29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
dgtdg
ஆரோக்கியம் குறிப்புகள்

புரிந்துணர்வின்மை காரணமாக உறவுச்சிக்கலோடு இருப்பவர்கள், ஜோடியாக `ஆர்ட் தெரபி’க்கு செல்லுங்கள்!

நம்ம ரிலேஷன்ஷிப்ல எப்பவும் நீதான் டாமினேட் பண்ற. என்னை எதுவுமே செய்யவிட மாட்டேங்குற. உன் இஷ்டப்படி நான் இருக்கணும்னு நினைக்கிற.’

– இப்படியான எல்லா வாதங்களும் முடிவடைவது, `நாம பிரிஞ்சிடலாம்’ என்ற ஒற்றை விஷயத்தில்தான்.

சின்னச் சின்ன உறவுச் சிக்கல்களை எப்படிச் சரிசெய்துகொள்வது எனத் தெரியாமல் போனதால், பிரிந்துபோன ஜோடிகள் ஏராளம். பிரிந்த சில மாதங்களிலேயே,
`அன்னைக்கு நான் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போயிருந்தா, நாங்க பிரிஞ்சிருக்கமாட்டோம்ல’`என் மேலதான் தப்பு, நான்தான் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கணும்’

எனச் சொல்பவர்கள் ஏராளம்.

`காதலில் பிரச்னை வந்தால், மனநல ஆலோசகரை அணுகி, பிரச்னையைச் சரியாக அணுகுங்கள். இல்லையெனில், குறிப்பிட்ட பிரச்னையே உங்களைப் பிரித்துவிடலாம்’ என்கின்றன சில மேற்கத்திய ஆய்வுகள். மனநல ஆலோசனையில், ஆர்ட் தெரபி என்ற முறையை மேற்கொள்வது ஹெல்தி ரிலேஷன்ஷிப்புக்கு உதவும் எனக் குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்!
ஹெல்தி ரிலேஷன்ஷிப்
dgtdg
`அதென்ன ஆர்ட் தெரபி… என்ன மாதிரியான பிரச்னைகளுக்கெல்லாம் இது தீர்வு தரும்?’

சென்னையைச் சேர்ந்த ஆர்ட் தெரபிஸ்ட் ஹேமலதாவிடம் கேட்டோம்.
ஆர்ட் தெரபிஸ்ட் ஹேமலதா

“எந்தவொரு மனம் சார்ந்த பிரச்னைக்கும், கலை வடிவத்தில் தீர்வுகளைப் பரிந்துரைப்பதுதான் ஆர்ட் தெரபி. மன அழுத்தம், பதற்றம், இழப்புகளிலிருந்து மீள முடியாமல் திணறுவது போன்ற சிக்கல்களால் அவதிப்படுபவர்களுக்கு அவற்றிலிருந்து வெளியேறவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை முன்னெடுக்கவும் ஆர்ட் தெரபி உதவும். சொல்லப்போனால், வாழ்வில் பிடிமானம் இல்லையென உணர்பவர்கள், அவர்களின் வாழ்க்கையை அவர்களே வண்ணமயமாக்கிக் கொள்ள இந்த தெரபி உதவும். ஆர்ட் தெரபியில் தனிநபருக்கான சிகிச்சைகள் மட்டுமன்றி, ரிலேஷன்ஷிப் சிக்கல்களுக்கும் தீர்வுகள் இருக்கின்றன” என்கிறார் ஹேமலதா. இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார் அவர்.

