24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
dffhg
ஆரோக்கிய உணவு

மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!! உடலுக்கு ஆரோக்கியம் தரும்

முன்பெல்லாம் வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களுக்கு காபி டீ போன்றவைகளுக்கு பதிலாக மோர் கொடுப்பது தான் வழக்கம்.

மோரில் ஏராளமான ஊட்டசத்துக்கள் இருக்கின்றது. மோர் உடல் ஆரோக்கியதை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது.

அதுவும் மோரில் இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து குடித்தால், ருசியாகவும் நல்ல மணத்துடனும் இருக்கும். இத்தகைய மோரை அன்றாடம் ஒருமுறை குடித்தால், பல்வேறு நன்மைகள் கிடைத்து, உடல் ஃபிட்டாக இருக்கும்.

நீங்கள் அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டிருந்தால், காலையில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் வெளியேற்றப்படும். பின் மோர் வயிற்றைச் சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கும். மேலும் மோர் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் புளிப்பான ஏப்பத்தைத் தடுக்கும்.

மோரில் ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. ஆகவே மோரை தினமும் குடித்தால், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்
dffhg
மோரில் அத்தியாவசிய இதர பொருட்கள் மற்றும் இஞ்சி உள்ளது. இது அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்கும். மேலும், மோர் அதிகப்படியான அமில சுரப்பால் வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

உடல் வறட்சி மிகப்பெரிய பிரச்சனை. நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடல் வறட்சியால் அவஸ்தைப்படக்கூடும். இந்த உடல் வறட்சியை சரிசெய்ய சிறந்த வழி என்றால், அது மோர் குடிப்பது தான். மோரை ஒருவர் தினமும் குடித்தால், உடல் வறட்சி நீங்குவதோடு, உடலில் ஆற்றலும் அதிகரிக்கும்.

வயிற்றுப் போக்கால் கஷ்டப்படுபவர்கள், மோரில் இஞ்சி பொடி அல்லது நற்பதமான இஞ்சியை தட்டிப் போட்டு குடித்தால் குணமாகும். அதுவும் விரைவில் குணமாவதற்கு, ஒரு நாளைக்கு 3 முறை மோரைக் குடிக்க வேண்டும். இதனால் இரண்டே நாட்களில் வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமாகிவிடும்.

Related posts

சுவையான சில்லி நூடுல்ஸ் செய்வது எப்படி?

nathan

காளானை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

nathan

தேனை எதனுடன் சேர்த்து உட்கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா?

nathan

அல்சர் புண்கள் விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய பழங்கள்!

nathan

மருத்துவ பயன்கள் நிறைந்த அரைக்கீரை!!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!

nathan

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்

nathan

உப்புக்கு பதிலாக சுவைத் தரும் சில மூலிகைப் பொருட்கள்!!

nathan

உங்கள் கவனத்துக்கு காலை உணவை புறக்கணிப்பதால் உண்டாகும் ஆபத்து என்ன தெரியுமா?

nathan