24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
tuijgyjiuydsfsa
ஆரோக்கியம் குறிப்புகள்

இத பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் செயற்கை கருவூட்டல் சிகிச்சையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்!

இந்தியாவில் செயற்கை முறையில் சோதனை குழாய் மூலம் கருத்தரிக்க ரூ.1லட்சம் முதல் ரூ.2லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகிறது.

செயற்கை முறை கருவூட்டலுக்கு ஆகும் செலவை எண்ணிப்பார்த்தவுடன் பெரும்பான்மையான குழந்தையில்லா தம்பதிகள் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். எனவே கருத்தரித்தல் சிகிச்சை முறையை சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் சொந்த பணத்திலிருந்து செலவு செய்வதை விட அந்த சிகிச்சைக்காகும் செலவை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும்.

இந்தியாவில் கருத்தரித்தல் சிகிச்சை முறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதிகரித்து வரும் சிகிச்சை தேவையை ஒப்பிட்டால் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம் என்பது தெரியவரும். மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவது இந்தியாவில் சுகாதார ஆரோக்கிய பிரச்சனை. தனிப்பட்ட பிரச்சனையாக மட்டுமல்லாது பொது சுகாதார பிரச்சனையாகவும் மாறியுள்ளது. குழந்தை இல்லாத தம்பதியரை சமூகத்தில் ஒதுக்கி வைக்கும் நிலை ஒருபுறம் இருந்தாலும், குழந்தையின்மை என்பது தம்பதியினருக்கு உணர்வு ரீதியான அழுத்தங்களையும் ஏற்படுத்தும். இது நிபுணர்கள் மற்றும் சுகாதார காப்பீட்டாளர்கள் ஆகிய அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.

இந்திய மக்கள் தொகையில் சுமார் 10 முதல் 14 சதவீதம் வரை மலட்டுத்தன்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். செயற்கை கருவூட்டலுக்கான இந்திய சங்கம் புள்ளிவிவர சதவிகிதத்தை கணக்கீட்டு வெளியிட்டுள்ளது. கிராமங்களை ஒப்பிடும் போது நகர்ப்புரங்களில் இந்த மலட்டுத்தன்மை விகிதம் அதிகமாக உள்ளது. நகர்ப்புறங்களில், 6 தம்பதிகளில் ஒரு தம்பதி இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ‘மெட் டெக்’ எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் கருவூட்டலுக்குரிய தகுதி கொண்ட வயதுடைய தம்பதிகளில் 27.5 மில்லியன் தம்பதிகள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வருகிற 2020ம் ஆண்டு இறுதிக்குள் இது மேலும் 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
tuijgyjiuydsfsa
கருத்தரித்தலுக்கான சிகிச்சை முறையில் இந்தியா நல்ல வளர்ச்சி கண்டிருந்தாலும், சோதனைக் குழாய் மூலம் கருத்தரித்தல் முறையை குழந்தையில்லா தம்பதிகளில் ஒரு சதவிகித்ததினரே செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தற்போதைய நவீன வாழ்க்கைமுறை, அதிகரித்து வரும் நகரமயமாக்கல், மனித உடலில் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்கள் (குறிப்பாக புரோலெக்டீன் அளவு உடலில் குறைவாகவோ அல்லது அதிகமாக சுரப்பது) மன அழுத்தம், வாகனங்களால் ஏற்படும் மாசு, குழந்தைப்பேறை தம்பதிகள் திட்டமிட்டு தள்ளிப்போடுவது போன்றவை மலட்டுத்தன்மைக்கு நம் நாட்டில் முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன.

வாழ்க்கை முறை நோய்களான உடல்பருமன், நீரழிவு போன்றவையும் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது. மேலும், பால்வினை நோய் தொற்றுகள், கருப்பையில் ஏற்படும் பாலிசிஸ்டிக் எனப்படும் கருமுட்டை வெளியாவதில் உள்ள குறைபாடு, கருப்பையில் ராய்டஸ் ஏற்படுகிறது. பிறப்புறுப்புகளில் காணப்படும் டி.பி எனும் நோய் போன்றவை பெண்களுக்கான மலட்டுத்தன்மையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் உருவாகும் பால்வினை நோய்கள் அவசர கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது. தவறான கருத்தரித்தல் மூலமாக உருவான கருவை அறுவை சிகிச்சை மூலம் கலைப்பது போன்றவை பிறப்புறுப்புகளில் நோய் தொற்றை அதிகரித்து மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கிறது.

இந்தியாவில் பெண்களுக்கு சராசரியாக 47வயதில் கருமுட்டை உற்பத்தியாவது நின்று விடுகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் 52 வயது வரை கருமுட்டை உற்பத்தியாகிறது. கருத்தரித்தல் தன்மையில் குறிப்பிட்ட சதவிகித வீழ்ச்சிக்கு சுற்றுப்பறச் சூழலில் காணப்படும் நச்சுப் பொருட்களும் காரணமாகிறன. மலட்டுத்தன்மை குறிப்பிட்ட ஒரு பாலினத்தவருக்கு மட்டுமே என்ற மூடநம்பிக்கை நிலவுகிறது. ஆனால் உண்மையிலேயே ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினத்தவரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு கருத்தரிக்க இயலாத நிலையில் உள்ளனர்.

