33.3 C
Chennai
Saturday, May 18, 2024
images 1
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்துக் களி

உளுந்துக் களி
தேவையானவை: பச்சரிசி – கால் கிலோ, கறுப்பு உளுந்து – 100 கிராம், மிளகு – 20, சீரகம் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டி, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்த மாவில் கலக்கவும். பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, மாவை சிறிது சிறிதாகக் கொட்டி அடிப்பிடிக்காமல் கிளறவும். களிப் பதம் வந்ததும் நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி இறக்கவும். இந்தக் களி, கருப்பட்டிப் பாகில் தொட்டுச் சாப்பிட அருமையாக இருக்கும்

images 1

.மருத்துவப் பயன்: இடுப்பு எலும்பு வலுப் பெறுவதற்காக, பெண்கள் வயதுக்கு வரும்போது இந்தக் களியைச் செய்து கொடுப்பது வழக்கம். பிரசவத்தை எதிர்கொள்ளும்போது இடுப்புக்கு வலு சேர்ப்பதற்காக இதைப் பெண்களுக்கு செய்து கொடுப்பர். கை, கால், முதுகில் ஏற்படும் வலியையும் போக்கும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியம் முதல் புற்றுநோய் தடுப்பு வரை உதவும் புளி

nathan

சுவையான வெஜிடேபிள் மயோனைஸ் சாண்ட்விச் ரெசிபி

nathan

உங்களுக்கு தெரியுமா ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் 12 அற்புத காய்கனிகள் இதுவே..!

nathan

ஆண்கள் கட்டாயம் இந்த 10 விஷயங்களுக்காக கற்றாழையை சாப்பிடவேண்டும் தெரியுமா?

nathan

ரத்த சோகையினை அடியோடு விரட்ட வேண்டுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா முட்டையை விட அதிக சத்துக்கள் நிறைந்த சில உணவுப்பொருட்கள்

nathan

பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பை போக்கும் தனியா பத்திய குழம்பு

nathan

உருளைக்கிழங்கை எந்த முறையில் சாப்பிட வேண்டும்

nathan

சரும அழகை பாதுகாக்க தேவையான உணவுகள்

nathan