30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கிய உணவு

இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால், உடலில் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வைக் காணலாம்.

குறிப்பாக இஞ்சிப் பால் குடித்தால், இரத்தக் குழாய்களில் தங்கி அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்கள் கரையும், வாய்வுத் தொல்லை நீங்கும். அதுமட்டுமின்றி, பலரும் குனிந்து தன் பாதத்தை பார்க்க முடியாத அளவிலான தொப்பையைக் குறைக்க முடியும்.

இதுப்போன்று பல நன்மைகளை இஞ்சிப்பால் உள்ளடக்கியுள்ளது. சரி, இப்போது இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றிப் பார்ப்போமா!!!

ஆரோக்கியமான நுரையீரல்

நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டீர்களா? அப்படியெனில் இஞ்சிப் பால் குடியுங்கள். ஏனெனில் இப்பாலைக் குடித்தால், சிகரெட் பிடித்து நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, நுரையீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

சளி

தற்போது ஆங்காங்கு மழைப் பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பலரும் சளியால் அவஸ்தைப்படுவார்கள். அத்தகைய தொல்லை மிகுந்த சளியில் இருந்து நிவாரணம் பெற இஞ்சிப் பால் குடியுங்கள்.

வாய்வு தொல்லை

அடிக்கடி டர்ர்ர்.. புர்ர்ர்..ன்னு வந்துட்டே இருக்கா? அப்ப தினமும் ஒரு டம்ளர் இஞ்சிப் பால் குடிங்க, நிச்சயம் வாய்வு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

புற்றுநோய்க் கட்டி

பெண்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிப் பால் குடித்து வந்தால், சினைப்பையில் வரும் புற்றுநோய்க் கட்டிகளை நீக்கலாம்.

இரத்த குழாய் அடைப்பு

குண்டாக இருப்பவர்கள் இஞ்சிப் பால் குடிப்பது நல்லது. ஏனெனில் அதிக அளவிலான கொழுப்பு பதார்த்தத்தை உட்கொண்டு, இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படுவதை தடுப்பதோடு, இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான முறையில் செல்ல இஞ்சிப் பால் வழிவகுக்கும்.

தொப்பை

மலைப் போன்ற தொப்பையைக் கொண்டவர்கள், தினமும் இஞ்சிப் பால் அருந்தி வர, படிப்படியாக தொப்பையைக் குறைக்கலாம்.

இஞ்சிப் பால் குடிக்கக்கூடாதவர்கள்

வாய்ப்புண், அல்சர், மூலம் உள்ளவர்கள், இஞ்சிப் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இப்பிரச்சனை தீவிரமடையக்கூடும்.

இஞ்சிப் பால் செய்முறை

1 பெரிய துண்டு இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, அதனை தட்டி, 3/4 கப் நீரில் போட்டு, அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஒரு கப் பாலை நன்கு காய்ச்சி, அதில் இஞ்சி சாற்றினை ஊற்றி, அத்துடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்தால், இஞ்சிப் பால் ரெடி!

Related posts

நிறை உணவு என்றால் என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா கீழாநெல்லி…!

nathan

உங்க ஆண்மை மற்றும் வீரியத்தை அதிகரிக்க வேர்கடலையை எப்படி சாப்பிடலாம்? இத படிங்க!

nathan

மிளகு, டீ தூளில் உள்ள கலப்படத்தை கண்டறிய வழிகள்

nathan

ர்க்கரை வள்ளிக்கிழங்கில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம்…

nathan

வீட்டில் தயாரிக்கும் தயிர் ஏன் கெட்டியாக உள்ளது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுதா? இத சாப்பிடுங்க!

nathan

ஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்கும் முருங்கைக் கீரை

nathan