25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
16 1
ஆரோக்கியம் குறிப்புகள்

பித்த வெடிப்பின் அவஸ்தையா??? பாதிப்புக்கள் என்ன?இதோ எளிய நிவாரணம்

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். இயற்கை வழிகளைப் பின்பற்றினால் குதிகால் வெடிப்பைப் போக்குவதோடு, குதிகாலை அழகாகவும் பராமரிக்கலாம்.குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். பாதத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொடுக்காவிடில் குதிகாலில் வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்து, அது அழகை கெடுப்பதோடு, கடுமையான வேதனையையும் தரும். இயற்கை வழிகளைப் பின்பற்றினால் குதிகால் வெடிப்பைப் போக்குவதோடு, குதிகாலை அழகாகவும் பராமரிக்கலாம்..கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டரை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த நீரில் 15-20 நிமிடம் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, இறுதியில் அந்த கிளிசரின் கலவையை பாதங்களில் தடவி வர வேண்டும்.

இப்படி, அன்றாடம் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், குதிகால் வெடிப்புகள் மறையும்.குதிகால் வெடிப்பு அதிகப்படியான வறட்சியினால் வருவதாகும். ஆகவே அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும்.வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பாதங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த கலவையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும். எனவே, தவறாமல் அன்றாடம் ஒருமுறையாவது செய்து வர வேண்டும். குதிகால் வெடிப்பு மிகவும் மோசமாக இருந்தால், இதனை தினமும் இரண்டு முறை செய்து வர வேண்டும்.
16 1
அரிசி மாவு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, வெடிப்பு அதிகம் இருப்பவர்கள், இத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பாதங்களை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் இந்த கலவையைக் கொண்டு குதிகால்களை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.வெள்ளை வினிகரில் அசிடிக் ஆசிட், அதிக அளவில் நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது. எனவே 1/4 ப் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து 10 நிமிடம் அந்த கலவையில் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.துளசியில் குதிகால் வெடிப்பைப் போக்கும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. ஆகவே துளசியை அரைத்து, பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள், கற்றாழை ஜெல் மற்றும் சூடம் சேர்த்து நன்கு பேட்ஸ் செய்து, பாதங்களில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் குதிகால் வெடிப்புகள் மறையும்.

Related posts

கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும், ‘பைப்ராய்டு’ எனப்படும் சதைக் கட்டிகள். அவற்றைப் பற்றி தெரிந்துள்ள

nathan

இந்த தவறுகளை செய்யாதீங்க.. என்ன செஞ்சாலும் உடல் எடை குறையலையா?

nathan

இந்த உணவுகள் பற்கள் மற்றும் துவாரங்களின் மஞ்சள் நிறத்தையும் ஏற்படுத்தும்!

nathan

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன்?

nathan

மலச்சிக்கலை தீர்க்கும் அற்புத இயற்கை குறிப்புகள்

nathan

இந்த பொருட்களை வீட்டில் வெச்சிருந்தா உங்க அதிர்ஷ்டம் பிரகாசிக்குமாம்…

nathan

எதிர்மறையான எண்ணங்கள் நீங்க வேண்டுமா? ஈஸியான பரிகாரம் இதோ

nathan

குழந்தை எப்போதும் அழுதுக்கொண்டே இருக்கிறதா? பிரச்சனைக்கான தீர்வுதான் இது.!

nathan

சூப்பர் டிப்ஸ்! குழந்தை அழுவதை நிறுத்த வேண்டுமா? அப்ப இந்த 2 இடத்தில் அழுத்தம் கொடுங்க…

nathan