1 தேநீரில் காபின் எனும் பொருள் உள்ளது. சில கோப்பை தேநீர் அருந்துவது உங்களை புத்துணர்வாகவும், புதிய ஆற்றலை பெற்றிருப்பது போலவும் உணர செய்யலாம்.
ஆனால் அவை இப்போது உங்கள் உறக்கத்திற்கு கேடு விளைவிப்பவையாக இருக்கும். எனவே நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவை படிப்படியாய் குறைத்து கொள்ளுங்கள்.
2. நீங்கள் காபி பிரியராக இருந்தால், இது உங்களுக்கு வருத்தமளிக்க கூடியது. காபியில் இருக்கும் காபின் உங்களது தாய்ப்பாலில் சேரும். இது உங்கள் குழந்தையின் சிறிய உடலால் செரிக்கவும் வெளியேற்றவும் முடியாததால், குழந்தையின் உடலிலேயே தங்கி விடும். இது ஓய்வில்லாமை, எரிச்சல் மற்றும் வாயு தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும். காபியின் அளவை குறைத்திடுங்கள், முடிந்தவரை காபியை தவிர்த்திடுங்கள்.
3 இது குழந்தையின் உடலில் பல அலர்ஜி மற்றும் உணர்திறன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் சாப்பிட்டவுடன் பரிசோதித்து பாருங்கள். குழந்தையிடம் மாற்றங்களை கண்டால் உடனடியாக தவிர்ப்பது நலம்.
4 ப்ரோக்கோலி உங்களுக்கு நன்மை பயக்க கூடிய ஒன்று தான். ஏதாவது ஒரு சமயத்தில், செரிக்க நேரம் எடுத்துக் கொண்டால் உங்களுக்கும் குழந்தைக்கும் வாயு தொல்லையை ஏற்படுத்தி விடும்.
5 செர்ரி பழங்களில் இயற்கையாகவே மெழுகு பொருள் இருக்கும். இது மலச்சிக்கலுடன் கூடிய வாயு தொல்லையை குழந்தைக்கு ஏற்படுத்தும்.
6 வேர்க்கடலை சில குழந்தைகளுக்கு உணர்திறன் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும். இருப்பினும் இதில் அதிக அளவில் புரதச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் பாதிக்கு பாதி வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையும் செயல்படுவது சிறந்தது.
7 தாய்ப்பாலை அதிகரிக்க மூலிகைகளும், கீரைகளும் உதவும் என்றாலும், மிளகுக்கீரையும் வோக்கோசுவும் (ஒரு வகை கொத்தமல்லி) அதில் சேராத ஒன்று. அவை தாய்ப்பால் சுரப்பை குறைகின்றன. குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.