26.2 C
Chennai
Sunday, Dec 22, 2024
356252
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! பிரசவ வலி ஏற்படும் பொழுது கணவன்மார்கள் என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பம் என்பது தவம் என்றும், பிரசவம் என்பது மறு பிறப்பு என்றும் கூறப்படுகிறது; அது உண்மையா என்று சிந்தித்து பார்த்தல் கற்பனைக்கும் எட்டாத பல உண்மைகள் உண்மையாகவே இந்த கூற்றில் ஒளிந்து உள்ளன. சாதாரணமாக தவம் புரியும் பொழுது, உடலில் பசி, பலவீனம் என்பதை தவிர வேறு எந்த உணர்வும் ஏற்படாது; ஆனால், கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிறு பிடிப்பது போன்ற உணர்வு என்று ஒரு உணர்வு குவியலே நடந்து முடிந்திடும்.

பிரசவமும் வார்த்தைகளால் எடுத்துக்கூற முடியாத அளவுக்கு வலி மிகுந்த மிகப்பெரிய விஷயம் என்றே கூறலாம்.

பிரசவம் – மறு பிறப்பு !

பிரசவத்தை மறு பிறப்பு என்னும் மிக மிக பெரிய வார்த்தையோடு ஒப்பிட்டு பார்க்க காரணம், அந்த சமயத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலியும் வேதனையும் தான். பெண்களின் உடல் சதை கிழிந்து, எலும்புகள் பிளந்து தனக்குள் வளரும் உயிரை இந்த மண்ணுக்கு கொண்டு வருகின்றனர்.

முடிவது இல்லை.. 9 மாதங்கள் வலியை வார்த்தைகளால் கூறாமல் பொறுத்துக் கொண்ட பெண்கள், அந்த பிரசவ வலியை மட்டும் கதறினாலும் பொறுத்துக் கொள்ள முடிவது இல்லை. இந்த பதிப்பில் பிரசவ வலியால் துடிக்கும் மனைவிக்கு கணவன்மார்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஆறுதல் மொழிகள்! முதல் கட்ட பிரசவ வலி ஏற்படும் பொழுது, மனைவியை கணவன்மார்கள் ஆறுதல் படுத்த வேண்டும். முதல் கட்ட வலி ஏற்படும் பொழுது பெண்கள் சற்று தைரியமாக தான் இருப்பார்கள்; அந்த சமயத்தில் அவர்கள் கொண்டு இருக்கும் தைரியத்தை மேம்படுத்தும் வண்ணம் அவர்களுக்கு பயப்படாதே, எதுவும் ஆகாது என்பது போன்ற ஆறுதல் மொழிகள் கூற வேண்டும்.356252

வலியின் தீவிரம்! வலியின் தீவிரம் படிப்படியாக அதிகரித்து கொண்டே இருக்கும் பொழுது, மனைவியிடம் கண்ணை மூடிக்கொள்ள சொல்லி, அவர்களுக்கு தைரியம் மற்றும் நம்பிக்கை தரும் எதாவது ஒரு விஷயத்தை அவர்கள் கையை பிடித்துக் கொண்டே பேசிக் கொண்டு இருக்க வேண்டும். மனைவியிடம் குழந்தை பிறந்த பின் என்ன பெயர் வைக்கலாம், யாரை மாதிரி இருக்கும் என்ற கேள்விகளை கேட்டு மனைவியின் எண்ணங்களை திசை திருப்ப முயல வேண்டும்.
மேலும் தீவிரமாதல்! மனைவிக்கு பிரசவ வலி நீண்டு கொண்டே செல்லும் பொழுது, வலியின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் பொழுது, மனைவிக்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டு, அவரின் தலையை கோதி விட்டுக் கொண்டே, மனைவியை குழந்தை பிறந்த பின் நீங்கள் வாழப்போகும் வாழ்க்கையை குறித்து சிந்திக்க வைக்க வேண்டும்; கற்பனை புரிய வைக்க வேண்டும். அந்த வகையில் மனைவின் மூளைக்கு பிரசவ வழியே மறந்து போகும் அளவிற்கு கணவன்மார்கள் பேசிக் கொண்டு இருக்க வேண்டும்.
உச்ச கட்ட வலி பெண்கள் உச்ச கட்ட வலியை எட்டும் பொழுது, தற்போது நடக்கும் நிகழ்வுகளை மனைவிக்கு தைரியம் ஊட்டும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும். உதாரணத்திற்க்கு குழந்தையின் தலை வெளி வந்துவிட்டது, இன்னும் இரண்டு – மூன்று நிமிடங்கள் தான் எல்லாம் முடிந்து விடும் என்பது போன்று கூறி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பெண்கள் குழந்தையை அழுத்தம் கொடுத்து வெளியே தள்ளும் பொழுதும் பெண்களை நன்கு ஊக்குவித்து தைரியம் கொடுப்பது கணவர்களின் கடமை!

நான் இருக்கிறேன்! எதுவும் ஆகாது, உன்னுடன் நான் இருக்கிறேன் என்ற தைரியத்தை மனைவிகளுக்கு கணவன்மார்கள் கொடுத்தால், பெண்கள் ஒரு பிரசவம் என்ன ஒன்பது பிரசவத்திற்கான வலியை கூட ஒரே நேரத்தில் தாங்குவர். ஆனால், ஒரு முக்கிய விஷயம் என்ன என்றால், மனைவியின் பிரசவம் குறித்து உங்களுக்கு இருக்கும் பதட்டத்தை, பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாதவாறு மனைவியை தைரியப்படுத்தி ஆதரவு அளியுங்கள்!

Related posts

கட்டாயம் இதை படியுங்கள் பெற்றோர்களே… இந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள்..!

nathan

பெண்கள் மூக்கு/காது குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..?

nathan

ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா?

nathan

வீடு முழுக்க கொசு தொல்லையா? விரட்டி அடிக்க இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

வாட்ஸ் அப் மூலம் பெண்களை தொடரும் ஆபத்து

nathan

கருவில் இருக்கிற குழந்தை ஆரோக்கியமாக இருப்பதன் அறிகுறிகள்..

nathan

தெரிஞ்சிக்கங்க…ஓய்வு நேரத்தில் செய்யக்கூடிய பயனுள்ள காரியங்கள்!!!

nathan

கரும்புள்ளிகளை நீக்கும் வீட்டு வைத்தியம்!

nathan

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி

nathan