29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
324670
ஆரோக்கியம் குறிப்புகள்

நீங்கள் வீட்ல ரெடிமேட் மாவு வாங்கி இட்லி, தோசை பண்றீங்களா? கட்டாயம் இதை படியுங்கள்

தினமும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு வாங்கி யூஸ் பண்றீங்களா? இத படிச்சா இனி வாங்கவே மாட்டீங்க. உலக ஆராய்ச்சியாளர்களால் காலை உணவுக்கு மிகச் சிறந்த உணவு எனக் கருதப்படும் ஆரோக்கிய உணவாக இட்லி தான் முதல் இடத்தில் இருக்கிறது.

அதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால், இட்லியில் நாம் எண்ணெய் சேர்ப்பதில்லை. அதோடு இந்த இட்லி நீராவி மூலமாக சமைக்கப்படுகிறது. அதுதான் இதிலிருக்கும் மிகப்பெரிய ஆரோக்கியமான விஷயம்

ரெடிமேட் மாவு

இதனால் செரிமானக் கோளாறோ அல்லது கொலஸ்ட்ரால் பிரச்னையோ ஏற்படாது என்பதனால் தான் இட்லி மிகச் சிறந்த காலை உணவாகக் கூறப்படுகிறது.

ஆனால் இன்று நேரமின்மை மற்றும் சோம்பேறித்தனம் போன்ற காரணத்தினால், நாம் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கிறது என்பதை அறியாமலேயே நாம் அதை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றோம்.

சுகாதாரமின்மை

இதற்கு முன்பாக, ஆட்டுக்கல்லில் தான் மாவு அரைத்து சாப்பிடும் பழக்கம் நமக்கு இருந்து வந்தது. கிரைண்டர் வந்தபின்பு, ஆட்டுக்கல் வீட்டில் காட்சிப் பொருளாக இருந்தது. பலருடைய வீடுகளில் பின்புறத்தில் குப்பையாக தான் இருக்கிறது.

ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டும் முன்னரும் மாவு ஆட்டிய பின்பும் சுத்தமாகக் கழுவும் பழக்கம் நம்முடைய வீட்டு ஆட்களுக்கு இருந்தது. ஆனால் கடைகளில் மாவு விற்க ஆட்டுவதற்கான அவர்கள் பயன்படுத்தும் பெரிய பெரிய கிரைண்டர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது.324670

ஈகோலி பாக்டீரியா

மாவு ஆட்டுகின்ற போது, அதன்பிறகு, கிரைண்டரைக் கழுவுகின்ற பொழுது, சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஈகோலி என்னும் பாக்டீரியா தாக்கம் அதிக அளவில் ஏற்படும். இது மாவாட்டுகின்ற பொழுது, இட்லி, தோசை மாவிற்குள் அடைக்கலம் ஆகிவிடும்.

உடல்நலக் குறைபாடுகள்

இந்த ஈகோலி பாக்டீரியா தாக்கத்தினால் நாள்பட்ட வயிற்று வலி, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலை சுற்றுதல் ஆகிய உடல் நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

வேகவைத்தாலும் அழிவதில்லை

தினமும் இட்லி, தோசை தான் சாப்பிடுகிறோம்? பிறகு எப்படி நமக்கு உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகிறது என்று நீங்கள் நினைக்கலாம். இதற்கெல்லாம் காரணம் நீங்கள் வெளி கடைகளில் வாங்குகின்ற இட்லி மாவு தான்.

ஈகோலி என்னும் பாக்டீரியா நீங்கள் மாவை வேக வைத்தாலும் கூட, முழுமையாக அழிவதில்லை என்பதுதான் இதில் உள்ள சோகமான விஷயமே.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு

கடைகளில் நாம் வாங்குகின்ற மாவினால் தான் இந்த பிரச்னைகள் என்றால், பாக்கெட்டில் அடைக்கப்படுகின்ற, இன்ஸ்டன்ட் மாவிலும் இதைவிட அதிக பிரச்னைகள் இருக்கும்.

கால்சியம் சிலிகேட்

இன்ஸ்டன்ட் இட்லி மாவு மிக வேகமாக கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்கானவே கால்சியம் சிலிகேட் சேர்க்கின்றனர். இதனால் மாவு சீக்கிரம் கெட்டுப் போகாது. ஆனால், இந்த காரணத்தினால் உங்களுடைய செரிமான மண்டலத்தில் பாதிக்கப்படும். இதைத்தொடர்ந்து அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலி போன்றவை உண்டாகும்.

யோசனை

நாமே பணம் கொடுத்து, உடல் நலக் கோளாறுகள், ஆரோக்கியமின்மை போன்றவற்றை ஏன் நாமே விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும்? வெறும் அரை மணி நேரம் மட்டுமே செலவிட்டால் போது, தரமான இட்லி மாவு வீட்டிலேயே நம்மால் தயாரித்துக் கொள்ள முடியும். ஆனால் வெறும் 30 முதல் 60 ரூபாய்க்குள்ள மாவு கிடைக்கிறது என்பதற்காக கடைகளில் ரெடிமேட் மாவு வாங்கி, சமைப்பதை முதலில் நிறுத்துங்கள்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்

இந்த ரெடிமேட் இட்லி மாவு மட்டுமல்ல. இப்போதெல்லாம் யாருமே இஞ்சி, பூண்டு பேஸ்ட் ரெடிமேடாக மட்டும் தான் வாங்குகிறோம். ஆனால் வெறும் ரெண்டே நிமிடத்தில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்து விடலாம். ஆனால் பத்து ரூபாய் செலவழித்தால் போதும் பாக்கெட் கிடைக்கிறதே என்று நினைத்து வாங்குகிறோம். அந்த தவறை இனி ஒருபோதும் செய்யாதீர்கள். அனைத்துமே உடல்நலக் கேடு தான்.

Related posts

தமன்னா வோட ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதானாம்! என்னன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!

nathan

உங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க! படிங்க இத…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மாதவிடாய் உயிரை எடுக்கும் வயிற்று வலியை குறைக்க.!

nathan

ஆடி மாதத்தில் திருமணமான தம்பதிகளை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க முதுகில் ‘இந்த’ விஷயங்கள செஞ்சா… பாக்க பளபளன்னு ரொம்ப செக்ஸியா இருக்குமாம் தெரியுமா?

nathan

இரவு நேரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் இருக்கும் ரகசியங்கள் என்ன தெரியுமா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் இதையெல்லாம் மறந்தும் கூட ஃப்ரிட்ஜ்ல வச்சுராதீங்க!!

nathan

தெரிஞ்சுக்கோங்க இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… படுக்கையறையில்

nathan

சுளீர் வெயில்… பெருகும் வியர்வை… என இந்தக் கோடையைச் சமாளிக்க சில பாரம்பரியப் பொருட்கள் நமக்கு உத…

nathan