25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
834899477332e7b5d48f10a1176f4e2eaf89041f
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி? மூன்றுநாளில் ஃப்ரஷ்

புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்ஜி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும்.

எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.

834899477332e7b5d48f10a1176f4e2eaf89041f 397712962

இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். உதாரணத்திறக்கு பால் (Milk), தேநீர் (Tea), தயிர் (Curd), மோர் (Butter Milk), வெண்ணெய் (Butter), பாலாடைக்கட்டி (Cheese) போன்றவை. உடலிருந்து நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம்

எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும்.

சுத்தம் செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை (Tea) குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம்.

முதல் நாள் இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.

ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான திராட்சை (Grapes) சாற்றை குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால் திராட்சை (Grapes) சாற்றுக்கு பதிலாக அன்னாசிப்பழத்தின் (Pineapple) சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்தமான தண்ணீரோ (Water), சர்க்கரையோ (Sugar) சேர்க்கக்கூடாது. இந்த சாறுகளில் இயற்கையான சுவாசத்தை சீராக்கும் எதிர் ஆக்சிஜன் ஏற்றம் (Antioxidants) நிறைந்துள்ளதால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.

மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் (Carrot) சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ (Water) சர்க்கரையோ (Sugar) சேர்க்கக்கூடாது. கேரட் (Carrot) சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட்களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத்தன்மைக்கு மாற்றுகிறது.

இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன்பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும். பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒரு நன்மருந்தாக (Tonic) உதவுகிறது. இது உடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாக சிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது. கிரேன்பெரி கிடைக்காதவர்கள் சுத்தமான சிகப்பு திராட்சை (Grapes) அல்லது அன்னாசிப்பழம் (Pineapple), அல்லது ஆரஞ்சு (Orange) பழச் சாற்றை கலப்பிடமில்லாமல் குடிக்கலாம்.

இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை மட்டும் சாப்பிடவேண்டும். குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து ர்வையை வெளியேற்றவும் (அல்லது) 20 நிமிடங்கள் சுடுதண்ணீரில் குளிக்கலாம். வியர்வை வெளியேறும் போது நச்சுகளும் வெளியேறும்.

இரவில் 2 லிட்டர் கொதிநீரில் 5 முதல் 10 சொட்டுவரை நீலகிரித் தைலம் (Eucalyptus Oil), சிறிதளவு மஞ்சள், மற்றும் சிறிதளவு ஓமம் சேர்த்து ஆவி பிடிக்கவேண்டும். தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும். இவ்வாறு கொதிநீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.
மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்ச்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்.

Related posts

எடையை குறைக்கனுமா? இந்த அற்புத ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தாலே போதும்

nathan

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்: இரத்தசோகை காரணமா?

nathan

பெண்ணின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் ‘யீஸ்ட்’ பூஞ்சை தாக்குதல்

nathan

உடல் எடை குறைக்க முயலும்போது செய்யும் தவறுகள்..!!

nathan

தெரிஞ்சிக்கங்க…மனமானது சோர்ந்து போயிருக்கும் போது செய்ய வேண்டிய விஷயங்கள்!!!

nathan

நவீன சமையல் பாத்திரங்களும் அதன் தீமைகளும்

nathan

உங்கள் எடையை அதிகரிக்க வேண்டுமா? இதோ சில எளிய ஆயுர்வேத வழிகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க… கொளுத்தும் வெயில்.. வீட்டை குளிர்ச்சியுடன் எப்படி வைத்து கொள்ளலாம்?

nathan

பிறக்கும் பச்சிளம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இதயநோய் என்பது நம்மை எச்சரிக்கும் அபாய ஒலி

nathan