* தைராய்டு குறைபாடு, தைராய்டு குறைவாக இருப்பின் எடை கூடும்.
* அதிகம் உண்பவர்களுக்கு எடை கூடிய படியே இருக்கும்.
* பலர் தாகம் எடுப்பதனை பசி என்று எண்ணி தண்ணீருக்குப் பதிலாக உணவு எடுத்துக் கொள்வர். இதனால் இவர்கள் அதிக எடை கூடி விடுவர். ஆக போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் எடை கூடுவதற்கு ஒரு காரணம் ஆகும்.
* என்னதான் அளவாக முறையாக சாப்பிட்டாலும் அதிக மனஉளைச்சல், மனச்சோர்வு, உடல் சோர்வு இவை இருந்தால் நாம் உணராமலேயே அதிக உணவினை அல்லது ஏதாவது நொறுக்குத் தீனியினை நாம் எடுத்துக் கொள்வோம். எனவே மன உளைச்சல், மனச்சோர்வு, உடல் சோர்வு இல்லாது நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.
* சிலருக்கு உணவில் உப்பு சற்று தூக்கலாக இருக்க வேண்டும். ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், இல்லாமல் சிலருக்கு உயிர் வாழவே முடிவதில்லை. உப்பு உடலில் நீர் தேக்கத்தினை ஏற்படுத்தி உடல் எடையினைக் கூட்டும்.
* கருத்தடை மாத்திரைகள் உடல் எடையினைக் கூட்டும் வாய்ப்புகள் அதிகம். மருத்துவ ஆலோசனைப்படியே கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* நன்கு உடற்பயிற்சி செய்து விட்டு சர்க்கரை, அதிக கொழுப்பு உணவுகளை உட்கொள்வது தவறு, புரத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அவசியமான சத்துகள் உணவில் இல்லாவிடில் எடை கூடும்.
* மிக அதிக உடற்பயிற்சியும் தவறே.
* தேவையான அளவு ஆழ்ந்த தூக்கம் இல்லாவிடில் எடை கூடும்.
* புரதம் குறைந்த உணவு எடையினைக் கூட்டும்.
* சிலர் உட்கார்ந்த இடத்தில் காலை முதல் மாலை வரை அசையாது உட்கார்ந்திருப்பர். இவர்களுக்கு எடை கூடிக் கொண்டே போகும்.
* வயது கூடும் பொழுது சற்று எடை கூடும். ஆக சில சாதாரண தவறுகளை சிறு முயற்சி எடுத்து திருத்திக் கொண்டாலே நாம் அளவான எடையோடு இருக்கலாம்.
* வெளிப்போக்கில் ரத்தம் இருக்கின்றதா?
* ரத்த சோகை ஏற்பட்டுள்ளதா?
* நடந்தால் அதிக மூச்சு வாங்குகின்றதா?
* வயிறு உப்பிசம், இறுக பிடித்த உணர்வு உள்ளதா?
* கடுமையான மலச் சிக்கல் உள்ளதா?
* வெளிபோக்கு சற்று வித்தியாசமாய் உள்ளதா? உடனடியாக உங்கள் குடல் பற்றி மருத்துவ பரிசோதனையை மருத்துவர் மூலம் பெற வேண்டும்.