“இன்றைய சூழலில், பெயர் தெரியாத அழுத்தத்தில் இயந்திரத்தன்மையுடனே பலரும் இயங்கிக்கொண்டிருக்கிறனர். இப்படியான மனஅழுத்தமிக்க வாழ்க்கையில்தான், ரிலேஷன்ஷிப் சார்ந்த சிக்கல்களும் ஏற்படுகின்றன. `இருக்குற பிரச்னையில, இதுவொரு எக்ஸ்ட்ரா பிரச்னை’ என நினைத்துக்கொண்டு பலரும் உறவுக்குள் ஏற்படும் விரிசலையும் பிரச்னையையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர். இணையரோடு அமர்ந்து பேசி, சிரித்துச் சிலாகிக்க இங்கு பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இந்த நேரமின்மை பிரச்னை, குறுகிய காலத்திலேயே சம்பந்தப்பட்ட இருவருக்குள்ளும் புரிந்துணர்வின்மையைத் தந்து, உறவில் சிக்கலை ஏற்படுத்திவிடும்.
ஆர்ட் தெரபிஸ்ட் ஹேமலதாரிலேஷன்ஷிப் பிரச்னைகளைப் பொறுத்தவரை, பேசினாலே போதும்… பிரச்னைகள் தானாகத் குறையத்தொடங்கிவிடும்!
rty
உறவுச்சிக்கல் இருப்பவர்கள், அந்தச் சமயத்தில் அதைச் சரிசெய்து கொள்ள தங்களுக்கு இடையில் மூன்றாவதாக ஒரு நபரை உள்நுழைத்துக்கொள்வது நலம். இந்த மூன்றாவது நபர், எல்லாச் சூழலிலும் நடுநிலையோடு செயல்படுபவராகவும், அதே நேரம் இணையர் இருவருக்கும் தொடர்பில்லாத, நம்பிக்கை வாய்ந்த, ரிலேஷன்ஷிப் பிரச்னைகளுக்குச் சரியான தீர்வைச் சொல்லும் நபராகவும் இருக்க வேண்டியது கட்டாயம். இணையர்கள், `இப்படியொருவரை எங்கே தேடுவேன்’ என யோசிக்க வேண்டாம்! இப்படியான நபராக, மனநல ஆலோசகர்களும் தெரபிஸ்ட்களும் இருப்பார்கள். இவர்கள், குறிப்பிட்ட பிரச்னையைச் சரிசெய்ய மட்டுமன்றி, மீண்டுமொரு முறை அந்தப் பிரச்னை வராமலிருக்க என்ன செய்யலாம் என்பதையும் அறிவுறுத்துவார்கள். அந்த வகையில், ஹெல்தி ரிலேஷன்ஷிப்பை உருவாக்கிக்கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் ஆர்ட் தெரபியும் தெரபிஸ்ட்டும் உதவுவர்” என்றார் அவர்.
ஆர்ட் தெரபி

ஆர்ட் தெரபியில், சிகிச்சைகள் எப்படியாக இருக்கும்?

“ரிலேஷன்ஷிப்பில் சிக்கல்களோடு எங்களை அணுகும் இணையர்களுக்கு கிராஃப்ட் வொர்க், நுண்உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான பெயின்டிங் பயிற்சிகள், கவனம் அதிகம் தேவைப்படும் சிறப்புப் பயிற்சிகள் போன்றவற்றை தருவோம். சிறப்பு என்னவெனில், இவற்றை அவர்கள் ஜோடியாக மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் தங்களின் அலுவல் சார்ந்த அழுத்தத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, அவர்களுக்குள் இருக்கும் மன அழுத்தம் குறையத்தொடங்கும். தீவிர மற்றும் தவறான எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபடுவர். இப்படியான சிகிச்சைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது, இணையர் இருவரும் ஒருகட்டத்துக்கு மேல் மனம் விட்டுப் பேசத்தொடங்குவர். ரிலேஷன்ஷிப் பிரச்னைகளைப் பொறுத்தவரை, பேசினாலே போதும்… பிரச்னைகள் தாமாகத் குறையத்தொடங்கிவிடும். இதற்குப் பிறகு இவர்களை அணுகுவது எளிது” என்றவர் தொடர்ந்து, `ஆர்ட் தெரபி சிகிச்சைகளில் இணையர்கள் – தனிநபர்கள் இருவருக்குள்ளும் என்ன மாதிரியான வேறுபாடுகளும் சவால்களும் இருக்கும்?’ என்பது குறித்து விளக்கினார்.

“ஆர்ட் தெரபி என்றில்லை.. எந்தவொரு மனநல சிகிச்சையிலும் தனிநபருக்கான சிகிச்சை எனும்போது, குறிப்பிட்ட ஒரு நபரைச் சார்ந்த சிகிச்சையாக மட்டும் அது இருந்தால் போதும். ஆனால் இணையர் என வரும்போது, அப்படிச் செயல்பட முடியாது. சம்பந்தப்பட்ட இருவருமே சிகிச்சைக்கு உட்படும் வகையிலான தெரபிகளை – வழிமுறைகளைத் தந்தால்தான் பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும். உடல்நலச் சிக்கல்களுக்குப் பரிந்துரைக்கப்படுவதுபோல, `இந்தப் பிரச்னைக்கு இந்த மருந்து தீர்வு தரும்’ என்று மனநலப் பிரச்னைகளுக்கு தீர்வுகளைப் பரிந்துரைத்துவிடமுடியாது. நபருக்கு நபர், இணையருக்கு இணையர், குறிப்பிட்ட பிரச்னைக்கும், அவரவரின் குணாதிசயங்களுக்கும் ஏற்ப சிகிச்சைகளும் தெரபி முறைகளும் மாறுபடும்.
மனநல சிகிச்சை

