31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அறுசுவைஇனிப்பு வகைகள்

தீபாவளி ஸ்பெஷல் பாதுஷா.! எளிய முறையில் பாதுஷா எப்படி செய்வது

அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு வகைகளில் பாதுஷாவும் ஒன்று. தீபாவளிக்கு உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் பாதுஷா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

மைதா – அரை கிலோ
சர்க்கரை – அரை கிலோ
உப்பு – தேவையான அளவு
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – மூன்று டீஸ்பூன்
டால்டா – 100 கிராம்
தேங்காய் – 1
பால் – ஒரு டீஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

மைதா மாவினை சலித்து எடுத்து ஒரு அகன்ற தட்டில் கொட்டி, அதில் தேவையான அளவு உப்பு, சமையல் சோடா, டால்டா, மூன்று டீஸ்பூன் நெய், பால், ரோஸ் எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்துக் கொ‌ள்ளவு‌ம்.

பிறகு அதை பெரிய எலுமிச்சைப்பழ அளவில் உருண்டையாக பிடித்து அதனை தட்டி, சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.

பிறகு, ஜீரா செய்ய ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்ந்ததும், சர்க்கரையைப் போட்டு பாகு பதம் வருவதற்கு முன்பே இறக்கி ஆற வைத்து‌க் கொ‌ள்ளவு‌ம். பொ‌ரி‌த்த பாதுஷா‌க்களை ஜீரா‌வி‌ல் போட்டு ஊற வைக்கவும்.

தே‌ங்கா‌யை மெ‌ல்‌லியதாகத் துரு‌வி அ‌தி‌ல் கேச‌ரி‌ப் பவுடரை‌க் கல‌ந்து பாதுஷா‌வி‌ன் ‌மீது தூவி அலங்கரித்தால் சூப்பரான பாதுஷா தயார்.!

Related posts

அதிரசம்

nathan

அதிரசம், முறுக்கு.. தேங்காய் பூ லட்டும், பளபள பாயசமும்.. ரெசிப்பி கார்னர்

nathan

வேர்க்கடலை உருண்டை

nathan

சாக்லேட் செய்வது எப்படி?

nathan

சாக்லேட் கேக்

nathan

சிக்கன் பிரியாணி செய்முறை..

nathan

கொத்து ரொட்டி srilanka recipe tamil

nathan

பொட்டுக்கடலை உருண்டை

nathan

ஒரிஜினல் சீன முட்டை ரோல்ஸ் / சைனீஸ் எக் ரோல்ஸ்

nathan