25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
அழகு குறிப்புகள்

பெண்களுக்கு நாற்பது வயதில் இனிக்கும் தாம்பத்திய வாழ்க்கை

 

பெண்களுக்கு நாற்பது வயதில் இனிக்கும் தாம்பத்திய வாழ்க்கை 40 வயதுகளில் உள்ள பெண்கள், குறிப்பாக திருமணமான பெண்கள், சிறந்த செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். நாற்பது வயதில்தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது என்று சொல்வார்கள். அது உணமைதான். குறிப்பாக செக்ஸ் வாழ்க்கையில் இந்த வார்த்தை மிகமிக பொருத்தானது என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள். நாற்பது வயதில் இருக்கும் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி செக்ஸ் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கிறதாம்.

குறிப்பாக பெண்களின் செக்ஸ் வாழ்க்கை நாற்பது வயதில்தான் படு பிரமாதமாக இருக்குமாம். இதற்காக 40 வயதுகளை எட்டிய ஆண் மற்றும் பெண்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் பெரும்பாலான ஆண், பெண்களின் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருப்பது தெரிய வந்ததாம். 40 வயதில்தான் செக்ஸ் வாழ்க்கையில் அனைவருக்கும் ஒரு உச்ச நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக பெண்களுக்கு இந்த வயதில்தான் செக்ஸ் ஆர்வம் உச்சத்தில் இருக்கும். கல்யாணமான புதிதில் இருந்ததை விட இந்த வயதில் நிறைந்த ஆர்வத்துடனும், வேகத்துடனும் அவர்கள் இருப்பார்கள். இதற்கு முக்கியக் காரணம், திருமணமான இளம் வயதில் செக்ஸ் குறித்த கூச்சம், வெட்கம் பலருக்கு இருக்கிறது. முழுமையான தெளிவும் பலருக்கு இருப்பதில்லை.

இதனால் அப்போது முழுமையான அனுபவத்தை அவர்களால் அடைய முடிவதில்லை. ஆனால் 40 வயதுகளைத் தொட்ட அல்லது தாண்டிய பெண்களுக்கு இது முற்றிலும் நீங்கி விடுகிறது. தங்களது கணவர்களிடம் அல்லது பார்ட்னர்களிடம் செக்ஸ் குறித்துப் பேச அவர்களுக்கு தயக்கம் இருப்பதில்லை.

இன்னும் சொல்லப் போனால் தங்களுக்குப் ‘பிடித்தமானதை’ கேட்டு வாங்கும் பக்குவமும் அவர்களுக்குக் கை கூடி விடுகிறது. அதேசமயம், 30 வயதுக்குட்பட்ட பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு படுக்கை அறையில் பெரிய அளவில் திருப்தி ஏற்படுவதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

40 வயதைத் தாண்டிய பெண்களில் 68 சதவீதம் பேருக்கு எந்த ‘டெக்னிக்’கைக் கையாண்டால் அதிக சுகம் கிடைக்கும் என்ற விவரம் தெளிவாக தெரிந்திருக்கிறதாம். எப்படி செயல்பட்டால் அதிக இன்பம் கிடைக்கும், எந்த முறையில் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பதிலும் இவர்கள் கில்லாடிகளாக இருக்கிறார்களாம்.

திருமணமான புதிதில், குழந்தை பிறந்த பின்னர் தாங்கள் செக்ஸ் வாழ்க்கையி்ல் மும்முரமாக ஈடுபட வாய்ப்புகள் கிடைப்பதில்லை, எனவே தற்போது ரிலாக்ஸ்டாக அதில் ஈடுபட முடிவதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கூறுகையில், குழந்தைகள் வளர்ந்து பெரிதான நிலையில் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி நிம்மதியான, அவசரம் இல்லாத உறவுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது.

அவர்களுக்கு மனதளவில் மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது. எனவேதான் முன்பை விட சிறப்பான செக்ஸ் உறவில் அவர்களால் ஈடுபட முடிகிறது. 40 வயதுகளில் உள்ள பெண்கள், குறிப்பாக திருமணமான பெண்கள், சிறந்த செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். நாற்பதில்தான் வாழ்க்கை தொடங்குகிறது என்ற வார்த்தைப் பிரயோகம் உண்டு.

எதையும் முறையாக, சரியாக, முழு மனதோடு செய்தால் நிச்சயம் அது சிறப்பாகவே இருக்கும் என்பதை மனதில் கொண்டால் இந்த வயதுதான் என்றில்லாமல் எந்த வயதிலும் இன்பமாக இருக்கலாம்.

Related posts

கொழு கொழு கன்னங்கள் பெற

nathan

வெளியே விளையாட சென்ற 2 வயது மகன்! தந்தை கண்ட பயங்கரம்!

nathan

வியர்வை நாற்றம் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்க சிறந்த வழிகள் இதோ….

sangika

சருமத்தை பளபளப்பாக்கும் பச்சை திராட்சை

nathan

கணவருக்கு பளார் விட்ட ஜெனிலியா! வைரல் வீடியோ

nathan

வீட்டிலேயே செய்யலாம் சுவையான வத்தல் குழம்பு மசாலா பொடி

nathan

மகாத்மா காந்தி குறித்து கங்கனா ரணாவத் சர்ச்சைக் கருத்து

nathan

மூட்டுவலிக்கு முக்கிய பயன்தரும் நொச்சி இலை

nathan

பெண்கள் வளையல் போடுவதன் நோக்கம்

nathan