எங்களை நாடும் இணையர்கள் ஏற்கெனவே புரிந்துணர்வு சார்ந்த சிக்கலோடுதான் இருப்பார்கள் என்பதால் அவர்களைக் கூடுதல் அக்கறையோடு அணுக வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கும். கொஞ்சம் தவறிவிட்டால்கூட, இருவரும் மீண்டும் முட்டிக்கொள்வார்கள். சண்டையிடவோ வாக்குவாதம் பண்ணவோ தொடங்கிவிடுவார்கள். சில நேரம், `இந்த இடத்துக்கு வந்ததுதான் தப்பு… நம்ம சண்டையை நாமளே பார்த்திருக்கணும். மூணாவது மனுஷங்களை உள்ள விட்டா இப்படித்தான் ஆகும்’ என்பார்கள். இப்படிச் சிலர் அங்கேயே வாய்த் தகராறுகளில் ஈடுபட்டுவிடுவர். இன்னும் சிலர் கடுமையான சொற்களைப் பேசி எல்லா கோபத்தையும் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். அதன் பின் என்ன செய்வதெனத் தெரியாமல், மன்னிப்புக் கேட்கவும் மனமில்லாமல் ஈகோவோடு இருப்பார்கள். இவர்களையெல்லாம் எங்கள் வழிக்குக் கொண்டு வருவது மிகப்பெரிய சவால்!” என்றார்.
உறவில், `டாமினன்ட்’ எனப்படும் அதிகாரத்தன்மையோடு இருப்பவர்களெல்லாம் மனநல ஆலோசகர்கள் அல்லது எங்களைப் போன்ற தெரபிஸ்ட்களை அணுகலாம்

“ரிலேஷன்ஷிப்பில் என்னென்ன பிரச்னைகள் இருப்பவர்களெல்லாம் ஆர்ட் தெரபியை நாடலாம்?”

“புரிந்துணர்வின்மை காரணமாக உறவுச்சிக்கலோடு இருப்பவர்கள், ரிலேஷன்ஷிப்பில் சந்தேக எண்ணம் மேலோங்கி இருப்பவர்கள், இணையர் மீது நம்பிக்கையின்மையோடு இருப்பவர்கள், உறவில், ‘டாமினன்ட்’ எனப்படும் அதிகாரத்தன்மையோடு இருப்பவர்களெல்லாம் மனநல ஆலோசகர்கள் அல்லது எங்களைப் போன்ற தெரபிஸ்ட்களை அணுகலாம்.
ஆர்ட் தெரபிஸ்ட் ஹேமலதாஇந்தப் பிரச்னைக்கு இந்த மருந்து தீர்வு தரும்’ என்று மனநலப் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைப் பரிந்துரைத்துவிடமுடியாது. நபருக்கு நபர், இணையருக்கு இணையர், குறிப்பிட்ட பிரச்னைக்கும், அவரவரின் குணாதிசயங்களுக்கும் ஏற்ப சிகிச்சைகளும் தெரபி முறைகளும் மாறுபடும்.
relationship conflict 1
ஒரே ஒரு விஷயம்… ரிலேஷன்ஷிப் பிரச்னைக்காக எங்களை அணுகும் அனைவரையும் நாங்கள் சேர்த்து வைத்து விடுவோம் என உறுதி அளிக்க முடியாது. சில நேரம், பிரிதல்கூட தீர்வாக இருக்கும் என்பதால், அதையும் நாங்கள் பரிந்துரைப்போம். ஆகவே எந்தவொரு முடிவையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம், இணையர்களிடத்தில் இருக்க வேண்டியது அவசியம்.

ரிலேஷன்ஷிப்பில் மிகத் தீவிரமான பிரச்னை இருந்தால்தான் தெரபிஸ்ட்டை அணுக வேண்டும் என்றில்லை. `எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அவை எங்களை தூரமாக்கிவிடுமோ/பிரித்துவிடுமோ என பயப்படுகிறோம்’ என நினைக்கும் இணையர்கள்கூட எங்களை அணுகி ஆலோசனை பெறலாம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஹேப்பி, ஹெல்த்தி ரிலேஷன்ஷிப் வேண்டுமென நினைக்கும் எல்லோரும், ஆர்ட் தெரபிஸ்ட்டை தயங்காமல் அணுகலாம்!” என்கிறார் அவர்.

Related posts

படுக்கையறையிலும் தாங்க முடியாத மூட்டைப்பூச்சி தொல்லையா?

nathan

சூப்பர் டிப்ஸ் ! உடல் எடையை குறைக்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்….!!

nathan

இட்லி அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சா ஷா க் ஆயிடுவீங்க!

nathan

நின்று கொண்டே தண்ணீர் குடிச்சா இவ்வளவு ஆபத்து வருமாம்…. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தேன் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி எடை இழப்பதற்கான 4 எளிய வழிகள்

nathan

உங்க ராசிப்படி உங்க காதலிக்கு உங்கள பிடிக்காம போக காரணம் என்னவா இருக்கும் தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் முக்கியமான நன்மைகள்.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சமையல் அறையில் நேரத்தை மிச்சப்படுத்துவது எவ்வாறு?

nathan

உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைக்க வெள்ளரியை இவ்வாறு சாப்பிடுங்க!…

nathan