்க முடிவு செய்வது அனைத்து பெண்களும் இதனை கண்டிப்பாக செய்வார்கள். ஒரு பார்ட்டிக்கு செல்லும் முன்பு, தங்கள் அலமாரியில் இருந்து அனைத்து ஆடைகளையும் போட்டு பார்த்து விட்டு, எதுவும் சரியில்லை என்று கூறி விட்டு, உடனடியாக புதிய ஆடை வாங்க முடிவு செய்வார்கள். இரண்டு செட் ஆடைகளை வைத்து, வாரம் முழுவதும் சமாளிக்கும் ஆண்களுக்கு, இந்த விஷயம் ஆச்சரியமாக தான் இருக்கும்.

பர்ஸ் பொதுவாக பெண்களின் பர்சில் ஒரு சாவி கொத்து மற்றும் ஒரு லிப்ஸ்டிக் வைக்கும் அளவிற்கு தான் இடம் இருக்கும். இதர பொருட்களான சீப்பு, மொபைல் போன், டிஷ்யூ பேப்பர்கள், பவுடர் போன்றவைகள் எல்லாம் அவர்களின் கார் டேஷ்போர்டு அல்லது தங்கள் கணவனின் பேண்ட் பையில் தான் வைப்பார்கள். இப்படி ஒரு சிறிய கைப்பை எந்த வகையிலும் பயன் அளிக்காத போது, அதனை ஏன் சுமக்க வேண்டும்?

பெரிய ஹேன்ட் பேக் கண்டிப்பாக வெளியில் செல்லும் போது, பெண்கள் ஹேன்ட் பேக் வைத்திருக்க வேண்டும். ஆனால் தாஜ் மகாலையே வைக்கும் அளவிற்கு அவ்வளவு பெரிய பையை எதற்காக எடுத்துச் செல்ல எண்டும்?

பாதம்/நகங்களுக்கு லோஷன் முகம், தலைமுடி, உடல் போன்றவைகளுக்கு க்ரீம் பயன்படுத்துவது என்பது ஒரு ரகம். ஆனால் பாதம், கால் விரல்கள், நகங்கள் என ஒவ்வொரு அங்கங்களுக்கும் தனித் தனியாக க்ரீம் வாங்கும் பழக்கம் பெண்களிடம் ஏன் இருக்கிறது என்பது ஆண்களுக்கு புரிவதில்லை. நகமும் விரல்களும் உடம்பில் உள்ள பகுதிகள் தான். பின் எதற்காக தனித்தனி க்ரீம் தேவை என்பது தான் ஆண்களின் விடை தெரியாத கேள்வியாகும்.

ரிப்பன்கள் ரிப்பன்கள் என்றால் பொதுவாக பெண்களுக்கு பிரியமான ஒன்று. தங்கள் தலை முடியில் கட்டவோ, பேப்பர்களை ஒன்றாக கட்டவோ, பரிசு பொருளின் மேல் கட்டவோ அல்லது ஒரு தொப்பியை அலங்கரிக்கவோ அதை பயன்படுத்துகின்றனர். அதனால் ஒவ்வொரு பெண்ணும் ரிப்பன்களை வைத்திருப்பார்கள். அது இல்லாமல் அவர்களால் இருக்க முடிவதில்லை. இது பிறப்பினால் வந்ததா அல்லது பழக்கத்தினால் ஏற்பட்டதா?

வாழ்த்து அட்டைகள் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் வாழ்த்து அனுப்பும் காலம் வந்து விட்டாலும், வாழ்த்து அட்டைகள் வாங்கும் பழக்கத்தை இன்னும் பெண்கள் நிறுத்திய பாடில்லை. அது ஏன் என்பதும் ஆண்களுக்கு புரிவதில்லை. வாழ்த்து அட்டை என்பது பிறந்த நாள், திருமண நாள் மற்றும் அனைத்து கொண்டாட்டங்களும் வாங்கப்படும்.

