பருப்பு சாம்பார் வைக்கும்போது துவரம் பருப்புடன் கொஞ்சம் வெந்தயத்தையும் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் நாள் முழுவதும் கெடாமல் இருக்கும்.
மிளகாய் வத்தலை வறுக்கும்போது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் தும்மல் ஏற்படாது.
மைசூர் பாகு செய்வதற்கு கடலை மாவை டால்டாவில் கலந்து பின் சர்க்கரை பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.
தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால் குருமா வாசனையுடன் சுவையாக இருக்கும்.
காரக்குழம்பு, வத்தல் குழம்பில் காரம் அதிகமானால் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.
பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்புதன்மை போய்விடும்.
உருளைக்கிழங்கை வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் பதமாக இருக்கும்.
உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.