அறுசுவைஇலங்கை சமையல்

கொத்து ரொட்டி srilanka recipe tamil

1794711_860211117342196_1928689311315033144_nகொத்து ரொட்டி செய்யத் தேவையானவை

இறைச்சி கறி (கோழி, ஆடு அல்லது மாடு) – அரை கப்

முட்டை – 1

வீச்சு ரொட்டி அல்லது சாதாரண ரொட்டி – 2

லீக்ஸ் (பச்சை இலை) – கைப்பிடியளவு

கோவா – கைப்பிடியளவை விட கொஞ்சம் கூடுதலாக

சிறிய தக்காளி – 1

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 5

கறிவேப்பிலை – ஒரு இணுங்கு

(கையால் ரொட்டி அரிவது கஷ்டமென்றால் food processor இல் போட்டு அரியலாம். ஆனால் கவனமாக வெட்ட வேண்டும். கூட நேரம் விட்டால் தூளாக்கி விடும்.
10172791 757981670920137 8394931523480933280 n
● செய்முறை

ஒரு தவாவை (Non Stick Pan) அடுப்பில் வைத்து அது சூடாகியபின் ஒரு மேசைக் கரண்டி எண்ணை விடவும். எண்ணை சூடாகியபின் தக்காளி துண்டங்களை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
பின் கோவாவைப் போட்டு 2 -3 நிமிடங்கள் வதக்கவும்.
அதன் பின் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின் பச்சை மிளகாயை / லீக்சை கொட்டி 1 நிமிடம் வதக்கவும். தேவையான அளவு உப்பு தூள் தூவவும். பின் முட்டையை உடைத்து தாளித்த கலவைமேல் ஊற்றி பிரட்டவும். உடனடியாக ரொட்டித் துண்டங்களையும் இறைச்சிக் கறியையும் மாறி மாறி போட்டு பிரட்டி அதன்பின் தீயை மிதமாக்கி
3-4 நிமிடங்களுக்கு பிரட்டி இறக்கவும். இறக்கும் முன் முட்டை அவிந்து விட்டதா என பார்க்கவும். இல்லாவிட்டால் பச்சை முட்டை வாசனை வரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button