குக்கரில் சமையல் செய்வதால் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் மருத்துவப் பயன்களும் கிடைக்காமல் போய்விடுகிறது.
# பொதுவாகவே காய்கறிகள் எளிதாக வெந்துவிடும். அவற்றை வேகவைக்க அதிக அழுத்தத்துடன்கூடிய குக்கர் தேவையில்லை.
# அரிசியில் ஸ்டார்ச் அதிகமாகக் காணப்படும். அதைக் குக்குரில் சமைக்கும்போது அதிலிருக்கும் ஸ்டார்ச் வெளியேறாமல் தங்கிவிடும். அந்த சாதத்தைச் சாப்பிடும்போது உடலில் கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகரிப்பதால் உடல்எடை அதிகரிக்கும்.
# உடல் எடை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற வாழ்வியல் சார்ந்த அனைத்து நோய்களும் உண்டாகலாம்.
குழந்தைகளுக்கு குக்கரில் சாதம் செய்து கொடுப்பதால் உடல் பருமன் ஏற்படக் கூடும். உடல் உழைப்பு இல்லாத குழந்தைகளுக்கு உடல் பருமனால் பல்வேறு உபாதைகள் ஏற்படும். ஆகவே குக்கரில் செய்த சாதத்தை குழந்தைகளுக்கு கொடுக்க முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
# ஒரு சில காய்கறிகளின் சத்துக்கள் நீரில் கரையக்கூடியவை. ஆக நாம் அதிக தண்ணீர் வைத்து காய்கறிகளை வேகவைக்கும் போது காய்கறிகளின் சத்துக்கள் அனைத்தும் வீணாகி வெறும் சக்கை மட்டுமே உண்ண வேண்டிய நிலை வரும்.
# எப்போதாவது அவசரத்துக்கு குக்கரில் ஒரு வெரைட்டி சாதமோ வீட்டில் நிகழும் நிகழ்ச்சிகளுக்குப் பிரியாணியோ சமைப்பதில் தவறில்லை. ஆனால், தினமும் குக்கரில் சமைப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டாம்.