26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
fgfg
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா? சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறின் பலன்கள்..!

பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது.

புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது :-

கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும்.

குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
fgfg
காய்ச்சல் குணமாகும் :-

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும் :-

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அழகு சாதனப்பொருள் :-

குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

Related posts

நாம் நல்ல பழக்கம் என்று கடைப்பிடிக்கும் சிலவன உண்மையில் தீய பலனை தான் அளிக்கின்றன!!!வாரத்தில் ஒரு மு…

nathan

நீண்ட வாழ்வு தரும் உணவுப் பழக்கம்

nathan

குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடலாமா?

nathan

அஜீரணம், நெஞ்செரிச்சலை குணமாக்கும் மோர்

nathan

தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்…?

nathan

உங்களுக்கு தெரியுமா மாட்டுப்பாலை விட ஆட்டுப் பால் சிறந்தது

nathan

உங்க சாப்பாட்டில் உப்பைக் குறைக்க நினைக்கிறீங்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!!

nathan

உங்களுக்கு தெரியுமா வாழைப்பழ தோலை கொதிக்க வைத்த நீரை அருந்துவதால் இத்தனை நன்மைகளா?அப்ப இத படிங்க!

nathan

சுவையான இரும்புச்சத்து நிறைந்த ராஜ்மா சுண்டல்

nathan