31.1 C
Chennai
Saturday, May 17, 2025
dgdfg
அழகு குறிப்புகள்

குட்டி… குட்டி… டிப்ஸ்… இதோ…! அழகுக்கு அழகு சேர்க்க…

தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக்காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது.

இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.

நகத்தை பராமரிக்க :

பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். மேலும் பாதாம் எண்ணெயை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.
dgdfg
உதடுகளை பராமரிக்க :

நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். பீட்ரூட்டை வெட்டி உங்கள் உதடுகளில் லேசாக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும்.

முகத்தை பராமரிக்க :

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவி பாருங்கள் முகம் பளபளக்கும்.

பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.

கழுத்தை பராமரிக்க :

நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான். அழகாக முகத்தை பரமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.

சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயற்றம் மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி லேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பளபளக்கும்.

ஒரு ஸ்பூன் முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்சியளிக்கும்.

கருவளையம் நீங்க :

கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விதையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல(Pயளவந) ஆக்குங்கள்.

இந்த பேஸ்ட்டை கருவளையம் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையம் இருந்த இடம் காணாமல் போய்விடும்.

கருப்பு திட்டுகளை நீக்க :

சிலருக்கு முகம், மூக்கு, கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராமப்புறத்தில் ‘மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். இந்த முறையை நீங்கள் சில முறை கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு) மறைந்துவிடும்.

Related posts

காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ்!

sangika

மகத்துவமான மருதாணி:

nathan

கணவருக்கு பளார் விட்ட ஜெனிலியா! வைரல் வீடியோ

nathan

வயதான தோற்றத்தை உண்டாக்கும் அழகுக் கீரிம்கள்!…..

nathan

நடிகர் அப்பாஸ் இப்போது என்ன செய்கிறார்? லீக்கான புகைப்படம்

nathan

திடீரென கிளாமரை மறந்த ரம்யா பாண்டியன்..!

nathan

மென்மையான கைகள் வேண்டுமா

nathan

விலையுர்ந்த காரை விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பரிசளித்த கமல் ! நீங்களே பாருங்க.!

nathan

லதா ரஜினிகாந்த் செய்த காரியம்! மகளின் வாழ்க்கைக்கு இப்படி மாறிட்டாரே

nathan