29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ioryo
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா? ஜப்பான் மற்றும் கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருக்க காரணம்

ஒரு உணவின் ஆரோக்கியத்தை அதன் வடிவத்தைக் கொண்டு தீர்மானிப்பது என்பது மிகவும் தவறான ஒன்றாகும்.

ஏனெனில் இதுபோன்ற உணவுகள் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும். குறிப்பாக எடை குறைப்பில் இது போன்ற உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் உங்கள் எடையை குறைக்க உதவும் சில வித்தியாசமான உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
மங்குஸ்தான்

மங்குஸ்தான் என்பது ஒரு பழவகையாகும். இதனை நீங்கள் சாதாரண பழக்கடைகளிலோ, மார்க்கெட்டுகளிலோ பார்க்க முடியாது. இதன் அற்புத பலன்களை மக்கள் உணர்ந்து கொள்ளாததே இதன் காரணமாகும். இது வெளிப்புறத்தில் அடர்த்தியான ஊதா நிற உறை மற்றும் உள்ளே வெள்ளை சதைப்பகுதியைக் கொண்டுள்ள இது வித்தியாசமான அதேசமயம் அனைவருக்கும் பிடித்த சுவையைக் கொண்டுள்ளது. இது உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பை பெருமளவில் குறைக்கும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

ஊட்டச்சத்துக்கள்

மங்குஸ்தானின் கொழுப்பை அதிகளவில் எரிக்க காரணம் அதில் இருக்கும் சாந்தோன்கள் ஆகும். சக்திவாய்ந்த சேர்மங்களை கொண்டிருக்கும் இந்த பழம் இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக புற்றுநோய் மருந்து ஆராய்ச்சியில் பயன்படுத்தபடுகிறது. மங்குஸ்தான் பழம் சந்தைகளில் கிடைக்காவிட்டால் ஆன்லைனில் வாங்க முயற்சிக்கவும்.
ioryo
கிம்ச்சி

கொரிய உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் இதனைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கலாம், மற்றவர்களுக்கு இதன் மகிமையைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவுதான். புளித்த காரமான முட்டைக்கோஸான இது உலகின் மிகவும் வித்தியாசமான உணவுகளில் ஒன்றாகும். வித்தியாசமான சுவையைக் கொண்ட இது உங்கள் உடலில் அதிகப்படியான கொழுப்பை எளிதில் கரைக்க உதவும். நொதித்தல் செயல்முறை கிம்ச்சியை செரிமான நொதிகளுடன் ஏற்றும், இது உங்கள் உடல் நீங்கள் உண்ணும் உணவுகளை உடைக்க உதவுகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக ஒருங்கிணைக்க உதவும். கொரியர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியக் காரணம் அவர்கள் கிம்ச்சியை அதிகம் சேர்த்துக் கொள்வதுதான். மேலும் இது சார்ஸ் நோய் பரவாமலும் தடுக்க உதவும்.

செரிமோயா

எடையை குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பழம் இதுவாகும்.ஆப்பிள் , ஆரஞ்சு, மாதுளை போல இது புகழ்பெற்ற பழமாக இல்லாவிட்டாலும் அவற்றை விட அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட பழமாக இது இருக்கிறது. இந்த பழம் சாப்பிடும்போது அதன் கொட்டைகளை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் மிகக்குறைந்த அளவு நச்சுத்தன்மை உள்ளது.

பூச்சிகள்

மேற்கத்திய நாடுகளில் பூச்சிகளை சாப்பிட பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் அதிக நன்மைகளை வழங்கும் இது உலகின் விசித்திரமான உணவுகளில் முக்கியமானதாகும். இதனை சுவைக்காகவும், மருந்தாகவும் சாப்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதிக புரதம், குறைந்த கலோரிகள், குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும் இது உடலை வலுப்படுத்துவதுடன், எடையையும் வேகமாக குறைக்க உதவுகிறது.

நேட்டோ

ஜப்பானிய உணவுகளை பற்றி தெரியாதவர்கள் நேட்டோவை வித்தியசமாகத்தான் பார்ப்பார்கள். இது புளித்த சோயாபீன்ஸைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பொருளாகும். கடுமையான வாசனையைக் கொண்ட இதன் மேற்பரப்பில் சேறு போல ஒட்டிக்கொண்டிருக்கும் பொருட்கள் இதனை வித்தியாசமானதாகக் காட்டும். இதனை உங்கள் தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் நீங்கள் விரைவில் எடையை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜப்பானியர்களில் பலரும் எடையைக் குறைப்பதற்கு இந்த நேட்டோ டயட்டை பினபற்றுகின்றனர். இது ஒரு இயற்கை கொழுப்பு தடுப்பானாக செயல்படுகிறது.

கோல்ராபி

கோஹ்ராபி ஒருவித அன்னிய கலப்பின காய்கறி போல் தெரியலாம், ஆனால் எடையைக் குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு இது அளப்பரிய நன்மைகளை வழங்குகிறது. வித்தியாசமான சுவையைக் கொண்ட இதன் தனித்துவமான ஊட்டச்சத்துக்கள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உங்களுக்கு தேவையானதை வழங்கும். இதனை எப்படி சமைப்பது என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டால் சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

தேங்காய் எண்ணெய்

இந்த பொருள் உங்களுக்கு அவ்வளவு வித்தியாசமானதாக தோன்றாது. ஆனால் கொழுப்பை அடிப்படையாகக் கொண்ட தேங்காய் எண்ணெய் எப்படி கொழுப்பை குறைக்கும் என்பது வித்தியாசமானதாக தோன்றலாம். தேங்காய் எண்ணெயில் இருக்கும் தெர்மோஜெனிக் பண்புகளால் கொழுப்பை எரிக்க உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. நீங்கள் தேங்காய் எண்ணெயை சாப்பிடும்போது, உங்கள் உடல் பயன்படுத்தும் ஆற்றலின் அளவை அதிகரிக்கிறீர்கள், எனவே உங்கள் வாழ்க்கையில் வேறு எதையும் மாற்றாமல் கலோரிகளை எரிக்க முடியும்.

Related posts

இரும்புச்சத்து குறைவினால் பெண்களே அதிகம் பாதுக்கப்படுகின்றனர்.

nathan

குடல்வால் பிரச்சினை மற்றும் குடல் வீக்கத்தை கட்டுப்படுத்த!….

sangika

குழந்தைகளுக்கு அற்புத பலன்தரும் வசம்பு….!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஃபாஸ்ட் புட் உணவு உண்பதை ஏன் முற்றிலும் தவிர்க்க வேண்டும்?

nathan

பருவமடைந்த பெண்களுக்குரிய உணவுகள்

nathan

பெண்களைக் கருப்பை புற்றுநோய் அதிக அளவில் தாக்குகிறது. அறிகுறிகள் என்ன..?

nathan

வியர்வையை தடுக்கலாம்

nathan

அடிக்கடி டர்..புர்-ன்னு விடுறீங்களா? அதை குறைக்க என்ன செய்யலாம் என்பதையும் காணலாம்

nathan

எடையை வேகமாக குறைக்க உதவும் சமையலறைப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?

nathan