ஆரோக்கியம் குறிப்புகள்

ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி!!

ஆண்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் 14-18 கிராம் அளவிலும்,

பெண்களுக்கு 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும்.8 கிராமுக்கு கீழே குறையும்போது ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது, ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது, நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்சிஜனை, ரத்தம் ஏற்று உற்சாகமும் பெறுகிறது.

பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை, கார்பன்டை ஆக்ஸைடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது.

பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது.நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை, ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவற்றை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
tyerty
ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி, ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை, 6:00 மணிக்கு போட்டு, இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.

காலையில், 6:00 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மதியம், 12:00 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை, 6:00 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை சாப்பிட்டு விட்டு, மீதியுள்ள நீரை குடியுங்கள்.

இதே மாதிரி, தினசரி ஒரு திராட்சை வீதம், ஒரு வேளைக்கு அதிகப்படுத்தி, ஒன்பது நாட்கள் வரை சாப்பிட வேண்டும். பின் ரத்தத்தை பரிசோதித்தால் மாற்றம் இருப்பதை அறியலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button