ஆண்களில் 30 சதவிகிதத்தினர் மட்டுமே கருத்தரித்தலுக்கான தகுதியுடைய விந்தணுக்களை பெற்றுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பான்மையான தம்பதிகளுக்கு கருத்தரிக்காதற்கான குறைபாடுகளை கண்டறியும் சோதனை மேற்கொள்ளாமல் தவிர்க்கும் மனநிலையே உள்ளது. ஆனால் கருத்தரித்தல் மையத்தில் அதற்கான மருத்துவர்கள், உளவியாலர்கள் அளிக்கும் எளிய சிகிச்சை முறைகள், ஆலோசனைகள் போன்றவை மலட்டுத்தன்மையை போக்க வழிவகை செய்கிறது. உண்மையிலேயே தவிர்க்க முடியாத மலட்டுத்தன்மை குறைபாடுகளை தம்பதிகளே சோதனைக்குழாய் மூலம் கருத்தரித்தல், கருமுட்டையை மற்றொரு பெண்ணிடமிருந்து பெற்று தனது கருப்பைக்குள் பொருத்துதல் வாடகை தாய் மூலம் தனக்கான மகப்பேறுவை உருவாக்குதல் போன்றவை மூலம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

இப்பிரச்சனைக்கு தீர்வுகான ஆண், பெண் இருபாலரும் விழிப்புணர்வு அவசியம். மகப்பேறு மருத்துவதுறை விந்தணுக்களையும், கருமுட்டைகளையும் எதிர்கால தேவை மற்றும் பயன்பாடுகளுக்காக பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
கருத்தரித்தல் சிகிச்சை முறைகள் அதிக கடினமாகவும் மிகவும் பணச்சுமையாகவும், உடல்நலத்திற்கு ஆபத்தானகவும் பல தம்பதிகளுக்கு அச்சமூட்டுகிறது. இந்நிலையில் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் முன்வந்தால் அக்குறைபாடுடையவர்கள் கருத்தரித்தல் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள பேருதவியாக அமையும்.

சோதனைக் குழாய் மூலம் கருத்தரித்தல் சிகிச்சைக்கு ரூ.1லட்சம் முதல் 2.50லட்சம் வரை செலவாகிறது. இதனால் பெரும்பான்மையான தம்பதிகள் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள தயங்குகின்றனர். எனவே இதற்கான மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அவர்களின் பணச் செலவை மிகவும்; குறைக்கும். இக்கட்டான இந்த மருத்துவ சிகிச்சையை நிபுணர்கள் தங்களது மருத்துவ அறிவின் மூலம் உடல்ரீதியாகவும், மருத்துவரீதியாகவும் எந்தவித ஆபத்தையும் கடந்து செல்ல போதிய ஞானம் பெற்றுள்ளனர். ஆனால் மருத்துக்காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவமனைகளில் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டுமே மருத்துவ காப்பீட்டு திட்டங்களை வகுத்துள்ளன.

இதில் மகப்பேறுக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் காப்பீடு பெறலாம். ஆனால் கருத்தரித்தல் சிகிச்சை முறைகளுக்கு காப்பீடு பெறும் வசதி இல்லை. இதனால் பெரும்பாலன தம்பதிகள் கருத்தரித்தல் சிகிச்சை முறைகளை மேற்கொள்வதில்லை. எனவே மருத்து காப்பீடு திட்டங்கள் கருப்பையில் கணவனின் விந்தணுவை செயற்கையாக ஊசி மூலம் செலுத்துதல் சோதனைகுழாய் மூலம் கருத்தரித்தல். வெளிப்பகுதியில் (சோதனைக்குழாய்) கருவூட்டிய கருவை தாயின் கருப்பையில் பொருத்துதல் போன்ற சிகிச்சை முறைகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் காப்பீடு வழங்க வேண்டும்.; இது கருத்தரித்தல் சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் தம்பதிகளுக்கும், அதற்கான சிகிச்சைகளை செய்யும் மருத்துவ நிபுணர்களுக்கும் பேருதவியாக அமையும்.

Related posts

ஆரஞ்சு தோல் துவையல்

nathan

உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா?…

nathan

உங்களுக்கான அதிர்ச்சி எச்சரிக்கை! காது குடைய பென்சில், பேனா, பேப்பர், பட்ஸ் பயன்படுத்தறீங்களா?

nathan

திரவ டயட் உண்மையில் எடையை குறைக்க உதவுமா? தெரிந்துகொள்வோமா?

nathan

கம்பீரமாக வாழ கம்பு

nathan

உங்க குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! அளவுக்கு அதிகமான தூக்கம் ஆரோக்கியமற்றது: ஏன்?

nathan

குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போதே பூமியில் வாழ்வதற்கு எப்படி தயாராகிறார்கள் தெரியுமா?

nathan

வைத்திய குறிப்புகள்…!! ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள

nathan