சுத்தப்படுத்துதலும் சீரமைப்பதும் பல பெண்களுக்கு தங்கள் பொருட்களை சுத்தப்படுத்தி, அதை சீரமைப்பது என்பது ஒரு பொழுது போக்காக உள்ளது. ஆனால் அதோடு நின்றால் பரவாயில்லை. சுத்தமான கண்ணாடி மேலும் சுத்தமாகும் வரை, குஷன்களெல்லாம் நல்ல பார்வையுடன் வைக்கப்படும் வரை; இப்படி நுணுக்கமாக சீரமைக்கும் வரை அவர்கள் ஓயப் போவதில்லை.

பீங்கான் பொருள்கள் மற்றும் கரண்டி வகைகள் இந்த இரண்டுமே பெண்கள் விரும்புபவை தான். அவர்களின் சமயலறைக்கு வந்தால், பழங்கள் சாப்பிட முட்கரண்டி, டெசெர்ட் சாப்பிட கரண்டி, சாலட் கிண்ணம், உணவு பரிமாற்ற பாத்திரங்கள், உணவு சாப்பிடும் பாத்திரங்கள், சின்ன பாத்திரங்கள், பெரிய பாத்திரங்கள்… இந்த பட்டியலை சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு ஆண் தான் பயன்படுத்தும் பாத்திரம், ஸ்பூன், முட்கரண்டி என அனைத்தையயும் பார்த்து தெரிந்து கொள்வதற்குள்ளேயே, அவன் பசி பறந்து போய்விடும்.

உடை மாற்றுதல் உடை மாற்ற பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். முடிந்தால் காலை, மதியம், மாலை, இரவு, நடு இரவு என ஐந்து வேளைக்கும் வேறு வேறு ஆடை அணிந்து ஒரு நாளைக்கு ஐந்து வித தோற்றத்துடன் இருக்க விரும்புவார்கள். ஆனால் அப்படி மட்டும் நடந்தால், முடிந்தது கதை. பணம் போன்ற பிரச்சனைகள் இருப்பதால், இவ்வளவு தூரத்திற்கு பல பெண்கள் இறங்குவதில்லை.

ஆமானா இல்ல, இல்லனா ஆமா பெண்களின் இந்த ஒரு பழக்கத்தை அளவிடவே முடியவில்லை என்று அனைத்து ஆண்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் இல்லை என்று கூற நினைப்பதை, எதற்கு சரி என்று கூற வேண்டும்? அதேபோல் சரி என்று கூற விரும்புவதை, எதற்காக இல்லை என்று கூற வேண்டும்? ஒருவேளை அவர்களின் படைப்பே இப்படியாகத் தான் இருக்குமா? இருக்கலாம்…

விரோதியிடம் நட்பு பாராட்டுவது இரு பெண்கள் நேருக்கு நேர் பார்க்கும் போது, கட்டி அணைப்பார்கள். ஆனால் பின்னால் சென்று, ஒருவரை பற்றி மற்றவர் குறை சொல்வார்கள். பெண்களின் இந்த குணத்தை அனைவரும் அறிவோம். இப்படி விரோதியை நண்பனை போல் பாவலா காட்டும் பாணி ஆண்களுக்கு புரிவதில்லை. ஏனென்றால், ஆண்களின் உலகத்தில் ஒன்று நட்பு அல்லது விரோதம், ஒருவர் மீது ஏதாவது ஒரு குணத்தை தான் வெளிப்படுத்துவார்கள்.

