gfhgh
ஆரோக்கிய உணவு

வல்லாரை ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, மூளையையும் சுறுசுறுப்படையச் செய்யும்.

முக்கியமான விஷயத்தை கூட மறந்துபோய், எல்லோரிடமும் திட்டு வாங்குவோம். பள்ளிக்கு செல்கின்ற மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே இது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

ஆனால், இந்த வல்லாரைக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் இப்பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம். இக்கீரை ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, மூளையையும் சுறுசுறுப்படையச் செய்யும்.

இந்த கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இப்பொழுது வல்லாரைக்கீரையின் மருத்துவப் பயன்கள் பற்றிப் பார்ப்போம்.

தினந்தோறும் காலையில் வல்லாரைக் கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால், மூளை நரம்புகள் பலம் பெறும் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வல்லாரைக் கீரையை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கினால் குடல் புண் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
gfhgh
தினந்தோறும் இந்த கீரையைக் கொண்டு பல்துலக்கினால், பற்களில் உள்ள மஞ்சள் கரை நீங்கும்.

உடல் சூட்டைக் குறைக்கவும் இந்த கீரை மிகவும் பயன்படுகிறது. இந்த கீரையுடன், மிளகைச் சேர்த்து பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். இதனை பச்சையாக சாப்பிடப் பிடிக்காதவர்கள், துவையல் செய்து சாப்பிடலாம்.

வாய்ப்புண்ணுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். வாய்ப்புண்ணால் அவதிப்படுகிறவர்கள் காலையும், மாலையும் நான்கைந்து வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் விரைவில் சரியாகும்.

உடலில் இரத்தச்சோகையைப் போக்கி இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த வல்லாரைக் கீரை மிகவும் உதவுகிறது.

காய்ச்சல், உடல்சோர்வு மற்றும் தோல் வியாதி உள்ளவர்களுக்கு வல்லாரை மிகச் சிறந்த மருந்தாகும். இக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான வியாதிகள் சரியாகும்.

Related posts

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ் !

nathan

Frozen food?

nathan

இரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான செம்பும் இதில் நிறைந்துள்ளது.

nathan

சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் சாப்பிட்டுள்ளீர்களா?

nathan

இதோ எளிய நிவாரணம்! செரிமான கோளாறுகளின் அபாயத்தை குறைக்க தினமும் காபி குடிக்கவும்..!

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான உணவு

nathan

நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும் மல்கோவா மாம்பழம்

nathan

சுவையான பட்டாணி சுண்டல்

nathan

ஓட்ஸ் டயட் ரொட்டி

nathan