டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.
* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.
* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.
1. பச்சை மிளகாயாக இருந்தாலும் சரி, காய்ந்த மிளகாயாக இருந்தாலும் சரி அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
2. காய்கறிகளை நன்கு சமைத்து சாப்பிடுவது மிகவும் தவறு. பல காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடலாம். சிலவற்றை மட்டும்தான் சமைத்து சாப்பிட வேண்டும்.
3. அல்சர் உள்ளவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிடலாம். உருக்கிய நெய்தான் உடலுக்கு நல்லது.
4. கெட்டியான நெய் உடலுக்கு கெடுதல், அது கொழுப்பை ஏற்படுத்தும்.
5. பசுமாட்டு நெய் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது உடல் எடையையும் கூட்டாது.
6. உடலுக்குள் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் யோகாவால் சரி செய்ய முடியும்.