27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
bottlegourdjuice
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோய் வராமல் இருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தியது இதை தானாம்!

சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாத ஒரு கோளாறு. இப்பிரச்சனையை நம்மால் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது சற்று கடினம் தான். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ அறிவியலில், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் அளவை மேம்படுத்தவும் உதவும் சில வழிகள் உள்ளன. அதில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பான நன்மை அளிக்கும் ஒரு காய் தான் சுரைக்காய். சர்க்கரை நோய் இருப்பவர்கள் சுரைக்காயை சாப்பிட்டால் அல்லது சுரைக்காய் ஜூஸ் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை எளிதில் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

சுரைக்காய் மற்றும் சர்க்கரை நோய் சுரைக்காயில் 92 சதவீதம் நீர்ச்சத்து மற்றும் 8 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமான காய்கறியாக கருதப்படுகிறது. சுரைக்காய் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவைப் பராமரிக்க உதவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சுரைக்காயை எடுத்தால், இரத்த சர்க்கரை அளவு மாயமாய் குறைவதைக் காணலாம்.bottlegourdjuice

ஆய்வு 2013 ஆம் ஆண்டு இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (IICT) மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் உட்கொள்ளும் (13) காய்கறிகளில் காணப்படும் நொதிகள் வகை 2 நீரிழிவு மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவியது தெரிய வந்துள்ளது.

முள்ளங்கி இந்த ஆய்வில் முள்ளங்கி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் காய்கறியாக கண்டறியப்பட்டது. முள்ளங்கிக்கு அடுத்தப்படியாக சுரைக்காய் தான் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த ஆய்வில் சுரைக்காயில் உள்ள புரோட்டீனான தைரோசின் பாஸ்படேஸ்-1 நொதி, உடலில் சரியான இன்சுலின் அளவைப் பராமரிக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். இப்போது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சுரைக்காயை சாப்பிடும் சில வழிகளைக் காண்போம்.

வழி #1 சுரைக்காயை சாப்பிடும் சிறப்பான வழி, அதைக் கொண்டு கிரேவி தயாரிப்பது தான். ஆனால் அந்த காயைக் கொண்டு கிரேவி தயாரிக்கும் போது, அதில் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களை அதிகம் சேர்க்காதீர்கள்.

வழி #2 சுரைக்காயை சாப்பிடுவதற்கான மற்றொரு சிறப்பான வழி, தயிருடன் சேர்த்து உண்பது தான். சுரைக்காய் ரெய்தா இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

வழி #3 இரத்த சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருந்தால், தினமும் காலையில் ஒரு டம்ளர் சுரைக்காய் ஜூஸைக் குடியுங்கள். அதுவும் காலை உணவின் போது சுரைக்காய் ஜூஸை எடுக்க வேண்டும். இதனால் இரத்த சர்க்கரை அளவு வேகமாக கட்டுப்பாட்டிற்கு வரும்.

வழி #4 சுரைக்காயை சாலட் வடிவிலும் சாப்பிடுவது சிறப்பான வழி. அதற்கு சுரைக்காயை வேக வைத்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் இதர நற்பதமான காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடவும்.

வழி #5 சுரைக்காயை பருப்பு வகைகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அதுவும் சுரைக்காய் மற்றும் ஏதேனும் ஒரு பருப்பை குக்கரில் போட்டு, நீர் ஊற்றி விசில் விட்டு இறக்கி, சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுங்கள். இது ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுவையானதும் கூட.

ஆயுர்வேதத்தில் சுரைக்காய் ஆயுர்வேதத்தில் சுரைக்காய் மிகவும் ஆரோக்கியமான காய்கறியாக கருதப்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி, சுரைக்காய் உடலில் உள்ள பித்தத்தை நீக்கி, வயிற்றை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். சுரைக்காயை ஒருவர் உட்கொண்டால், அது வயிற்று பிரச்சனைகளை நீக்குவதோடு, செரிமான மண்டலத்தை ரிலாக்ஸாக வைக்கும். அதிலும் சுரைக்காயை ஜூஸாக குடிப்பதே சிறந்தது. இதனால் அதில் உள்ள ஒட்டுமொத்த வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கிடைக்கும்.

 

Related posts

வெளிநாடுகளில் மவுசு காட்டும் தமிழர்களின் பாரம்பரிய உணவு!!கொரோனாவை கட்டுப்படுத்தும் ரசம்!

nathan

சுவையான ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

nathan

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட சிறந்த பழம் எது?

nathan

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகள்

nathan

water apple in tamil – வாட்டர் ஆப்பிள் பழம்

nathan

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்காத பயன்கள்:

nathan

உங்களுக்கு தெரியுமா கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள்…!!

nathan

சிவப்பு நிற பழங்களில் எவ்வளவு நன்மைகள்? தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இரவு 9 மணிக்கு பின் உணவு உண்டால் என்னவாகும் தெரியுமா?

nathan