29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
18339562772a87fa1a1f14f5025bd2c60be3fc614832650630748877758
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தையை எப்படி தூங்க வைப்பது?

பிறந்த குழந்தையை தூங்க வைப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை சரியான தூக்கம் என்பது மிகவும் அவசியமாகும். சரி பிறந்த குழந்தையை தூங்க வைப்பது எப்படி என்பதை பற்றி சில டிப்ஸ்.

குழந்தையை தூங்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இருப்பினும் குழந்தையாக இருக்கும் பட்சத்தில், குழந்தைக்கு சரியான தூக்கம் இருந்தால் தான் அவர்களுக்கு உடலும், மூளையும் நன்றாக வளர்ச்சி அடையும்.

18339562772a87fa1a1f14f5025bd2c60be3fc614832650630748877758

கைகுழந்தையை அதிகமாக கையில் வைத்து கொண்டே தூங்க வைக்க கூடாது. ஏன் என்றால் அது அவர்களுக்கு உடல் வலியை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக கூட குழந்தை சரியாக தூங்க மாட்டார்கள். எனவே அதிகமாக தூக்கி வைத்துக்கொள்ளுவதை தவிர்த்து கொள்ளவும்.

பொதுவாக குழந்தைக்கு தன் தாயின் வாசமும், தந்தையின் வாசமும் அதிகமாக ஈர்ப்பு ஏற்படுத்தும், இதன் காரணமாக தன் தாய் தந்தையிடம், இருக்கும்போது குழந்தை பாதுகாப்பாக உணரும்.

குழந்தை தூங்க குறிப்பாக அப்பாவின் வாசத்தையோ அல்லது அம்மாவின் வாசத்தையோ குழந்தை சுவாசிக்கும் படி நன்றாக அரவணைத்து தூங்க வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும்.

குழந்தை தூங்க, குழந்தையின் தலையை கோதிவிடுதல் அல்லது முதுகை தட்டிக்கொடுத்தோ அல்லது கை கால்களை பிடித்துவிடுதல் போன்ற செயல்களை குழந்தையின் தாயோ அல்லது தந்தையோ செய்தால் குழந்தை நன்றாக தூங்கிவிடும்.

தாயின் புடவையில் குழந்தைக்கு தொட்டில் கட்டி தூங்க வைக்கும் போது தனது தாயின் அரவணைப்பில் தூங்குவது போல் குழந்தை உணர்ந்து, நன்றாக உறங்கிவிடுகிறது.

அதேபோல் குழந்தை தூங்கும் அறையானது மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தையின் அறையில் சத்தங்களோ அல்லது சலசலப்போ இருந்தால் குழந்தையின் தூக்கம் களைந்து தூக்கத்தை கெடுத்துவிடும்.

அதே சமயம் குழந்தையின் அறையானது நல்ல காற்றோட்டத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகள் தூங்கும்போது, தூங்கும் அறையானது வெளிச்சமாக இருந்தால் குழந்தை தூங்காது, எனவே குழந்தையின் தூங்கும் அறையானது வெளிச்சம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

குழந்தை சிறுநீர் கழித்து விட்டால் உடனே அந்த துணியை மாற்றிவிடவும், இல்லை எனில் அது குழந்தைக்கு உடல் நல குறைவை ஏற்படுத்திவிடும். வெயில் காலத்தில் குழந்தையின் அறையை நல்ல காற்றோட்டமாக வைத்து கொள்ளவும், அதேபோல் குளிர் காலத்தில் குழந்தையை கதகதப்பான இடத்தில் தூங்க வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும்.

குழந்தை தூங்க, பகல் நேரங்களில் குழந்தையை அதிகமாக தூங்கவைப்பதை தவிர்த்து கொள்ளுங்கள், மாலை நேரங்களில் குழந்தைக்கு நல்ல விளையாட்டு காட்டினாள் குழந்தை இரவில் அசந்து நன்றாக தூங்கிவிடும்.

தினமும் இரவு குழந்தையை தூங்க வைக்கும்போது சூடான நீரில் துணியை நனைத்து, குழந்தையின் உடலை துடைத்து விட்டு தூங்க வைக்கவும், ஏன் என்றால் குழந்தையின் மீது பால் வாசணை இருக்கும். இதன் காரணமாக கூட குழந்தை சரியாக தூங்கமாட்டார்கள்.

Related posts

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் குளிர்சாதன வசதி

nathan

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் -தெரிஞ்சிக்கங்க…

nathan

முடியின் பராமரிப்பிற்கு தக்காளி

sangika

மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்ளுக்கு.

nathan

ஏன் தெரியுமா பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது ஏன் ??

nathan

ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர இத்தனை பயன்களை கொண்டதா…?

nathan

பீர் குடித்ததால் வந்த தொப்பையை குறைக்க ஈஸி வழி! ! தெரிஞ்சிக்கங்க…

nathan

அழகான சருமத்தை பெற திராட்சை பழம்

nathan

அற்புதமான எளிய தீர்வு! உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் 7 வழிமுறைகள்!!!

nathan