வம்பில் மாட்டிவிடும் கேள்விகள் “யார் கவர்ச்சியாக இருக்கிறார்கள்? உங்கள் முன்னாள் காதலியா அல்லது 2 நிமிடங்களுக்கு முன்னாள் நீங்கள் ஜொள்ளு விட்ட பெண்ணா?”. என்ன கேள்வியின் சூட்சமம் புரிகிறதா? அவர்களுக்கு உங்களின் முன்னாள் காதலியை பற்றியும் அக்கறை இல்லை, நீங்கள் ஜொள்ளு விட்ட பெண்ணை பற்றியும் அக்கறை இல்லை. நீங்கள் இன்னொரு பெண்ணை பார்த்து ஜொள்ளு விட்ட கடுப்பில் தான் இப்படி கேள்விகள் பாயும். அதனை நேரடி கேள்வியாலும் கேட்க மாட்டார்கள். மாறாக இப்படி எடக்கு மடக்காக கேள்விகள் கேட்டு, உங்களுக்கு டார்ச்சர் கொடுப்பார்கள். பழக்கத்தினால் தான் இப்படி நடக்கிறார்கள்.

கடைக்கு செல்லுதல் பல ஆண்டு காலமாக சொல்லப்படும் பிரச்சனை தான் இது. வேறு வழி இல்லாமல் பெண்களுக்கு கடைகளுக்கு செல்ல பிடிக்கும் என்று ஆண்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் ஆழமாக சென்று பார்த்தால், பெண்கள் ஏன் கடைகளுக்கு செல்வதில் இவ்வளவு நாட்டம் கொண்டுள்ளனர் என்பதை ஆண்களால் அளவிடவே முடியவில்லை. இப்படி சோர்வை ஏற்படுத்தும் ஒரு பழக்கத்தை எப்படி அவர்கள் விரும்பி செய்கின்றனர்.

பதிலை கேட்க விரும்பாவிட்டாலும், கேள்வி கேட்க விரும்புவது ஆண்களிடம் இருந்து பதிலை கேட்க விரும்பாவிட்டாலும், அவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். ஆண்கள் பதில் சொல்லும் வரை, அவர்களை விடுவதில்லை. பதில் சொன்னால் அதற்கும் கத்துவார்கள். அட போங்கப்பா, பெண்களும் அவர்கள் பழக்கமும்!

ஊர்க்கதை பேசுவது ஆண்களும் ஊர்க்கதை பேசுகின்றனர். ஆனால் அதை வைத்தே எப்படி பெண்களால் வாழ்க்கையை ஓட்ட முடிகிறது என்பது ஆண்களுக்கு விளங்குவதில்லை. பொழுது விடிந்து பொழுது முடியும் வரை, வாரத்தில் அனைத்து நாளும் 24 நான்கு மணி நேரமும் ஊர்க்கதை பேச சொன்னால், அவர்களால் அது முடியும். இதில் உண்மை என்னவென்றால், இந்த பழக்கம் பரம்பரையாக தொற்றிக் கொள்கிறது. இது ஒரு முக்கிய பரிணாம கருத்தாக இருப்பதால், இதை பற்றி புரிந்து கொள்ள ஆண்கள் தங்கள் மண்டையை போட்டு உடைத்து கொள்ள கூடாது.

Related posts

குழந்தைப் பேறுக்கு இந்த மரம் ஒரு வரம்! கல்யாண முருங்கையின் மருத்துவ பயன்கள் ..

nathan

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்

nathan

வெந்நீரில் உப்பு கலந்து கண்களை கழுவுங்கள்!

nathan

சிவப்பு அரிசி ஏன் சிறப்பு? வேண்டாம் வெள்ளை அரிசி..!

nathan

வேர்க்கடலை. ஏழைகளின் அசைவ உணவு!

nathan

உங்களுக்கு தெரியுமா நிலவேம்பு கஷாயத்தின் மகத்துவங்கள் என்ன தெரியுமா?

nathan

உங்களுக்கு நெஞ்சில் ஏற்படுகிற அசிடிட்டி வலியை தீர்க்க சூப்பர் டிப்ஸ்!

nathan

பெண்களே உஷார்!பெண்கள் இறைச்சி அதிகம் சாப்பிடக்கூடாது ஏன்னு தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா மூல நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள!

nathan